மண்ணாசை , பெண்ணாசை , பொன்னாசை என்று ஆசைகள் எல்லோருக்கும் இருக்கின்றன தானே . பார்த்தீர்களா ? மண், பொன் , பெண் .இதெல்லாம் இப்போது ??? என்று எண்ண தோன்றுகிறது தானே நம் எல்லோர் மத்தியிலும் . புரிகிறது . அதுதானப்பா நகைகளை வீட்டில் வைத்தால் திருடர்கள் கொள்ளை , கழுத்தில் போட்டால் தொல்லை . அப்போ என்னதான் செய்வது . பொன்னுக்கு ஆசை தான் . ஆசைப்பட்டு மோசம் போய் விட்டால் . திருடன் கத்தியால் குத்தி விட்டு நகைகளை அல்லவா திருடி கொண்டு செல்கிறான் . சரி அதுக்கு எனன?? கவரின் நகைகளை அணியுங்கள் . பார்க்க தங்கம் மாதிரி தான் இருக்கும் . கடைகளில் இப்போது அதிகம் விற்பனையாவது இவைதான் .
மணிகள் , சங்கிலிகள் , காப்புகள் , மாலைகள் என இப்போதைய இல மட்டங்கள் இவைகளை தான் விரும்பி அணிகிறார்கள் . தங்கத்தில் அணிவது குறைவு . எல்லாம் இந்த நாகரிக உலகத்தில் இதுக்குத்தான் கிராக்கி . உடைகளுக்கு ஏற்ற மாலைகள் , காப்புகள் , நெக்லஸ் என்று இப்போது இதுதான் பாஷன்.
பொருளாதார ரீதியிலும் தமிழர் தமது சேமிப்பை பொன் நகைகளாக மாற்றி வைத்தனர். நீண்ட காலமாக பொன் பணத்துக்கு ஈடாக இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. மகளிரைப் போல ஆடவரும் பொன் அணிகளால் தம்மை அலங்கரித்துக் கொண்டதனைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
எந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு எந்த மாதிரியான நகைகளையே அணிந்து செல்ல வேண்டும் என்றதொரு வரைமுறை உள்ளது. இந்த வரைமுறை மாறும்போது அல்லது மீறப்படும்போது அது பிறரை ரசிக்க வைப்பதற்கு மாறாக முகம் சுளிக்க வைக்கும். குறிப்பாக உடைகளுக்கு பொருந்தும் நகைகளையே அணிய வேண்டும். உதாரணமாக பட்டுபுடவை கட்டினால் அதற்கு பொருத்தமான நெக்லஸ், ஆரம், முத்துமாலை போன்றவற்றை அணியலாம்.
ஆண்கள், பெண்கள் என இருவருக்குமே நகைகள் மீது பிரியம் இருந்தாலும், பெண்களின் பிரியமே அதிகமாக இருக்கிறது. பெண்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்த, அவர்களுடைய உணர்வுகளில் கலந்த ஒன்றாக நகைகள் மாறிவிட்டன. அணிகலன்கள் நமக்கு ஒருவிதமான சந்தோஷத்தையும், அழகின்மேல் ஈர்ப்பையும் ஏற்படுத்துகின்றன
பெண்கள் எங்கு சென்றாலும், அது திருமண விழாவாக இருந்தாலும் அல்லது பார்ட்டியாக இருந்தாலும் அல்லது வேலை செய்யும் இடமாக இருந்தாலும் உடைகளோடு சேர்த்து நகைகளும் பிறரால் கவனிக்கபடுகின்றன. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த விதவிதமான நகைகளை அணிந்து பிறரைக் கவர்கின்றனர். சிலருக்கு பாரம்பரிய நகைகள் பிடிக்கும், சிலருக்கு பேஷன் நகைகள் பிடிக்கும்,
இந்த நேரத்திற்கு இந்த கலர் நகைகளை அணிந்தால் நன்றாக இருக்கும் என்ற நடைமுறைம் உண்டு. அப்படி பார்த்தால் பகல் நேரத்தில் சில்வர் கலர் நகைகளும், மாலை நேரத்துக்கு கோல்டு கலர் நகைகளும் ஏற்றவை. இன்றைய நவ நாகரிக உலகில் உங்களுக்கு பிடித்த ஆபரணங்களை அணிந்து அழகு பாருங்கள் . சிலருக்கு ஒன்றுமே பிடிக்காது . அவர்கள் மற்றவர்களின் அழகை ரசியுங்கள் .
4 comments:
மண்ணாசை , பெண்ணாசை , பொன்னாசை என்று ஆசைகள் எல்லோருக்கும் இருக்கின்றன இது மட்டும் உண்மை நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
இணைகிறேன் .
நன்றி
நன்றி சிவதர்சிகன்
சகோதரி நல்ல தேடல் ஆக்கம் ஒன்று. இப்ப வங்கியில் இடுவதை விட நகை செய்து வைப்பது நல்ல லாபம் போல் உள்ளது..... வாழ்த்துக்கள்.
Post a Comment