Friday, February 25, 2011

அணில்களை பாருங்களேன்

http://blogs.ft.com/westminster/files/2010/07/squirrel-jp.jpg

எல்லோருக்கும் ஒவ்வொரு பிராணிகளை , பறவைகளை பிடிக்கும் . ஒவ்வொருவரின் விருப்பங்களும்  வேறுபடும். கூடுதலான பேருக்கு அணில்களை ரொம்பவும் பிடிக்கும் . எனினும் நம்மவர்களிடையே கூடுதலாக திட்டு வாங்குபவையாகவும் இருப்பது இந்த அணில்கள் தான் . ஏனென்றால் நல்ல சிவந்த கொய்யாப் பழங்களை எல்லாம் இந்த அணில்கள் விட்டு வைக்காது . கோதிவிடும் . அணில் கோதிய பழங்களை உண்ணமாட்டார்கள் .

அணில்கள் வெளிர் சாம்பல் , வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும் . முதுகில் கூடுகள் விழுந்து காணப்படும் . மென்மையான , பஞ்சு போன்று அதன் உடம்பு இருக்கும் . அடர்த்தியான பஞ்சு போன்ற மென்மையான முடிகளுடன் வால் இருக்கும் . சிறிய கால்கள் எனினும் மரங்களில் ஏறி இறங்குவதட்க்கு ஏற்ப கூர்மையான நகங்கள் இருக்கும் . அணில்கள் கொறிக்கும் பாலூட்டி இனத்தை சேர்ந்தவை . 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTTVUt19Jv2OJIh711GpDO1Ku52r-NGOmBDk2tCKoECiDrNPOkmk4bM_7xoOpAKfzJKtG_sTjJwZKM9AjEM8eYcTZ2DwffOHz370sfKjicYYpOPYHp13-uQrJi6_abNalxWeS2Yxl0P7Ea/s1600/mr+squirrel.jpg
எதையும் விழாது அழுந்தப் பற்றிக் கொள்ளும்படி அதன் விரல் நகங்கள் கூர்மையா வளைஞ்சிருக்கும். அதோடு, தாவும் போது பேலன்ஸ் பண்ண ஏத்தபடி அதன் அடர்ந்த வால் அமைந்திருக்கும் . பாராசூட் மாதிரி இது அணிலுக்குப் பயன்படுகிறது. அணில்னு சொன்னதும், அதன் அழகான வால்தானே நமக்கு நினைவு வரும் . இது தன் கூட்டைக் கட்டியதும், குஞ்சுகளுக்கு மெத்மெத்தென்று கதகதப்பாக இருக்க, அழகான வாலில் இருந்து முடிகளை வாயால் கடித்து எடுத்துப் போட்டுத் தயார் பண்ணும். இது அணில்களின் சிறப்பம்சம் . 
http://img.metro.co.uk/i/pix/2008/05/SquirrelMasons_450x537.jpg
உலகெங்கிலும் 250வகையான அணில்கள் உள்ளன. ஆஸ்திரேலியாஅண்டார்டிகா பகுதிகளில் இவை காணப்படுவதில்லைமர அணில் ,தரை அணில்பறக்கும் அணில் போன்றவை நாம் அன்றாடம் பார்க்கும் வகைகளில் சில40 மில்லியன்ஆண்டுகளுக்கு முன்பே இவை வாழ்ந்துள்ளன படிமங்கள் கிடைத்துள்ளன.இப்படிமங்கள் தற்போது வாழ்ந்து வரும் பறக்கும் அணிலை போல் தோற்றம் கொண்டதாக உள்ளது. ஆப்ரிக்க பிக்மி அணில்கள் உருவில் மிகச் சிறியவை.இவை 7--10 செ.மீ நீளமும், 10 கிராம் எடையும் கொண்டவைநீர் நாய் வகை அணில்கள் 5--8 கிலோ எடையும், 50--70 செ.மீ நீளமும் கொண்டதாக உள்ளன.அணில்களின் உடல் மிக மிருதுவாகவும்அடர்த்தியான வாலும் ,பெரிய உருண்டைக் கண்களும் கொண்டவைஇவ்வமைப்பே பிற கொரிக்கும் இன வகைகளிலிருந்து பிரித்துக் காட்டுகிறது.
http://www.insnews.co.uk/animals/large/INS_08.jpg
பிறந்த உடனே குட்டிகள் அழகாக இருக்காது, காதுகள் மடிஞ்சு, கண்கள் மூடியபடி பார்க்கவே அசிங்கமாய் இருக்கும். ஒன்றரை மாதமான பிறகுதான் குட்டி அணில் மாதிரி ஆகும். அம்மாதான் எல்லாவற்றையும் கவனித்துப் பண்ணும்.இதன் வாயின் முன்பக்கத்தில் மேலும் கீழுமாக  இரண்டிரண்டு உளிப்பற்கள் இருக்கும். இவை தினமும் வளரும். அதனால் கடின ஓடுகள், மரக் கிளைகள் இவைகளை எலிகளைப் போலவே துருவும். எதுவும் கிடைக்கவில்லை என்றால்  மேலும் கீழுமா தாங்களே பற்களை அரைத்துக் கரைத்துக் கொள்ளும். இப்படிப் பண்ணவில்லையாயின் உளிப்பற்கள், நீளமா வளர்ந்து எதுவும் சாப்பிட முடியாமல் இவை இறந்து விடும்.
http://broke207.files.wordpress.com/2010/04/squirrel-in-sweater.jpg
கொய்யாப் பழங்கள் என்றால் அணில்களுக்கு ரொம்பவும் பிடிக்கும் . அதுவும் சிவந்த அழகிய பழங்கள் என்றால் அவ்வளவு தான் . விட்டு வைக்காது . மரத்தில் கிடக்கும் போது அவற்றை கொறித்து விடும் . அணில் மரங்களிலும், வீடுகளில் மறைவான இடங்களில் கூடு கட்டியும் வசிக்கும். தேங்காய் நார், பஞ்சு முதலியவைகளைக் கொண்டு கூடுகட்டும். அணில் பெரும்பாலும் விதைகள், கொட்டைகள், பழங்கள் முதலியவற்றையே உணவாக 

உட்கொள்ளும்.அணில்கள் குட்டி போட்டு தங்கள் இனத்தைப் பெருக்குகின்றன. அணில்கள் தங்களுக்கு ஆபத்து வரும் போது பயங்கரமாக ஒலியெழுப்பி எதிரியின் கவனத்தைத் திசை திருப்பும் வல்லமை கொண்டவை . 
http://www.weltpolizei.org/wp-content/uploads/2009/06/baby-squirrel.jpg

சூழ்நிலைக்கும்பருவ கால மாறுதலுக்கும் உட்பட்டுஇவற்றின் நிற அமைப்பு மாறுபடும்இவைகளின் உடலில் உள்ள அனைத்து பாகங்களும்வாழ்வியலுக்குத் தக்க வாறு உறுதுணையாக உள்ளனமுன்னங்கால்கள்,பின்னங்கால்களை விட குட்டையாக இருக்கும். இப்போதைய சின்ன பிள்ளைகளுக்கு அணில் என்றால் என்னவென்று தெரியாது . நகர் புறங்களில் கூடுதலாக வசிக்கும் பிள்ளைகளுக்கு தெரியாது . அவர்களை மிருக காட்சி சாலைக்கு கொண்டு சென்றுதான் காட்ட வேண்டும் . அணில்களை பார்க்க நல்ல சின்னனாகவும் , பார்க்க ஆசையாகவும் இருக்கும் . குட்டி முகம் . எப்போதும் சின்ன பிள்ளைகள் போன்று தோற்றமளிக்கும் .
















5 comments:

r.v.saravanan said...

me first

r.v.saravanan said...

anil photo super

குறையொன்றுமில்லை. said...

அணில்கள்பற்றி இவ்வளவு விரிவான அலசலா. நல்லா இருக்கு.

Pavi said...

நன்றி சரவணன்

Pavi said...

நன்றி லக்ஷ்மி அம்மா