ஆனால் சில ஆண்கள் இங்கு படித்து மேற்படிப்பை வெளிநாடுகளில் முடித்து பட்டம் பெற்றவர்களும் உள்ளனர் . அங்கு இஞ்சினியராக , டாக்டர் ஆக , சட்டத்தரணியாக நல்ல நிலையில் வேலை செய்வர் . சிலர் கஷ்டத்தின் மத்தியில் வெளிநாடு போய் அங்கு படித்தவர்களும் உள்ளனர் . சிலர் படிக்க முடியாத சூழ்நிலை அமைந்தமையால் வேலை செய்து கொண்டு இருப்பவர்களும் உள்ளனர் . உழைக்கத்தொடங்கி விடுவார் .
எனினும் சிலர் வேலை கிடைக்காது இங்கு படித்து பல்கலைகழகத்தில் பட்டம் பெற்று இருப்பார் . ஆனால் அவர் வெளிநாடு சென்று இறைச்சி வெட்டுதல் , வீடு துடைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள் . எப்பிடியாவது கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் . சம்பாதிக்க வேண்டும் . நமக்கு ஏற்ற வேலை கிடைக்கும் வரைக்கும் காத்து இருக்க முடியாது . கிடைத்த வேலையை செய்வோம் என்று நினைத்து தமது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உழைக்கிறார்கள் .
ஆனால் சிலர் இங்கு அப்பாவி பிள்ளையாக இருந்திருப்பான் . வெளிநாடு போனதும் தகாத நண்பர்களுடன் சேர்ந்து அவன் பெரிய ரவுடி கும்பல்களுடன் சேர்ந்து களவெடுத்தல் , வீடு புகுந்து கொள்ளை அடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகிறான் . அவன் தனது எதிர்காலம் பற்றி சிந்திப்பதில்லை . தாய், தந்தையர் மகன் பணம் அனுப்புவான் என்று பார்த்து காத்து இருப்பார்கள் . மகனை பற்றி யாரும் சொல்லி அவனின் நிலை பற்றி அவர்கள் தெரிந்து கொண்டால் அவர்கள் தூக்கம் இன்றி , உணவின்றி அழுது மாய்கிறார்கள் .
சிலர் குடிபானங்களுக்கு அடிமையாகி கஷ்டப்பட்டு உழைக்கும் பணம் எல்லாம் நண்பர்களுடன் சேர்ந்து குடித்து அழித்து கொள்கிறான் . தமது பெற்றோர்கள் பற்றி சிந்திப்பதில்லை . கடன் வாங்கினால் கொடுப்பதில்லை . இப்படி வெளிநாடு போன எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை . ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி .
அதிலும் பெற்றோர்களுடன் இருந்து வளரும் பிள்ளைகள் சிலர் நல்ல ஒழுக்கத்துடன் இருக்கிறார்கள் . சில ஆண்கள் இரண்டு நேரம் வேலை செய்து கஷ்டப்பட்டு இரவு, பகல் பாராது மாடாய் உலப்பவர்களும் உள்ளனர் . இவரைத்தான் இப்போதெல்லாம் நம்ம முடிகிறது இந்த உலகில் .
ஒருவருக்கு திருமணம் பேசும் போது அவரை பற்றி தீர விசாரித்து தான் அவருக்கு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்கிறார்கள் . சிலர் அங்குள்ள ஆண்களை பற்றி விசாரிப்பதில்லை . மாப்பிள்ளை வெளிநாடு என்றவுடன் கல்யாணம் செய்து கொடுக்கிறார்கள் . பின்பு விசாரித்து பார்த்தால் அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருக்கும் .
மாப்பிள்ளை எந்த நாட்டில் இருக்கிறார் என்று விசாரித்து உங்களின் உறவினர்களை அவரை பற்றி விசாரித்து அந்த நாட்டில் உங்கள் உறவினர்கள் யார் இருக்கிறார்களோ அவர்களை தான் விசாரிக்க வேண்டும் . அவரை பார்த்து , பேசி அவரின் நிலைமைகளை அறிந்து கொள்ள வேண்டும் . எத்தனையோ பெண்கள் திருமணம் செய்து விட்டு காத்து இருக்கிறார்கள் தாம் எப்போது வெளிநாடு செல்வோம் என்று . ஆனால் அவர் கல்யாணம் வந்து செய்து விட்டு போன போக்குத்தான் தொலைபேசி கூட கதைப்பதில்லை . சிலர் தொலைபேசி எடுத்து கதைத்து கொள்வார்கள் . எல்லாம் கொடுத்துவிட்டேன் விசாவுக்கு என்று சும்மா சொல்லி காலத்தை இழுத்து அடித்துக் கொண்டு இருப்பார்கள் .
சில ஆண்களுக்கு அங்கு விசா , காட் என்பன கிடைத்து இருக்காது . கஷ்டப்பட்டு உழைத்து பணம் சேர்த்து வைத்து இருப்பார்கள் . அவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் . வயதும் போய் விடும் . நாப்பது வயதில் தான் காட் கிடைக்கும் . அதுக்குப் பின்பு தான் கல்யாணம் . தமது நாட்டுக்கு வந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து ஒரு வருடத்துக்குள் அவர்களை எடுத்து சந்தோசமாக வாழ்வார்கள் .
எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை . யாரையும் இந்த உலகில் நம்ப முடியவில்லை . இதில் ஆண்கள் மட்டும் அல்ல . பெண்களையும் சேர்த்து தான் . பெண்களையும் இப்போது நம்ப முடியாது . ஆண்கள் அதிகம் . அதனால் தான் ஆண்களை பற்றி குறிப்பிட்டு இருந்தேன் . இப்போதைய நாட்டு நடப்பு இப்படித்தான் . அதனை தான் என் இந்த பதிவில் இட்டு உள்ளேன் .
இப்படியான சம்பவங்கள் நிறைய இடம்பெறுகின்றன . வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் . கருத்துக்கள் வரவேட்க்கப்படுகின்றன .
12 comments:
///வெளிநாடு போனதும் தகாத நண்பர்களுடன் சேர்ந்து அவன் பெரிய ரவுடி கும்பல்களுடன் சேர்ந்து களவெடுத்தல் , வீடு புகுந்து கொள்ளை அடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகிறான் .///
நம்மவர்களை தாங்கள் பார்க்கும் கோணம் வேறு ... இதுவரை நாங்கள் அதுபோல யாரையும் கண்டதில்லை ....
எனக்குத் தெரிந்து நீங்கள் சொல்வது போல் களவு... வரைக்கும் போவதாக தெரிவதில்லை... இங்கு குடிக்கும் மதுபான விடுதிகளில் நடன மாதுகளுக்கு பணமாலை அணிவிப்பதுமாக பலர் சம்பாதிக்கும் பணத்தை இழந்து வருகிறார்கள். இருந்தும் குடும்ப சூழலால் கஷ்டப்படும் நண்பர்களையே அதிகம் பார்க்கமுடியும். அவர்களுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை.
கண்டிப்பாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்...
பகிர்வுன்னு நன்றி
உண்மைதான் நண்பா... ஆனால் இதை இரண்டு விடயமாக பிரிக்கலாம், ஒன்று ஐரோப்பிய நாடுகள், இரண்டு மத்திய கிழக்கு நாடுகள். பெரும்பாலும் நீங்கள் சொல்லுகின்ற கருத்துக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கே பொருந்துகின்றன, மற்றபடி மத்திய கிழக்கு நாடுகளும் மாப்பிள்ளைகள் கொஞ்சம் கஷ்டம்தான் ஏனெனில் அவர்கள் சரியான கஷ்டத்தை அனுபவிக்கின்றார்கள்.!
உண்மை தான் நல்ல பதிவு.
தினேஷ்குமார்,
பஹ்ரைன் நிலமை வேறு, லண்டன் பிரான்ஸ் போன்ற நாடுகளில் நிலமை வேறு.
மாப்பிள்ளையும் பொண்ணும் ஆனஸ்டா தான் யாரு, தன் உண்மையான நிலை என்ன என்பதை தெளிவு படுத்தினால் நல்லதுங்க. பொய்யை அடிப்படையாக வைத்து ஏமாத்தி கல்யாணம் செய்தால் வெளிநாட்டு மாப்பிள்ளை னாலும் சரி நம்ம ஊர் மாப்பிள்ளையானலும் வம்புதான். ஒருவகையில் காதல் திருமணத்தில் இந்தப் பிரச்சினை வராது. இன்னும் ஈழத்தில் அரேஞிட் மேரேஜ் பண்ணுறாங்களா? ஏன்? :(
நண்பா நான் இதெல்லாம் உண்மை நிலவரத்தை தான் எழுதி உள்ளேன் . இதெல்லாம் ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் , ஜேர்மன் போன்ற நாடுகளில் இடம்பெறுகின்றன . கனடாவிலும் கூட . நன்றி நண்பா . உங்கள் கருத்துக்கும் , வரவுக்கும் .
நண்பா இப்படி எல்லாம் இருக்கிறார்கள் . ஆனால், நான் எல்லோரும் அப்படியானவர்கள் என்று சொல்லவில்லையே . குடும்ப கஷ்டத்தால் இரவு, பகல் பாராது ஓயாது உழைக்கும் இளையர்களும் உள்ளனர் . குறிப்பிட்ட சிலர் என்றுதான் நான் சொல்கிறேன் . எதிலும் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் . இந்த விடயங்களிலும் கூட . சிலர் போதிய விழிப்புணர்வு இல்லாமல் எல்லாம் நடந்து முடிந்தபிறகு தான் வேறு நபர்களை விசாரித்து உண்மை நிலவரங்களை அறிகிறார்கள் . நன்றி நண்பா
ஆமாம். சிலருக்கு இப்படியான விடயங்களில் விழிப்புணர்வு இல்லை. புத்தகப் படிப்பில் அதிகம் மினக்கடுவார்கள் . உலகப் படிப்பு பற்றி அவர்களுக்கு ஒன்றுமே தெரிந்து இருக்காது . நன்றி சௌந்தர் .
ஆமாம் . மத்திய கிழக்கு நாடுகளில் எல்லோரும் சரியாக கஷ்டப்பட்டு உழைத்து இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தமது நாட்டுக்கு வந்து தமது குடும்பங்களை கவனிக்கிறார்கள் . நான் சொல்வது மத்திய கிழக்கு நாடுகளில் இருப்பவர்களுக்கு அல்ல . ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்களுக்கு . நீங்கள் சொல்வது சரி நண்பா . நன்றி நிரோஷ் உங்களது கருத்துக்கும், வரவுக்கும்
காதல் கல்யாணங்களும் நடக்கின்றன . பெற்றோர் பார்த்து செய்யும் திருமணங்களும் நடக்கின்றன . யாராக இருந்தாலும் உண்மை நிலவரத்தை தெரிவிப்பது நல்லது . நன்றி வருண் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
வருண்
நீங்கள் கூறியது போல் அரேஞிட் மேரேஜ் செய்வதால் இப்படியான பிரச்சனைளுக்கு வாய்ப்புள்ளது என்பது உண்மை. இலங்கை தமிழர்கள் இந்தியர்கள் மாதிரியே அரேஞிட் மேரேஜ் செய்வது மிக அதிகம்.
Post a Comment