உழை. உழை. உழை. உழை. உழைக்காமல் இருப்பதுதான் இவ்வுலகில் நீ செய்யும் பிழை. அதுவும் சந்திரன், சூரியன், பாராது உழை, உன் உழைப்பை நம்பியே உயிர்வாழ்!
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு
உலகை ரசி! புத்தகத்தைப் புசி! கன்னியரை மதி! நல்லவர்களை துதி! வீதி வீதியாய்த் திரிவதுதான் என் தலைவிதி என்று நினைக்காதே. அது பிரம்மனின் சதி! அதை வெல்ல வந்த மருந்துதான் மதி
தோல்வியை கண்டு துவளாதே . வெற்றியை கண்டு பெருமிதம் அடையாதே
ஏழைகளுக்கு உதவி செய்! ஆனால் கோழைகளுக்கு உதவி செய்யாதே!! ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண். அதனால் உனக்குள் ஏற்படும் சிரிப்பில் உன்னைக் காண். உலகைக் காண்.
உதவி செய் . மற்றவர்களுக்கு உபத்திரம் செய்யாதே
மற்றவர்களை கேலி செய்யாதே , ஏனெனில் , உன்னை ஒருவன் கேலி செய்ய இவ்வுலகில் ஒருவன் இருப்பான் .
செதுக்காமல் சிற்பம் இல்லை! அணைக்காமல் கர்ப்பம் இல்லை! உழைக்காமல் உயர்வு இல்லை! அதுபோல் சிந்திக்காத நோக்க மில்லை, செயல்படாத வெற்றியில்லை, உழைக்காதவனுக்கு இந்த உலகம் சொந்தமானதாக சரித்திரம் இல்லை
மது வேண்டாம் , மாது பல வேண்டாம் , சிகரட் வேண்டாம் . ஒருவனுக்கு ஒருத்தி போதும் .
ரதியை ரசிக்க நினை; ஆனால் ருசிக்க நினைக்காதே. காதலித்துக் கல்லறை செல்லாதே! கற்பழித்துச் சிறையறை செல்லாதே! உருப்படாமல் திரியும் வீணர்களுடன் உறவு கொள்ளாதே
காதலித்தவளை கைப்பிடி , அவளை விட்டு விட்டு இன்னொரித்தியை ஏமாற்றாதே .
9 comments:
ஆ.. அட்வைசா?
super...........
nalla vidayankal
mano
ரைம்ஸ் மாதிரி இருந்தாலும் நல்ல கருத்துக்கள்தானே. நன்றாக இருக்கிறது.
எரியும் விளக்காயினும் தூண்டுகோல் தேவை என்ற பழபோழிக்கேற்ப அவ்வப்போது நம்பிக்கை விதைகளை விதைப்பதற்கு வாழ்த்துக்கள் .
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நன்றி கருன்
நன்றி மணிகண்டன் உங்கள் வரவுக்கு
நன்றி மனோ
நன்றி பாலா
நன்றி ராஜபாண்டியன் உங்கள் கருத்துக்கும், வரவுக்கும்
Post a Comment