எந்திரனை பற்றி நாளுக்கு நாள் பல புதிய தகவல்கள் வந்த வண்ணமுள்ளன. எல்லோரும் படம் எப்போது வரும் என காத்து கொண்டு இருக்கிறார்கள். பாடல்கள் எல்லாம் சூப்பர் கிட் ஆகி சாதனை படைத்து கொண்டு இருக்கின்றன. ரகுமானின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமை . கவியர்கள் வரிகள் எல்லாவற்றையும் அழகாக எழுதி உள்ளார்கள் . பாடகர்களும் அருமையாக பாடல்களை பாடி உள்ளனர் . இதோ எனக்கு பிடித்த புதிய மனிதா பாடல் .
மாற்றம் கொண்டு வா
மனிதனை மேன்மை செய்
உனது ஆற்றலால் உலகை மாற்று
எல்லா உயிருக்கும் நன்மையாயிரு
எந்த நிலையிலும் உண்மையாயிரு அருமையான வரிகள் . எல்லோரும் இந்த பாடலின் வரிகளை கேளுங்கள். வைரமுத்துவின் வைர வரிகள் அல்லவா ....
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: AR ரஹ்மான், SP பாலசுப்ரமணியம், கதிஜா ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
புதிய மனிதா பூமிக்கு வா
எஃகை வார்த்து சிலிகான் சேர்த்து
வயரூட்டி உயிரூட்டி
ஹார்ட்டிஸ்கில் நினைவூட்டி
அழியாத உடலோடு
வடியாத உயிரோடு
ஆறாம் அறிவை அறைத்து ஊற்றி
ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
மாற்றம் கொண்டு வா
மனிதனை மேன்மை செய்
உனது ஆற்றலால் உலகை மாற்று
எல்லா உயிருக்கும் நன்மையாயிரு
எந்த நிலையிலும் உண்மையாயிரு
எந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா
நான் கண்டது ஆறறிவு நீ கொண்டது பேரறிவு
நான் கற்றது ஆறு மொழி நீ பெற்றது நூறு மொழி
ஈரல் கனையம் துன்பமில்லை இதயக் கோளாறெதுமில்லை
தந்திர மனிதன் வாழ்வதில்லை எந்திரம் வீழ்வதில்லை
கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை
இதோ என் எந்திரன் இவன் அமரன்
இதோ என் எந்திரன் இவன் அமரன்
நான் இன்னொரு நான் முகனே
நீ என்பவன் என் மகனே
ஆம் உன் பெயர் எந்திரனே
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
நான் என்பது அறிவு மொழி
ஏன் என்பது எனது வழி
வான் போன்றது எனது வெளி
நான் நாளைய ஜான ஒலி
நீ கொண்டது உடல் வடிவம்
நான் கொண்டது பொருள் வடிவம்
நீ கண்டது ஒரு பிறவி
நான் காண்பது பல பிறவி
ரோபோ ரோபோ பன்மொழிகள் கற்றாலும்
என் தந்தை மொழி தமிழ் அல்லவா
ரோபோ ரோபோ பல கண்டம் வென்றாலும்
என் கர்த்தாவுக்கு அடிமை அல்லவா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
5 comments:
எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இதுவே!
“கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும். அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை! ”
அற்புதமான வரிகள். கவிஞர் வைரமுத்துவின் வார்த்தைகளும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலும் பாடலுக்கு இனிமையும், வளமையும் சேர்க்கின்றன.
ஸ்ரீ....
rajini rasigai ippavey arampichchacha...
athu sari.
எனக்கும் கொஞ்சோண்டு பிடித்திருக்கின்றது தோழர் பவி ...
நன்றி குமார் .
நானும் ஏதாவது ஒரு பதிவு போடாவிட்டால் நல்லக இருக்காது அல்லவா ???
நன்றி நியோ
கொஞ்சமாவது பிடித்திருக்கே . அதுவே போதும்.
Post a Comment