Monday, October 3, 2011

பாராட்டுக்கள் தான் எம்மை சந்தோசப்படுத்தும் .......


பரீட்சையில் பாஸ் பண்ணும் போது நீ கஷ்டப்பட்டு படித்தாய் . நல்ல ரிசல்ட் வாங்கினாய் . உனக்கு எமது பாராட்டுக்கள் என்கின்றோம் . நல்ல வேலை கிடைத்து போகும் போது எமது நண்பரை பாராட்டுகின்றோம் . விளையாட்டில் வெற்றி பெறும்போது அந்த குழுவை , அணியை வாழ்த்துகின்றோம் .
http://dartcareers.files.wordpress.com/2011/09/success.jpg
இப்படி நாம் பல விதங்களில் ஒவ்வொருவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றோம் . இதே சிலர் இந்த பாராட்டை தெரிவிப்பதில்லை . தனது மகன் பட்டம் பெற்றான் என்றால் அவனை இன்னும் நாம் பாராட்டி , வாழ்த்தும்போது தான் அவன் இன்னும் ஒருபடி சந்தோசம் அடைகின்றான் . அவனுக்குள் ஒரு உந்து சக்தி வரும் . நாம் இன்னும் முன்னேற வேண்டும் என்று .

நீ கஷ்டப்பட்டு படித்து , கடினமாக உழைத்தாய் , வெற்றி பெற்றாய் , எண்கள் மனம் குளிர்கிறது என்று அவனுக்கு பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும் . உற்றார் , உறவினர் , நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தும்போது அவனது சந்தோசம் எல்லையற்றது .

நாம்
http://www.things4myspace.com/wp-content/uploads/2007/congratulations/congratulation-05.jpg எமது நண்பனையோ, உறவுகளையோ நல்லது செய்யும் போது நாம் பாராட்டுகின்றோம் . பாராட்ட வேண்டும் . நாம் அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதன் மூலம் நாம் ஒன்றும் எந்த விடயத்திலும் குறையப்போவதில்லை . நீதான் என் நண்பன் . நீ தான் என்னுடைய அக்கா என்று பூரிப்பு அடைகிறான் .
http://1.bp.blogspot.com/_hI8-7BcR-70/TQHN9TPTP4I/AAAAAAAAABk/EmYNl9qrb00/s1600/success.jpg
இதே போல்தான் கணவன் , மனைவிக்குள்ளும் இந்த பாராட்டு தெரிவிப்பது இருக்க வேண்டும் . இன்றைக்கு நீ சமைத்த கறிகள் இன்றைக்கு ருசியாக இருக்கிறது என்று கணவன் பாராட்டுகின்றார் . அப்போது மனைவியின் சந்தோசத்தை பார்க்கணுமே . அப்படி பாராட்டும்போது தான் நான் இன்னும் நல்ல ருசியாக சமைக்கணும் என்று அவர்களுக்கு ஒரு எண்ணம் தோன்றும் . அதுவே என்ன கொடுத்தாலும் சாப்பிட்டு ஒன்றும் பாராமல் போவது , எதுக்கும் இது சரியில்லை, அது சரியில்லை என்று சொல்வது கூடாது .
http://www.alexdumitru.com/wp-content/uploads/2010/10/Success.jpg
சிலர் நினைப்பது இவர்களுக்கு நல்ல இருக்குது என்று சொன்னவுடன் தலைக்கனம் ஏறி பிறகு சரியாக சமைக்க மாட்டார்கள் என்று அது தவறு . இந்த சாரி உங்களுக்கு நல்ல இருக்கிறது . இந்த சேட் உங்களுக்கு நல்ல இருக்கிறது என்று ஆணோ , பெண்ணோ இப்படியான பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும் .

மனைவியோ , கணவனோ சில வீடுகளில் பார்த்தீர்கள் என்றால் மனைவி இந்த கலர் உங்களுக்கு நல்லா இருக்கு இந்த சேட் என்று சொன்னால் போதும் . அதே ஒரு கிழமைக்கு போட்டபடிதான் இருப்பார்கள் . யாராக இருந்தாலும் அன்பை வெளிப்படுத்துங்கள் . வாழ்த்துக்கள், பாராட்டுதல்களை வழங்குங்கள் .

6 comments:

ஜெய்லானி said...

நாம் மனம் திறந்து பாரட்டும் போது அங்கே மன விரிசல் , மன இருக்கம் எதுவும் அங்கே இருக்க முடியாது :-)


இங்கே பாராட்ட ஆள் இல்லாவிட்டாலும் தொடருங்கள் அருமையான பதிவு :-)

BC said...

பரீட்சையில் பாஸ் பண்ணும் போது பாராட்டுவது.
நல்ல வேலை கிடைத்து போகும் போது பாராட்டுவது.
நீ கஷ்டப்பட்டு படித்து கடினமாக உழைத்தாய் வெற்றி பெற்றாய் அதனால் பாராட்டுவது.
இன்றைக்கு நீ சமைத்த கறிகள் இன்றைக்கு ருசியாக இருக்கிறது பாராட்டுவது.
அருமை Pavi

Pavi said...

நன்றி ஜெய்லானி

Pavi said...

நன்றி ஜீவா

Pavi said...

நன்றி வருண்

'பரிவை' சே.குமார் said...

பாராட்டு என்பது ஊக்கத்தின் விதை...
நல்லது செய்யின் பாராட்டுதல் சிறப்பு.
அருமையான பகிர்வு.