கைப்பைகள் பணம் வைக்க , முக்கிய ஆவணங்கள் வைக்க ,கல்லூரிகளுக்கு கொண்டு செல்வதற்கு, அலுவலகம் செல்வதற்கு, பார்ட்டிகளுக்குச் செல்வதற்கு, ஷாபிங் செல்வதற்கு , எங்கேயும் போகும் போது தேவையான மருந்து வகைகளை கொண்டு செல்ல என பல்வேறு தேவைகளுக்கு பயன்படுகின்றது . அழகுக்கும், அதேநேரம் பொருட்கள் வைத்துக் கொள்வதற்கும் பயன்படுத்த படுகிறது .
கடைகளில் பல கைப்பைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் . கைப்பைகளின் தரம் , விலை பார்த்து வாங்க வேண்டும் . உங்களுக்கு என்னவகையான கைப்பை பொருந்துமோ அதை தேர்வு செய்யுங்கள் . பார்ட்டிக்குச் செல்ல, அலுவலகம் செல்ல, பள்ளி மற்றும் கல்லூரிக்குக் கொண்டு செல்ல, ஷாப்பிங் செல்ல என பலவற்றுக்கும் கைபைகள் பயன்படுகின்றன..தேவைக்கேற்ற வடிவங்களில் இருக்கும் . நீங்கள் எந்த தேவைக்காக பயன்படுத்த போகிறீர்களோ அதற்க்கு ஏற்ற மாதிரி கைப்பைகளை தேர்ந்து எடுங்கள் .
நீங்கள் தெரிவு செய்யும் கைப்பைகள் பொதுவான நிறமுடையதா என பார்க்க வேண்டும். கைப்பைகளை வாங்கும்போது எப்போதும் கண்கவர் வண்ணங்களிலேயே தெரிவு செய்ய வேண்டும். கைப்பைக்குள் சிறிய சிறிய மடிப்புக்கள் உள்ளனவா என பார்க்க வேண்டும். கைப்பையின் வார்கள் பொதுவாக சிறிதாக இருத்தல் வேண்டும். கைப்பையை மூடும் இடம் எப்பொழுதும் சிப் உள்ளதாக இருக்க வேண்டும். கைப்பையை வாங்கும் போது நீளம் சிறியதாகவும் அகலம் சற்று பெரியதாகவும் இருக்க வேண்டும். எப்போதும் கையில் அணிந்து கொண்டு செல்லும் போது கையின் நடுப்பகுதியில் சரிசமமான அளவில் இருபக்கமும் கைப்பை தெரிய வேண்டும்.
விலங்குகளின் தோல், சில்க், சணல் போன்ற பல்வேறு துணிகளில் கைப்பைகள் தயாரிக்கபடுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் கைப்பைகளில் மணிகள், அலங்காரக்கல் போன்றவை வைத்து எம்ராய்டரி செய்யபடுகின்றன. மதிய உணவு, பைல், செல்போன், குடை, மேக்கப் பாக்ஸ் என எப்போதும் பை நிரம்பியே இருப்பதால், எளிதில் கிழியாத, உறுதியான கைபைகளை பயன்படுத்த வேண்டும். விரைவிலேயே அழுக்காகி விடுவதால் துவைத்து பயன்படுத்தும் வகையிலான கைபைகளை வாங்குவது நல்லது.
வயதுக்கேற்ற கைபைகளைத் தேர்ந்தெடுப்பதும் அவசியம். இளவயதினருக்கு எம்ராய்டரி செய்யபட்ட டிசைனர் கைபைகள் ஸ்டைலாக இருக்கும். 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தோலினால் வடிவமைக்கபட்டக் கைபைகள் பொருத்தமாக இருக்கும். உங்கள் காலணிக்கு ஏற்றவாறு பொருந்தக்கூடிய கைபைகளை வாங்கி பயன்படுத்தினால் அசத்தலாக இருக்கும்.
பெண்கள் தமது அழகில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை இப்போது . அவர்கள் தமது கைப்பைகளிலும் கவனம் செலுத்துகிறார்கள் . அழகான கைப்பைகளை வாங்கி அழகுடன் ஜொலித்திடுங்கள்.
2 comments:
kaippaikal alaku.
mano
நன்றி மனோ
Post a Comment