அழகாக ஒரு மணல்
வீடு ஒன்று கட்டினேன்
அதில் அழகான
ஜன்னல்கள்
அழகான கூரை
வீடு அழகாக
மணலில் அழகாக
கட்டி முடித்தேன்
அலைகள் வந்து
வந்து போயின
எனினும் எனது
மணல் வீடு
அப்படியே இருந்தது
அந்த மணல் வீடை
அழகாக ரசித்து கொண்டு
இருந்தேன் கொஞ்சநேரம்
நானும் என் நண்பியும்
இப்படி ஒரு வீட்டை
நாம் நமது உழைப்பில்
கட்டினால் எவ்வளவு
ஆனந்தமாக இருக்கும்
என யோசித்து கொண்டோம்
அலைகள் நேரம் செல்ல
செல்ல அதிகமாக
அடித்தது - எனது
மணல் வீட்டை வந்து
தொட்டு தொட்டு
சென்று கொண்டு
இருந்தது .
ஐயோ இன்னும் சிறிது
நேரத்தில் எனது
மணல் வீட்டை
அலை கொண்டு
போகப்போகிறதே என
யோசித்து கொண்டேன் .
நண்பி சொன்னாள்
அதோ பெரிய அலைகள்
வந்து கொண்டு இருக்கிறது
உனது மணல் வீட்டை
அடித்து செல்ல போகிறது
என்று நண்பி கூறிய
சில வினாடிகளில்
எனது மணல் வீடு
அலைகளால் அடித்து
செல்லப்பட்டது ஐயோ
கடவுளே ..............என்று எனது
மனதை நொந்து
கொண்டேன் - அலைகள்
அடித்து கொண்டு
செல்லும் என
தெரிந்தும் எனது
மனம் கேட்கவில்லை .
எல்லோரது எதிர்பார்ப்பும்
நிறைவேறுவதில்லை
சில எதிர்பார்ப்புகள்
நிறைவேறுகின்றன........
7 comments:
எங்கோ கேட்ட வரிகளாய் இருந்தாலும்... உங்களது எழுத்தில்.. யதார்தமான வரிகள்....
நல்ல இருக்குங்க...தொலைந்து விடும் என்று தெரிந்தும் தேடிப் பிடிப்பது போல...
நல்ல இருக்குங்க...
நன்றி பிரவின்குமார்
நன்றி வெறும்பய
நன்றி குமார்
Very nice............
Post a Comment