எப்பவுமே மனதை இலேசாக வைத்திருக்க வேண்டும் . எமக்கு பிரச்சனைகள் இருக்கும்போது மனது கனமாக இருக்கிறது . மனதில் சுமை ஏற்படுகிறது . இதனை குறைக்க வேண்டும் .
மனதில் உள்ள சுமையை இறக்கி வைத்தால் பிரச்சனை இல்லை . இப்படியான சுமைகளை நாம் எமது பெற்றோரிடம் முறையிடலாம் . அவர்களிடம் சொல்ல இயலாததை எமது நண்பனிடமோ , நண்பியிடமோ முறை இடலாம் . அப்படி முறை இடும்போது எமக்கு ஏதோ ஒரு பாரம் குறைந்தது போல் இருக்கும் . மனச்சுமையை இறக்கி வைத்தது போன்று இருக்கும் .
எமக்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நம் பெற்றோர் . மற்றயது ஆருயிர் நண்பர்கள் மட்டுமே . அவர்களிடம் நமது மனச்சுமையை இறக்கி வைக்கும்போது அவர்களிடம் ஒரு தீர்வு கிடைக்கும் . அல்லது இந்த பிரச்னைக்கு என்ன தீர்வு என்று கூறுவார்கள் .
மகளின் மனச்சுமையை அப்பா தீர்த்து வைப்பார் . மகனின் மனச்சுமையை அம்மா தீர்த்து வைக்கிறார் . இப்படி சில குடும்பங்களில் நடக்கிறது . கூடுதலாக பெண்களுக்குத்தான் மனச்சுமை அதிகம் . மனதுக்குள் ஒரு சம்பவத்தை பூட்டி , பூட்டி வைத்தால் எமக்கு தீங்கு தான் . மனதுக்கும், உடம்புக்கும் தீங்கு தான் .
மனது எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும் . தியானம் செய்ய வேண்டும் . மனதை ஒருநிலைபடுத்த வேண்டும் . ஒருவர் தொலைபேசியில் நீண்ட நேரம் கதைக்கும் போது மனதில் சுமை கூடுகிறது . அதே எமது பிரச்சனைகளை தொலைபேசியில் கூறும்போது மனச்சுமையை குறைத்துக் கொள்ளலாம் .
10 comments:
படித்து முடித்ததும் பாரம் குறைந்த மாதிரி ஒரு உணர்வு. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள். தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்.
பல பேர் பதிவு எழுதுவதும் மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைக்கவே
100 % Unmai. anupava poorvamaana pathivu pola. Congrats.
மனம் எப்போதும் தெளிந்த நீரோடை போல் வைத்து கொள்வது நன்று
அனுபவப் பதிவாக இருந்தாலும் இது உண்மைதானே...
படித்து முடித்ததும் பாரம் குறைந்த மாதிரி ஒரு உணர்வு.
நன்றி நிரோஷ்
உண்மைதான் . நன்றி ஜீவா
நன்றி காந்தி
நன்றி சரவணன்
நன்றி குமார்
Post a Comment