Thursday, September 29, 2011

நடிகைகளில் இப்போது அனுஷ்கா சிறந்தவர்

Anushka Shetty

இன்று எல்லோரினதும் கனவுக் கன்னி , அழகுதாரகை , தேவதை என்று எல்லோரும் யாரை விரும்புகிறார்கள் தெரியுமா ? அதுதானுங்க நம்ம அனுஷ்கா தான் அது . அழகு , நடிப்பு , உடலமைப்பு , திறமை , உயரம் , நடனம் என எல்லாவற்றிலும் ஏனைய நடிகைகளுக்கு சவால் விடும் அளவுக்கு இப்போதைய நம்பர் வண் நடிகையாகத் திகழ்கிறார் .
டோலிவுட், கோலிவுட் என கலக்கிக் கொண்டு எல்லா ரசிகர்களையும் கவர்ந்த தாரகை . எத்தனையோ ரசிகர்களின் தூக்கத்தை இல்லாமல் செய்கிறார் . ஆறடி உயர அழகுப் பதுமை இந்த அனுஷ்கா . இப்போது ஸ்டார் வேல்யூ அதிகரித்து இருக்கிறது . எல்லாம் தெய்வத்திருமகள் வெற்றிக்குப் பிறகுதான் .
Anushka Shetty
தமிழில் சிங்கம் வெற்றிக்குப் பிறகு அனுஷ்காவைத் தேடி ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தன. அவற்றில் தனக்கு பிடித்த கதைகள், தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக பார்த்து தேர்ந்து நடிக்கிறார் . வித்தியாசமான கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார் . முறைப்படி யோகா கற்று தனது உடம்பை சிலிம்மாக வைத்து இருக்கிறார் .
Anushka Shetty

அனுஷ்கா எல்லா நடிகைகளிலும் வித்தியாசமானவர் . அதிகம் சந்தோஷபடுவதுமில்லை , கோபப்படுவதுமில்லை. தன்னுடைய வேலையை சரியாக செய்தால் சரி என நினைத்துக் கொள்வார் . இவருடைய நடிப்புத்திறமையை எல்லோரிடமும் கொண்டு சென்ற படம் தெய்வத்திருமகள் படம் தான் . அதில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் . அழகான உடைகளுடனும், அழகாகவும் இருந்தார் . ஓவர் இல்லாத நடிப்பும் , அழகும் . 
Anushka Shetty

எந்த கேரட்டருக்கு எப்படி நடிப்பு , காட்சி இருக்குமோ அதுக்கு ஏற்றாற்போல் கவர்ச்சி , அழகு எல்லாம் இருக்கும் . படத்துக்கு ஏற்றாற்போல் அந்த படத்துக்கு வலு சேர்க்கும் மாதிரி இருக்கும் போது அதுக்கு தகுந்தபடி அனுஷ்காவின் நடிப்பு இருக்கும் . 
Anushka Shetty

தமிழில் மொத்தமாக ஐந்து படங்களில் நடித்து இருக்கிறார் . தெலுங்கில் பல திரைப்படங்களை நடித்துக் கொண்டும் இருக்கிறார் . அனுஷ்கா படங்களை எப்படி ஒத்துக் கொள்கிறார் என்றால் முதலில் கதை எனக்குப் பிடித்திருக்க வேண்டும். அடுத்தபடியாக எனது கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதைக் கவனிக்கிறேன். நல்ல இயக்குநரின் படம் அல்லது 'தெய்வத்திருமகள்'போல நல்ல நடிகர்களின் படம் என்றால் எனது கதாபாத்திரம் சற்று சின்னதாக இருந்தாலும் நான் கவலைப்படுவதில்லை. உதாரணத்துக்கு, 'தெய்வத்திருமகள்' முழுக்க முழுக்க விக்ரமின் படம். அந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் பேசப்படுகிறது என்றால் அதற்காகவே வேடம் சிறியதாக இருந்தாலும் ஒத்துக் கொள்ளலாம் என்பது எனது கருத்து என்று கூறுகிறார் .
Anushka Shetty
அனுஷ்காவுக்கு பிடித்த நடிகைகளில் தமிழில் நம்ம ஜோவும் , சிம்ரனும் , ஏனைய மொழிகளில் கஜோல் , சௌந்தர்யா ஆகியோரை பிடிக்கும் . எனக்கு அனுஷ்காவை ரொம்ப பிடிக்கும் . அவர் எந்த உடை உடுத்தாலும் அழகு . அவரின் நடிப்பும் பிடிக்கும் . எனக்கு அவர் நடித்த அருந்ததி , தெய்வத்திருமகள் , வானம் போன்ற படங்கள் பிடிக்கும் . 





3 comments:

ஜெய்லானி said...

எந்த கேரக்டரானாலும் அழகுக்கு அழகு சேர்ப்பது நடிகை சாவித்திரிக்கு பிறகு இவர்தான் :-))

ஜெய்லானி said...

என்னது ஒரு படம் கூட போடாமல் முதல் முறையா பவியிடமிருந்து ஒரு பதிவு ஆச்சிரியம்தான் :-)))

Pavi said...

ஆமாம். நன்றி ஜெய்லானி