நேரம் பொன்னானது என்று நமக்கு தெரியும் . என்றாலும் நாம் அதை சரியாக பயன்படுத்துவதில்லை . ஒவ்வொரு செக்கன் , நிமிடம் போன்றவற்றின் அருமை பற்றி ஒரு ஓட்ட வீரரிடம் , பரீட்சை எழுதுபவரிடம் நாம் கேட்டால் அவர்களுக்கு தெரியும் நேரத்தின் அருமை . நாம் நமது நேரத்தை திரைப்படங்கள் பார்ப்பதிலும் , நாடகங்கள் பார்ப்பதிலும் செலவிடுகின்றோம் .
உலகில் எவ்வளவோ விடயங்கள் நடக்கின்றன . ஜப்பான்காரன், சீனாக்காரன் கொஞ்ச நேரம் கிடைத்தால் எப்படி ரோபோ செய்யல்லாம் , இந்த காரை எப்படி இன்னும் மெருகேற்றலாம் என்று பலவிதமாக சிந்திக்கின்றான் . ஆனால் நாம் கொட்டாவி விட்டு கொண்டு இருக்கிறோம் . தொழில் நுட்பங்களை அனுபவிக்கின்றோம் . ஆனால் கண்டுபிடிப்புகள் எல்லாம் நமக்கு ஒத்துவராது என்று ஒதுங்கி விடுகிறோம் .
ஏன் எம்மால் முடியாது . ஒவ்வொரு நொடிப்பொழுதையும் சிந்தித்து செயல்படுத்துங்கள் . காற்றில் கரையும் கற்பூரமாய் நேரம் போய் கொண்டு இருக்கின்றன . வருடங்கள் உருண்டோடிக்கொண்டு இருக்கின்றன . ஒரு மனிதனின் ஆயுளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் கழிந்துவிடுகிறது. பத்தில் ஒரு பங்கு உண்பதிலும், மற்றொரு பங்கு கழிவறையிலும் கழிந்து விடுகிறது. இன்னொரு பங்கு நேரம் உறவினர் மற்றும் நண்பர்களிடம் அரட்டை அடிப்பதிலும் பொழுது போக்குவதிலும் காணாமல் போகிறது. இப்படியே வயது போய் முதிய பருவத்தை அடைகின்றோம் .
இழந்த பணத்தை இரட்டிப்பாகச் சாம்பாதிக்கலாம். ஆனால் இழந்த காலத்தை ஒருபோதும் திரும்பச் சாம்பாதிக்க முடியாது. ஒரு மணி நேரம் முந்திக்கொண்டு வந்திருந்தால் இந்த உயிரை நான் காப்பாற்றியிருப்பேன் என்று விபத்து நடந்த இடத்தில் ஒருவரை நாம் வைத்தியரிடம் கொண்டு போய் சேர்த்தோமானால் அவர் சொல்லும்போது அந்த நேரத்த்தின் அருமை எமக்கு புரியும் . ஐயோ இந்த உயிரை காப்பாற்றி இருக்கலாமே என்று நாம் யோசித்திருப்போம் .
ம்ம்ம்ம்ம்ம் நேரம் பொன்னானது தானே .
5 comments:
Time is gold and precious.
நாம ஒண்ணுமே கண்டுபிடிக்கலயா?
இட்லி, தோசை , வடை அதிலும் போண்டா?!!
நன்றி ராஜேஸ்வரி அம்மா அவர்களே
சாப்பாடு என்றால் நமக்கெல்லாம் அத்துப்படி தானே .
நாம் முன்னுரிமை கொடுப்பது சாப்பாட்டுக்குத்தான் .
நேரம் தவறாம சாப்பிடிருவம் .
நன்றி ஷர்புதீன்
பகிர்வுக்கு நன்றி..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)
Post a Comment