இன்று எல்லோரினதும் கனவுக் கன்னி , அழகுதாரகை , தேவதை என்று எல்லோரும் யாரை விரும்புகிறார்கள் தெரியுமா ? அதுதானுங்க நம்ம அனுஷ்கா தான் அது . அழகு , நடிப்பு , உடலமைப்பு , திறமை , உயரம் , நடனம் என எல்லாவற்றிலும் ஏனைய நடிகைகளுக்கு சவால் விடும் அளவுக்கு இப்போதைய நம்பர் வண் நடிகையாகத் திகழ்கிறார் .
தமிழில் சிங்கம் வெற்றிக்குப் பிறகு அனுஷ்காவைத் தேடி ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தன. அவற்றில் தனக்கு பிடித்த கதைகள், தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக பார்த்து தேர்ந்து நடிக்கிறார் . வித்தியாசமான கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார் . முறைப்படி யோகா கற்று தனது உடம்பை சிலிம்மாக வைத்து இருக்கிறார் .
அனுஷ்கா எல்லா நடிகைகளிலும் வித்தியாசமானவர் . அதிகம் சந்தோஷபடுவதுமில்லை , கோபப்படுவதுமில்லை. தன்னுடைய வேலையை சரியாக செய்தால் சரி என நினைத்துக் கொள்வார் . இவருடைய நடிப்புத்திறமையை எல்லோரிடமும் கொண்டு சென்ற படம் தெய்வத்திருமகள் படம் தான் . அதில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் . அழகான உடைகளுடனும், அழகாகவும் இருந்தார் . ஓவர் இல்லாத நடிப்பும் , அழகும் .
எந்த கேரட்டருக்கு எப்படி நடிப்பு , காட்சி இருக்குமோ அதுக்கு ஏற்றாற்போல் கவர்ச்சி , அழகு எல்லாம் இருக்கும் . படத்துக்கு ஏற்றாற்போல் அந்த படத்துக்கு வலு சேர்க்கும் மாதிரி இருக்கும் போது அதுக்கு தகுந்தபடி அனுஷ்காவின் நடிப்பு இருக்கும் .
அனுஷ்காவுக்கு பிடித்த நடிகைகளில் தமிழில் நம்ம ஜோவும் , சிம்ரனும் , ஏனைய மொழிகளில் கஜோல் , சௌந்தர்யா ஆகியோரை பிடிக்கும் . எனக்கு அனுஷ்காவை ரொம்ப பிடிக்கும் . அவர் எந்த உடை உடுத்தாலும் அழகு . அவரின் நடிப்பும் பிடிக்கும் . எனக்கு அவர் நடித்த அருந்ததி , தெய்வத்திருமகள் , வானம் போன்ற படங்கள் பிடிக்கும் .
3 comments:
எந்த கேரக்டரானாலும் அழகுக்கு அழகு சேர்ப்பது நடிகை சாவித்திரிக்கு பிறகு இவர்தான் :-))
என்னது ஒரு படம் கூட போடாமல் முதல் முறையா பவியிடமிருந்து ஒரு பதிவு ஆச்சிரியம்தான் :-)))
ஆமாம். நன்றி ஜெய்லானி
Post a Comment