இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது . நான்காவது முறையாக இசைக்காக தேசிய விருது பெற்றுள்ளார் இளையராஜா. மலையாளத்தில் வெளியான பழசிராஜா படத்திற்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருது இளையராஜாவுக்குக் கிடைத்துள்ளது.
நல்ல இசைக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே தேசிய விருதைக் கருதுகிறேன் என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.நான் எப்போதுமே விருதை எதிர்பார்த்து வேலை செய்வதில்லை. எப்போதும் போலவே பணியாற்றுகிறேன். பழசிராஜா படத்துக்காக கூட நான் கடுமையாக வேலை செய்யவில்லை. கதையைக் கேட்டதும் 2 நாள் டைம் கொடுங்கள் என்று மட்டுமே கேட்டேன். அந்தப் படத்துக்கு என்ன இசை வேண்டுமோ அதை மட்டுமே கொடுத்தேன் என்று எப்போதுமே அவருக்கு உரித்தான தன்னடக்கத்துடன் கூறுகிறார் இளையராஜா .
படத்தில் சரத்குமாரும், மம்முட்டியும் சிறப்பாக நடித்திருந்தார்கள். மிகப் பொறுமையாக அதில் நடித்த நடிகர், நடிகைகளை இயக்குநர் நடிக்க வைத்திருந்தார். எனக்கு இப்போது கிடைத்திருக்கும் விருது, நல்ல இசைக்கு கிடைத்துள்ள விருதாகவே கருதுகிறேன். இதற்காக படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன் என்கிறார் இளையராஜா .
12 comments:
இசைக்கு வாழ்த்துக்கள்
இசையால் வசமாக இதயமெது.... பதிவுக்கு நன்றிகள்...
ராஜா... ராஜாதி ராஜன் இந்த ராஜா....
.....
நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் அவர் ராஜா..!
இசையின் ராஜாவுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி மகாராஜன்
நன்றி குமார்
எப்பவும் அவர் ராஜா..!
சீர்காழி------->இது நம்ம ஏரியா
http://sirkaliarea.blogspot.com/
www.sirkaliarea.blogspot.com/
ஆமாம் .
நன்றி சரவணன்
நன்றி மணிகண்டன்
இசை ராஜாவுக்கு வாழ்த்துக்கள் பதிவுக்கும் சேர்த்து.
வட இந்தியாவிலும் இங்கிலிஸ் இசையிலும் இயைந்திருந்த தென்னிந்திய மக்களை தமிழிசைக்கு மாற்றிய வல்லனுக்கு வாழ்த்துக்கள்
நன்றி ரமேஷ்
Post a Comment