Tuesday, March 8, 2011

பெண்ணே நீ இல்லாமல்

http://completewellbeing.com/static/img/articles/2008/06/dressing-for-working-women.jpg

பெண்ணே நீ இல்லாமல் 
இந்த அகிலமில்லை 
இந்த உலகில் எவருமில்லை 
பெண்ணே நீ இவ்வுலகில் 
படும் துன்பங்களோ ஏராளம் 
எனினும் , நீ பல துன்பங்களை 
இந்த பூவுலகில் அனுபவிக்கின்றாய் 

நீ தாயாகவும், பிள்ளையாகவும் 
குடும்ப தலைவியாகவும் என 
பல பதவிகளை வகிக்கிறாய் 
உனக்கு ஓய்வு என்பதே இல்லை 
http://www.instablogsimages.com/images/2007/08/02/working-women-in-china_50.jpg
உனக்கு விடிவு கிடைப்பது எப்போது 
உனக்கு ஓய்வு கிடைப்பது எப்போது 
உனக்கென்று ஒரு நல்ல காலம் 
பிறக்காதா பெண்ணே 

விண்வெளியில் வீராங்கனை ஆனாய் 
விமானம் ஓட்டினாய்
ஜனாதிபதி ஆகினாய் 
பிரதமர் ஆனாய் 
இராஜதந்திரி  ஆனாய் 
இவ்வாறு பல பதவிகளை 
நீ இவ்வுலகில் வகிக்கின்றாய் 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7kC7PwGokGjWU7hwTguMGk7dpno2WBRxWyX5Cy0sx2XWB7Yh808TFY-2AAdi-Di7oCYRjfUVEUA06le-2Rl64tC9MQNSI2OHb_IFdc_kP_XlW2shvJUm0Gox2nhYkkvsap9VNdyVhBNLe/s1600/cambodia+women.jpg
பெண்கள் நாட்டின் கண்கள் 
என்றார்கள் ஆனால் 
இன்று பல பிரச்சனைகளுக்கு 
முகம் கொடுப்பவர்கள் 
பெண்களாகத்தானே இருக்கிறார்கள் 

என்ன கொடுமை இது 
பெண்களுக்கு விடிவு எப்போது 
 சுதந்திரம் இந்த பெண்களுக்கு
 கிடைப்பது எந்தநாள் 
அந்த நாளுக்காக தான் 
பெண்கள் ஏங்குகிறார்கள் 
காத்து  இருக்கிறார்கள் ???
 

6 comments:

சக்தி கல்வி மையம் said...

மகளிர் தினம் வாழ்த்துக்கள் கூறுவோம்..
பெண்மையை போற்றுவோம்...

Pavi said...

நன்றி கருன் உங்கள் வாழ்த்துக்கு
பெண்மையை போற்றுவோம்
தாய்மையை மதிப்போம்

r.v.saravanan said...

மகளிர் தின வாழ்த்துக்கள் பெண்மையை போற்றுவோம்.

குறையொன்றுமில்லை. said...

மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.பெண்
மையைப்போற்றுவோம்.

Pavi said...

நன்றி சரவணன்

Pavi said...

நன்றி லக்ஷ்மி அம்மா