Tuesday, September 7, 2010

பெண்களின் அழகை கூட்டும் லிப்ஸ்டிக்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhY3TrT5ksWAXBix67LRaxSQ539XxEnvAILBC9szD-6xLrTdj6d9U-JKTNboOBI57KQSUDnjy2zOAT3nkP16Z0sigHCsR5Ugpq1qc5W6wp4Lb_6Jk-m7cSmTpSmmr0NKrvDscm_iaktR20/s320/istockphoto_1257286_lip_pencil.jpg
பெண்களின் அழகுக்கு இன்னும் அழகு சேர்ப்பது தான் லிப்ஸ்டிக் . பெண்கள் எல்லோரும் தாம் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள் . அதற்க்காக வெளி இடங்களுக்கு எங்கேயும் போவதாக இருந்தால் தம்மை அலங்கரிக்க நேரம் எடுத்து தம்மை அழகுபடுத்துவார்கள் .
http://tamil.webdunia.com/miscellaneous/woman/healthbeauty/0907/31/images/img1090731096_1_1.jpg
உதடுகளு‌க்கு கூடுத‌ல் அழகூ‌ட்ட நா‌ம் பய‌ன்படு‌த்து‌ம் ‌லி‌ப்‌ஸ்டி‌க்கை ச‌ரியாக உபயோ‌கி‌த்தா‌ல் முக‌த்‌தி‌ன் அழ‌கினை ‌லி‌ப்‌ஸ்டி‌க் ஒ‌ன்று ம‌ட்டுமே அ‌திக‌ப்படு‌த்‌தி‌விடு‌ம். உங்கள் சருமத்தின் நிறத்திற்கு ஏற்ற நிறத்தில் உள்ள லிப்‌ஸ்டிக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கறுப்பாக இருப்பவர்கள் வெளீர் நிறங்கள் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
http://cdn3.wn.com/o25/ar/i/fd/efafd4df62564a.jpg
நீங்கள் விரும்பியதைவிட வெளீர் நிறத்தில் உங்கள் லிப்‌ஸ்டிக் அமைந்துவிட்டால், சற்று கருமையான நிறத்தில் உள்ள லிப் பென்ஸிலால் உதடுகளில் நிறத்தைப் பூசி விட்டு அதன் பிறகு லிப்‌‌ஸ்டிக் தடவலாம். உதாரணத்திற்கு சிகப்பு நிற லிப்‌ஸ்டிக்குடன் பிரவுன் நிற லிப் பென்ஸில் பயன்படுத்தலாம். உதடுகள் அடிக்கடி வறண்டு போவதாக உணருபவர்கள் அதற்கான கிரீம், ஜெல்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். உங்களின் அழகாய் பாதிக்கும் . அதனால் உதடுகள் வறண்டு போகாமல் பார்த்து கொள்ளுங்கள் .
http://tamil.webdunia.com/miscellaneous/kidsworld/inspirationalarticles/1001/21/images/img1100121045_1_1.jpg
உதடுகள் உலர்ந்து போவதுதான் பலரது பிரச்சினையாக இருக்கிறது. போதிய ஊட்டச் சத்துக்கள் கிடைக்காததால் உதடுகள் வறண்டு போகும். காய்கறிகள், விட்டமின்  உணவுகளை சரியாகச் சேர்த்து வந்தால் இந்த பிரச்சினை தீர்ந்துவிடும். உதடுகள் உலராமல்  இருக்க முதலில் மாய்‌ஸ்சுரைஸரைத் பூசி அதன் பிறகு மேட் லிப்‌ஸ்டிக் தடவ வேண்டும்.
http://www.arusuvai.com/timages/lipsticks.jpg
முதலில் கவனிக்க வேடியது லிப் லைனர் மற்றும் லிப்ஸ்டிக் ஆகியவற்றைத்தான். லிப்ஸ்டிக் குச்சி உங்கள் உதடுகளுக்கு ஏற்ப குவிந்தோ, உருண்டை வடிவமாகவோ இருக்க வேண்டும். அது லிப்ஸ்டிக் பூச வசதியாகவும், சாயம் எல்லா இடங்களிலும் பரவ வசதி யாகவும் இருக்கும். ஆழமான மற்றும் அதிக அளவில் நிறத்தைப் பெற சிறந்தது மேட் லிப்‌ஸ்டிக். இதில் பளபளப்பு இருக்காது, அதே நேரத்தில் உதடுகளை உலர வைக்கும் தன்மை கொண்டது.
http://tamilulakam.co.uk/womens/upload/womens/Tu_749.jpg
கருஞ்சிவப்பு வண்ண லிப்‌ஸ்டிக் பொதுவாக எ‌ல்லோரு‌க்கு‌ம் ஒ‌த்து‌ப்போகு‌ம். பழைய உதட்டுச்சாயத்தைப் பயன்படுத்த வேண்டாம். நமது உதடுகளில் நிற மாற்ற‌த்தை ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம். விலை குறைந்த லிப்ஸ்டிகை பயன்படுத்துவதை தவிர்க்கவும் . அவற்றில் இரசாயன கலப்பு இருக்கலாம் . நீங்கள் நல்ல தரம் மிக்கதாகவும் , நீண்ட நாட்களுக்கு வைத்து பாவிக்க கூடியதாக உள்ளதா என பார்த்து வாங்குங்கள் .
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzSGcrm7xDO57Wzlqnj6KDa24awPTcgH9PtZ8fyjugXiAHmgn6SgmP3tbu02nwnY9la-99WDamQezIxeIkmCe5Tn3E2DW19TYRMkJWBd6ZNygbaVMj9djnvw6hoaWD7BXuOswK_sCM0NM/s320/Lips.jpg
நீங்களும் அழகு தேவதையாய் ஜொலிக்க உங்கள் முகத்துக்கும் , உடைக்கும் , உங்கள் உதட்டுக்கும் எது பொருத்தமாக உள்ளதோ அவற்றை தெரிவு செய்து பயன்படுத்துங்கள் . ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு முக அமைப்பு இருக்கும் . ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித வடிவாக இருப்பார்கள் . உங்கள் முகத்துக்கு எந்த நிறம் பொருத்தமாக உள்ளதோ அப்படி கவனித்து உதட்டுக்கு அளவான லிப்ஸ்டிக்கை பயன்படுத்துங்கள் .


















4 comments:

'பரிவை' சே.குமார் said...

Ladies Special... So, I Escape.

Anonymous said...

nalla thakaval pavi.


suba

Pavi said...

ஏன் நீங்களும் தெரிந்து வைத்திருக்கலாம் தானே .
நன்றி குமார்

Pavi said...

நன்றி சுபா