Saturday, January 8, 2011

ஆஷஸ் கிண்ணம் வென்றது இங்கிலாந்து அணி அவுஸ்டேலிய அணி பரிதாபம்


அவுஸ்டேலிய மண்ணில் 24 ஆண்டுகளுக்குப் பின் ஆஷஸ் கிண்ணத்தை வென்று சாதனை படைத்து உள்ளது இங்கிலாந்து அணி . சிட்னியில் நடந்த இறுதி டெஸ்ட் போட்டியில் அவுஸ்டேலிய அணியை இன்னிங்ஸ் மற்றும் 83 ரன்கள் வித்தியாசத்தில் சுலபமாக வீழ்த்தி வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி . இதன் மூலம் டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி ஆஷஸ் கிண்ணத்தை மீண்டும் வென்றது.
http://livedunya.com/wp-content/uploads/2011/01/Australia-vs-England.jpg
இங்கிலாந்து அணி தமது முழு பலத்தையும் பிரயோகித்து வெற்றி பெற்றது . அணி வீரர்கள் ஒவ்வொருவரும் தமது பங்களிப்பை சரி வர நிறைவேற்றினர் . துடுப்பாட்டத்தில் அசத்தினர் துடுப்பாட்ட வீரர்கள் . பந்து வீச்சில் அசத்தினர் பந்து வீச்சாளர்கள் . களத்தடுப்பும் அபாரம் . மொத்தத்தில் இங்கிலாந்து அணி ஒரு சிறப்பான அணியாகவும் , கிண்ணத்தை கைப்பற்றக் கூடிய அத்தனை தகுதிகளையும் கொண்டு இருந்தது .

 இப்போது கிண்ணத்தையும் கைப்பற்றி உள்ளது . இதே உத்வேகத்தில் உலக கிண்ண போட்டிகளிலும் பங்கேற்பார்கள் ஆனால், உலக கிண்ண போட்டிகளிலும் இவர்களின் பிரகாசம் தொடரும் .
http://www2.pictures.zimbio.com/gi/Chris+Tremlett+Fifth+Test+Australia+v+England+AbA2YV38pVPl.jpg
அந்தோ பரிதாப நிலை அவுஸ்டேலிய அணிக்கு . துடுப்பாட்ட வீரர்களும் சொதப்புகின்றனர். பந்து வீச்சாளர்களும் சொதப்புகின்றனர் . இதனால், நிலை தடுமாறி நிற்கிறது அவுஸ்டேலிய அணி. தலைவரை மாற்றினால் என்ன , பந்து வீச்சாளர்களை மாற்றினால் என்ன பிரச்சனை பிரச்சனை தான் . எப்படி இருந்த அணி இப்படி ஆகி போச்சே என நினைக்க தோன்றுகிறது .
http://www4.pictures.zimbio.com/gi/James+Anderson+Third+Test+Australia+v+England+lcXbaEGvJmel.jpg
இதேவேளை இங்கிலாந்து அணியின் முன்னேற்றம் , அணி வீரர்களின் திறமை என்பனவற்றை பாராட்ட வேண்டும் உண்மையில் . குக் அசத்தலாக விளையாடி அணியின் வெற்றிக்கு துணை நின்றார் . இங்கிலாந்து அணியில் தூணாக நின்று ஓட்ட மழை பொழிந்து அசத்தினார் . 

இறுதி போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் , தொடர் நாயகன் விருதும் குக்குக்கு கிடைத்தது .  இறுதிப் போட்டியில் 189 ஓட்டங்களை  எடுத்தார். மேலும் இந்தத் தொடரில் மொத்தம் 3 சதங்களையும் விளாசி இங்கிலாந்து தொடரை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார்.
http://paimages.s3.amazonaws.com/categories/sport/480x385/9992803.jpg
நடந்த ஐந்து போட்டிகளையும் பார்த்தோமானால் , பிரிஸ்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி  முடிந்தது. அடிலெய்டில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ், 71 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் வென்றது. பெர்த் டெஸ்ட்டில் 267 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்டேலிய அணி  வெற்றி பெற்றது. மெல்பர்ன் டெஸ்ட்டில் ஒரு இன்னிங்ஸ் 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. சிட்னியில் நடைபெற்ற 5-வது, இறுதி டெஸ்ட்டில் இங்கிலாந்து மீண்டும் ஒரு இன்னிங்ஸ் 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
http://www1.pictures.zimbio.com/gi/Brad+Haddin+First+Test+Australia+v+England+Bh8vLiVF-Khl.jpg
இங்கிலாந்து அணியின் தலைவர்  ஸ்டிராஸ் கூறுகையில் நாங்கள் கிண்ணத்தை கைப்பற்ற வேண்டும் என்று வந்தோம், வென்றோம் என்றார் . இங்கிலாந்து அணிக்கு இங்கிலாந்து பிரதமரும் தமது வாழ்த்தினை தெரிவித்து உள்ளார் . இந்த தொடரில் ஆண்டர்சன் அதிகபட்சமாக 24 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து ரசிகர்கள் எல்லோரும் தமது அணியை வாழ்த்திய வண்ணம் உள்ளனர் .நானும் இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைத்து இருந்தேன் . இங்கிலாந்து அணிக்கு எனது பாராட்டுகளும் உரித்தாகட்டும் . 
சொந்த மண்ணில், ஆஷஸ் டெஸ்ட் தொடரை மோசமாக இழந்த அவுஸ்டேலிய அணி (107 புள்ளி), ஐ.சி.சி., டெஸ்ட் ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் இலங்கை அணி (109 புள்ளி) 3வது இடத்துக்கு முன்னேறியது. முதல் மூன்று இடங்களில் இந்தியா (128 புள்ளி), தென் ஆப்ரிக்கா (117 புள்ளி), இங்கிலாந்து (115 புள்ளி) அணிகள் இருக்கின்றன . முதல் இடத்தில் இருந்த அவுஸ்டேலிய அணியின் நிலைமை இப்படி ஆகி விட்டது . இனிவரும் காலங்களில் , போட்டிகளில் எப்படி விளையாடுகிறது அவுஸ்டேலிய அணி என்று பொறுத்திருந்து பாப்போம் . 

எப்போதும் ஒரு அணியால் வெற்றி பெற முடியாது . வெற்றியும் தோல்வியும் சகயம்.  தோல்விகளை கண்டால் தான் வெற்றியின் மகிமை தெரியும் . இதத்தான் சொல்லுறது ரொம்ப தலைக்கனம் பிடித்து ஆடப்படாது என்று . இன்று அந்த நிலைமை தான் அவுஸ்டேலிய அணிக்கு ..........







 

2 comments:

Anonymous said...

enkilaanthu anigin asaththal .
aus ani mannai kavviyathu .
vaalththukkal.


anu

'பரிவை' சே.குமார் said...

Correct... England anikku kidaththa migapperiya vetri ithu... Ponting pesum thimir thanamana pechchukku kidaiththa migapperiya adi ithu....