Monday, August 9, 2010

இன்று ஆடி அமாவாசை


இன்று இந்துக்கள் எல்லோரும் தமது தந்தையை இழந்த எல்லோரும் ஆடி அமாவாசை விரதம் இருப்பர். அப்பா இறந்தவர்கள் மட்டும் பிடிக்கும் விரதம் இது . மற்றவர்கள் பிடிக்க கூடாது .
ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம்  எனப்படுகிறது .

சூரியன், தெற்கு நோக்கி தன் பயணத்தைத் தொடங்கும் காலம் தட்சிணாயனம். இது ஆடி மாதத்தில் தொடங்குகிறது. ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் இருப்பார். சூரியனும், சந்திரனும் கடக ராசியில் சேரும் நாள் "ஆடி அமாவாசை' என்ற புனித நாளாகும்.

எல்லோரும் தத்தம் இடங்களில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடுவார்கள் .ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தருகின்றது.ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதிர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. மற்றவர்களுக்கும் உணவு பரிமாறி உண்ண வேண்டும் .

நாங்கள் பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீங்கி தோஷங்களில் இருந்து விடுபடலாம்  என்பது இந்துக்களின் நம்பிக்கை. இப்போது இலங்கை மக்கள் எல்லா இடங்களுக்கும் சென்று வரலாம் என்பதால் கீரிமலை நகுலேஸ்வரத்தில் தீர்த்தம் ஆடலாம்  அல்லது மாமாங்கப் பிள்ளையார் கோவில் அமிர்தகழியில் தீர்த்தம் ஆடலாம் . தீர்த்தமாடி பிதுர் கடனைச் செலுத்தலாம் . ஆடி அமாவாசையன்று ஆற்றங்கரைகளில் அமர்ந்து முன்னோர்கள், மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால் குடும்ப கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம்.

தந்தையை இழந்தவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து தோஷங்கள் , பீடைகளில் இருந்து விடுபடுங்கள் .












4 comments:

'பரிவை' சே.குமார் said...

Nalla Pakirvu.

Anonymous said...

ellorukkum payanulla thakaval.


mano

Pavi said...

நன்றி குமார் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Pavi said...

நன்றி மனோ