பத்துமாதம் சுமந்த தாயை வெறுக்கிறான்
சகோதரங்களை மறக்கிறான்
உறவுகளை மறக்கின்றான்
எல்லாம் அவனுக்கு தனது காதலி தான்
என்கிறான் - எல்லாம் அவளே அவளே
என்னுள் அவளே எனக்குள் அவளே
தந்தை சொல்லை தட்டுகிறாள்
தமயனை வில்லனாக பார்க்கிறாள்
எங்கோ இருந்து வந்தவன் தான்
தனக்கு எல்லாம் என்கிறாள்
அவன் எனக்காக பிறந்தவன்
என்னை கண்கலங்காமல்
பார்ப்பான் என்கிறாள்
துணிச்சலுடன் ......
காதல் என்னும் பெயரை
சொல்லி ஒருவரை ஒருவர்
ஏமாற்றாதீர்கள் - அதுதான்
இப்போது எல்லாம் சகயமாக
நடக்கின்றது இவ்வுலகில்
சில காதல் கல்யாணம்
வரை செல்கின்றது
சிலகாதல் பணம் , பொருள்
அந்தஸ்து பார்த்து வருகிறது
காதலிக்கிறார்கள் பின்பு
கல்யாணம் என்றதும் சீதனம்
எதிர்பார்க்கிறார்கள் அது காதலா
நட்பாக பழகி உயிருக்கு உயிராக
பழகி விட்டு சீதனத்துடன் வா
கல்யாணம் செய்கிறேன் என்கிறார்கள்
இது காதலா ? உண்மை காதலா ?
காதலர்கள் சிலர் நன்றாக வாழ்ந்து
காட்டுகிறார்கள் - சில காதலர்கள்
பிரிகிறார்கள் - சிலர் சந்தேகப்படுகிறார்கள்
காதல் கல்யாணம் செய்த எல்லோரிலும் சிலர்
சந்தோசமாகவும் இருக்கிறார்கள் -சிலர்
சந்தேகத்துடனும் இருக்கிறார்கள்,
பிரிந்தும் இருக்கிறார்கள்
விவாகரத்தும் செய்கிறார்கள்
அது ஏன் என்று தான் புரியவில்லை ?
காதலர்கள் வாழ வேண்டும்
வாழ்ந்துகாட்ட வேண்டும்
ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து
சந்தோசமாக வாழ வேண்டும்
காதலர் தினத்தை அர்த்தமுள்ளதாக
ஆக்க வேண்டும் - அதுதான்
நீங்கள் காதலர் தினத்துக்கு
கொடுக்கும் மதிப்பாக இருக்கும் .
1 comment:
mmmmmmmmm super
vino
Post a Comment