Thursday, September 29, 2011

நடிகைகளில் இப்போது அனுஷ்கா சிறந்தவர்

Anushka Shetty

இன்று எல்லோரினதும் கனவுக் கன்னி , அழகுதாரகை , தேவதை என்று எல்லோரும் யாரை விரும்புகிறார்கள் தெரியுமா ? அதுதானுங்க நம்ம அனுஷ்கா தான் அது . அழகு , நடிப்பு , உடலமைப்பு , திறமை , உயரம் , நடனம் என எல்லாவற்றிலும் ஏனைய நடிகைகளுக்கு சவால் விடும் அளவுக்கு இப்போதைய நம்பர் வண் நடிகையாகத் திகழ்கிறார் .
டோலிவுட், கோலிவுட் என கலக்கிக் கொண்டு எல்லா ரசிகர்களையும் கவர்ந்த தாரகை . எத்தனையோ ரசிகர்களின் தூக்கத்தை இல்லாமல் செய்கிறார் . ஆறடி உயர அழகுப் பதுமை இந்த அனுஷ்கா . இப்போது ஸ்டார் வேல்யூ அதிகரித்து இருக்கிறது . எல்லாம் தெய்வத்திருமகள் வெற்றிக்குப் பிறகுதான் .
Anushka Shetty
தமிழில் சிங்கம் வெற்றிக்குப் பிறகு அனுஷ்காவைத் தேடி ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தன. அவற்றில் தனக்கு பிடித்த கதைகள், தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக பார்த்து தேர்ந்து நடிக்கிறார் . வித்தியாசமான கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார் . முறைப்படி யோகா கற்று தனது உடம்பை சிலிம்மாக வைத்து இருக்கிறார் .
Anushka Shetty

அனுஷ்கா எல்லா நடிகைகளிலும் வித்தியாசமானவர் . அதிகம் சந்தோஷபடுவதுமில்லை , கோபப்படுவதுமில்லை. தன்னுடைய வேலையை சரியாக செய்தால் சரி என நினைத்துக் கொள்வார் . இவருடைய நடிப்புத்திறமையை எல்லோரிடமும் கொண்டு சென்ற படம் தெய்வத்திருமகள் படம் தான் . அதில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் . அழகான உடைகளுடனும், அழகாகவும் இருந்தார் . ஓவர் இல்லாத நடிப்பும் , அழகும் . 
Anushka Shetty

எந்த கேரட்டருக்கு எப்படி நடிப்பு , காட்சி இருக்குமோ அதுக்கு ஏற்றாற்போல் கவர்ச்சி , அழகு எல்லாம் இருக்கும் . படத்துக்கு ஏற்றாற்போல் அந்த படத்துக்கு வலு சேர்க்கும் மாதிரி இருக்கும் போது அதுக்கு தகுந்தபடி அனுஷ்காவின் நடிப்பு இருக்கும் . 
Anushka Shetty

தமிழில் மொத்தமாக ஐந்து படங்களில் நடித்து இருக்கிறார் . தெலுங்கில் பல திரைப்படங்களை நடித்துக் கொண்டும் இருக்கிறார் . அனுஷ்கா படங்களை எப்படி ஒத்துக் கொள்கிறார் என்றால் முதலில் கதை எனக்குப் பிடித்திருக்க வேண்டும். அடுத்தபடியாக எனது கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதைக் கவனிக்கிறேன். நல்ல இயக்குநரின் படம் அல்லது 'தெய்வத்திருமகள்'போல நல்ல நடிகர்களின் படம் என்றால் எனது கதாபாத்திரம் சற்று சின்னதாக இருந்தாலும் நான் கவலைப்படுவதில்லை. உதாரணத்துக்கு, 'தெய்வத்திருமகள்' முழுக்க முழுக்க விக்ரமின் படம். அந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் பேசப்படுகிறது என்றால் அதற்காகவே வேடம் சிறியதாக இருந்தாலும் ஒத்துக் கொள்ளலாம் என்பது எனது கருத்து என்று கூறுகிறார் .
Anushka Shetty
அனுஷ்காவுக்கு பிடித்த நடிகைகளில் தமிழில் நம்ம ஜோவும் , சிம்ரனும் , ஏனைய மொழிகளில் கஜோல் , சௌந்தர்யா ஆகியோரை பிடிக்கும் . எனக்கு அனுஷ்காவை ரொம்ப பிடிக்கும் . அவர் எந்த உடை உடுத்தாலும் அழகு . அவரின் நடிப்பும் பிடிக்கும் . எனக்கு அவர் நடித்த அருந்ததி , தெய்வத்திருமகள் , வானம் போன்ற படங்கள் பிடிக்கும் . 





பூ போன்றவள் அவள்


பூ போன்ற மென்மையும் 
பூக்களின் அழகு குவியலும் 
ஒன்றாக சேர்ந்த அழகுப் 
பதுமை அவள் என்று 
நான் இருந்தேன் 
http://1.bp.blogspot.com/-1AzqRJKtV5M/TehfQUYZmUI/AAAAAAAAAGI/e4PEEegEuDc/s1600/rose-2.jpg
ரோஜாப் பூவை எல்லோருக்கும் 
பிடிக்கிறது அதன் இதழ்கள் 
மென்மையானவை ஆனால்
அதன் மரத்தில் முட்கள் இருக்கும் 
முட்கள் குத்தினாலும் வலிக்காது 
http://2.bp.blogspot.com/-iRb7wRl9nu4/TV5r96wzghI/AAAAAAAABco/uxMukNBYBP4/s1600/The-best-top-desktop-roses-wallpapers-hd-rose-wallpaper-31-pink-rose.jpg
ஏனென்றால் அந்த ரோஜாவை 
பறிக்கும் போது, அதை ரசிக்கும் போது 
அவை எமக்கு வலிப்பதில்லை 
பெண்களும் அப்படித்தான் போலும் 
மென்மையானவளாகவும் இருக்கிறாள் 
தீ போலும் இருக்கிறாள் 
யாருடைய மனசை புரிந்து கொண்டாலும் 
இந்த பெண்களின் மனசை புரிஞ்சுக்க 
முடியல்லையே டா............................

Monday, September 26, 2011

எவ்வளவு சீதனம் குடுப்பீங்க ?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3Av8JI8S559p0G3MWhM32h5gQBLSZAL9Pv7eEKU40c7QeDF0IU5gimSBZjf9ZFoESkkAJIIfLix1udqRAxpDrgknl4hXS8AGZYgIeSyvTq-MEGolOY9X1XBffa3wpx62h4_kDnRcYN9M/s1600/dowry.jpg
கல்யாணம் செய்து வைப்பதற்க்கு பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா ? பிள்ளைகளை பெற்றால் அவர்களை வளர்த்து, படிக்க வைத்து , அவர்களை ஒருவன் கையில்/ ஒருத்தி கையில் ஒப்படைக்கும் வரைக்கும் பெற்றோர் தமது பிள்ளைகளுக்காக எவ்வளவோ செலவு செய்கிறார்கள் .

ஆணாக இருந்தால் என்ன , பெண்ணாக இருந்தால் என்ன ர்ந்த பிள்ளைகள் ஆனாலும் பெற்றோர் கஷ்டப்பட்டு வளர்க்கிறார்கள் . எந்த பிள்ளையும் பெற்ற்ரோர்களுடன் இருந்து வளரும் போது சந்தோசமாக , அன்பாக , கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாதபடி சில பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கிறார்கள் .
http://scienceline.org/wp-content/uploads/2006/10/cry.jpg
சில பிள்ளைகள் இள வயதிலேயே பெற்றோரை இழந்து உண்ண உணவின்றி, உடுக்க உடை இன்றி கஷ்டப்படுகிறார்கள் .  கல்யாணப் பொருத்தங்கள் பார்த்தவுடன் பெண் வீட்டாருடன்  மாப்பிள்ளை வீட்டார் பேசுவார்கள் . முதலில் கேட்பது பெண்ணுக்கு எவ்வளவு சீதனம் கொடுப்பீங்க ? எவ்வளவு நகை போடுவீங்க ? சொந்த வீடு கொடுப்பீங்களா ? இப்படி கடைகளில் பொருட்கள் வாங்குவது போல் லிஸ்ட் போடுவார்கள் .

அதே கொஞ்சம் படித்த பேர்வழிகள் என்றால் நாங்கள் சீதனம் கேட்க மாட்டோம் . சீதனம் எங்களுக்கு வேண்டாம் . ஆனால், நீங்கள் உங்களுடைய மகளுக்கு என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கோ என்பார்கள் . சிலர் சொல்வார்கள் உங்களது பிள்ளைக்கு உங்களால் என்ன கொடுக்க முடியுமோ அவற்றை கொடுத்து அனுப்புங்கோ . நாளைக்கு உங்களது பிள்ளை கஷ்டப்பட்டு நிற்கக்கூடாது பாருங்கோ ? என்பார்கள் .
http://4.bp.blogspot.com/_oW8s2oAvAVI/TL1x1Ah7zpI/AAAAAAAAAOU/YGv4OK5J0I8/s1600/KanyaDaan.jpg
அப்போ மகளை பெற்ற பெற்றோர் எங்களது பிள்ளை புகுந்த வீட்டுக்கு வெறும்கையுடன் போக கூடாது . அவளும் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் . நாலுபேர் நாலு விதமாக அவளை பற்றி தரக்குறைவாக பேச கூடாது என்று நினைத்து செய்ய வேண்டியவைகளை செய்வார்கள் . ஒரு பேச்சுக்காவது யாரேனும் நீ என்னத்தை கொண்டு வந்தனீ வரும்போது ? வெறும் கையுடன் தானே வந்தநீயடி என்று ஒரு சொல்லு சொன்னால் எமது பிள்ளை கலங்கி போய் விடுவாளே என நினைத்து பெற்றோர் தம்மால் இயன்றளவு தமது பெண்ணுக்கு செய்ய வேண்டியவற்றை செய்து புகுந்த வீட்டுக்கு அனுப்புவார்கள் .
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7tzi9_u_m4aXt4lw_ztMgpFhuLJ03oB8VNOjj20AqgISq_vZICr3D7qTwrxMLRmaiMtxo3fAqgGNcR9CQ8Ci1kxCQCKs7jxpSd93KTP2TCb-pzr7HbBAf_er8vxKfO-6Xcs2kQT4LBipi/s1600/hindu+marriage_img2.JPG
சில வீடுகளில் பெண்கள் நாப்பது வயது ஆகியும் திருமணம் நடக்காமல் இருக்கிறார்கள். கேட்டால் எங்களுடன் அவ்வளவு சீதனம் கொடுத்து செய்ய கூடிய வசதி இல்லை . அதனால் நாம் சொந்த காலில் சுய சம்பாத்தியத்தில் இருக்கிறோம் . ஆசிரியராக , கைப்பணி  வேலை செய்பவராக , புடைவை கடைகளில் வேலை செய்பவராக இருக்கிறோம் . எங்களது அப்பா, அம்மா இருவரும் கஷ்டப்பட்டவர்கள் . அவர்களிடம் இலட்சங்கள் கொடுத்து எம்மை வாழ வைக்க பணம் இல்லை . நாம் அதனால் திருமணம் செய்யவில்லை . எனது சம்பாத்தியத்தில் எனது பெற்றோரை இறுதிவரைக்கும் நன்றாக , சந்தோசமாக வைத்திருப்பேன் என்கிறார்கள் . அவர்கள் இறந்ததும் தனது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமே , இந்த சமூகத்தில் தான் சந்தோசமாக வாழ தனக்கு ஒரு துணை வேண்டுமே என்று அவள் எப்போது சிந்திக்க போகிறாள் .
http://www.zawaj.com/askbilqis/wp-content/uploads/2009/12/jewelry_dowry.jpg
மாப்பிளை  வீட்டார் : பொண்ணுக்கு எவ்வளவு நகை போடுவீங்க ?
பொம்பிளை வீட்டார் : நீங்க என்ன போடுவீங்க ?
மாப்பிளை வீட்டார் : நீங்க பொண்ணுக்கு போட்டு விட்ட நகையை எடை போடுவோம் .
ஹி...................ஹி ...................ஹி ......................
எப்பிடி இருக்கு சமுதாயம் ? எங்கு சென்று கொண்டு இருக்கு .

அதுவும் இப்போது என்ன இந்த காலத்தில் கேட்கிறார்கள் தெரியுமா ? பொண்ணுக்கு தாலி பத்து, பதினைந்து , இருபது பவுணில் தாலி செய்ய வேண்டும் . அதுக்கே எங்களுக்கு ஆறு , எட்டு , பத்து இலட்சம் வேண்டும் . நீங்க சீதனம் தந்தால் அதை உங்களது மகளுக்கு தாலி செய்யவே முடிந்து விடும் . பின்பு எங்களுக்கு எங்கே மிஞ்சுவது மிச்சம் . இது எப்பிடி இருக்கு ???
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNXzywZp-bRDvILrSFfYNQ7pJiDJzKCNmOTAXCh9x0vWcKgZheThKGBqC5q6bwiPlXH0eNYABiGL0Xgnb1VcUKzegNKyaXycHh2xkxw-Fe2MM-otFXh4f89zzl7pFMIXCFwYNm_fKbqTb7/s1600/gold+jewelry+stores-3.jpg
சில வீடுகளில் சீதனம் பெண்களிடம் வாங்கி மாப்பிளை வீட்டாருக்கு ஒரு செலவும் இல்லாமல் பெண் வீடாரே எல்லா செலவுகளையும் செய்து விடுகிறார்கள் . சீதனத்தை வாங்கி பெற்றோர் தமது எதிர்காலத்துக்கு என்று தமது வங்கி கணக்கில் போட்டு விடுகிறார்கள் . மகன் கல்யாணம் செய்ததும் நம்மை கவனிக்க மாட்டான் . எமக்கு கடைசி காலத்துக்கு தேவை தானே . மருந்து செலவுக்கு என்கிறார்கள் ???

காலம் எப்படி போய் கொண்டு இருக்கிறது  என்று பெரு மூச்சு தான் விட வேண்டி இருக்கிறது ???????


பார்க்க போனால் காதலிச்சு திருமணம் செய்யலாம் என்று நினைக்கிறீர்களா ? அதிலும் தொல்லை இருக்கிறது . இருவரும் அறியா வயதில் காதலித்து ஓடி விடுவார்கள் . காதலியின் கையில் , காதில் கிடக்கும் நகைகள் இருக்கும் வரைக்கும் சுற்றி திரிந்து , சந்தோசமாக இருப்பார்கள் . முடிந்ததும் நீ உன்னுடைய அம்மா , அப்பாவிடம் உனக்கு சேர வேண்டிய சொத்து , நகைகளை வாங்கி கொண்டு வாடி என துரத்தி விடுகிறார்கள் . இறுதியில் மகள் கண்ணீர் விடுக்கொண்டு பெற்றோரிடம் வருகிறாள் . பெற்ற மனம் என்ன செய்யும் ??? இறங்கும் . பரிதவிக்கும் , தினம் தினம் கவலைபட்டு பெற்றோர் தம்மையே உருக்கி கொள்வார்கள் தம் மகளின் நிலையை அறிந்து .
http://kkinfopoint.files.wordpress.com/2011/03/dowry11.jpg
எவ்வளவோ பாதிக்கப்பட்ட உள்ளங்களில் மனக்குமுறல்கள் இப்படியானவை . இவை வதந்திகளோ , பொய்களோ இல்லை . நியமானவை . சிந்திக்க வேண்டும் எல்லோரும் .

Sunday, September 25, 2011

கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்


எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்தால் தான் வாழ்க்கையில் முன்னேறலாம் . சந்தோசமாக இருக்கலாம் . சிலர் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும் வரைக்கும் வீணாக பொழுதை கடத்திக் கொண்டு இருப்பார்கள் . அது தவறு .

எமக்கு கிடைத்த வேலையை செய்து கொண்டு நாம் வேறு வேலைகளுக்கும் முயற்சி செய்து கொண்டு இருக்க வேண்டும் . எத்தனையோ பேர் வேலையே எனக்கு கிடைக்குது இல்லையே என்று மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் . 
http://www.7junipers.com/images/sea/bali-rice-farmer.jpg
சிலர் என்ன வேலை செய்தாவது தமது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு உழைத்து முன்னேறுகிறார்கள் . நாம் நினைத்தது கிடைக்க வில்லை என்றால் நமக்கு கிடைப்பதை தக்க வைத்துக் கொள்வதே சிறந்த தெரிவு . 

இப்போது இளையர்கள் , யுவதிகள் இருவரும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை கொண்டு நடத்தலாம் . படித்துவிட்டு வீட்டில் வீணாக பொழுதை கழிக்காமல் வேலைக்கு செல்வது ஒன்றும் தவறில்லை . ஆனால், சிலர் கிடைக்கும் சம்பளத்துக்கு அதிகமாக அவர்களுக்கு அவர்களின் அலங்காரத்துக்கும், உடைகளுக்கும் , வாகன போக்குவரத்துக்கும் செலவாகின்றது என்று அங்கலாய்ப்பவர்களும் நம்முள் உண்டு .
http://www.tip20.com/wp-content/uploads/2011/05/157966_waiter.jpg
இப்போதைய கால கட்டத்தில் பொருட்களின் விலை ஏற்றமும் , குடும்பத்தில் எப்படியாவது ஐந்து பேர் ஆவது இருப்பர். அப்போது அந்த வீட்டில் ஒருவர் உழைத்து சரிவராது . அவரின் உழைப்பு சாப்பாட்டுக்கு மட்டும் தான் போதும் . ஏனைய வசதிகளை செய்ய முடியாது . தண்ணீர் , மின்சாரம் , தொலைபேசி கட்டணங்கள் கட்ட வேண்டும் . ஏதாவது விசேசங்களுக்கு அன்பளிப்பு கொடுக்க வேண்டும் , தீபாவளி , தைபொங்கல் என்று விசட தினங்களுக்கு புதிய ஆடைகள் வாங்க வேண்டும் . இப்படி பல செலவுகளை ஈடு செய்ய வேண்டும் . 

களவெடுத்து , வழிப்பறி செய்து பிழைப்பதை விட ஒரு நேர உணவாக இருந்தாலும் கஷ்டப்பட்டு உழைத்து தன சொந்தக்காலில் நின்று வாழ்தல் தான் முக்கியம் . ஏனையவர்களை நம்பி நாம் வாழ்தல் கூடாது .

Friday, September 23, 2011

வெளிநாட்டு மாப்பிள்ளையா ..................


http://motherindia.wikispaces.com/file/view/royal_weddings.jpg/161258373/royal_weddings.jpg
எல்லோரும் வெளிநாடு போக ஆசைப்படுகிறார்கள் . போனால் தான் அங்குள்ளவர்கள் படும் கஷ்டம் விளங்கும். தெரியும் . வெளிநாட்டில் ஆண் இருந்தால் அவர் வெளிநாட்டு மாப்பிள்ளை . ஆனால், அவர் இங்கு உதவாக்கரையாக , ஊர்சுற்றி திரிந்திருப்பார் . சிலர் படித்தது நான்காம் வகுப்பு மட்டும் தான் .

ஆனால் சில ஆண்கள் இங்கு படித்து மேற்படிப்பை வெளிநாடுகளில் முடித்து பட்டம் பெற்றவர்களும் உள்ளனர் . அங்கு இஞ்சினியராக , டாக்டர் ஆக , சட்டத்தரணியாக நல்ல நிலையில் வேலை செய்வர் . சிலர் கஷ்டத்தின் மத்தியில் வெளிநாடு போய் அங்கு படித்தவர்களும் உள்ளனர் . சிலர் படிக்க முடியாத சூழ்நிலை அமைந்தமையால் வேலை செய்து கொண்டு இருப்பவர்களும் உள்ளனர் . உழைக்கத்தொடங்கி விடுவார் .
http://www.best-of-web.com/_images_300/Crying_Boy_Holding_His_Eye_100922-143606-424042.jpg
எனினும் சிலர் வேலை கிடைக்காது இங்கு படித்து பல்கலைகழகத்தில் பட்டம் பெற்று இருப்பார் . ஆனால் அவர் வெளிநாடு சென்று இறைச்சி வெட்டுதல் , வீடு துடைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள் . எப்பிடியாவது கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் . சம்பாதிக்க வேண்டும் . நமக்கு ஏற்ற வேலை கிடைக்கும் வரைக்கும் காத்து இருக்க முடியாது . கிடைத்த வேலையை செய்வோம் என்று நினைத்து தமது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உழைக்கிறார்கள் .

ஆனால் சிலர் இங்கு அப்பாவி பிள்ளையாக இருந்திருப்பான் . வெளிநாடு போனதும் தகாத நண்பர்களுடன் சேர்ந்து அவன் பெரிய ரவுடி கும்பல்களுடன் சேர்ந்து களவெடுத்தல் , வீடு புகுந்து கொள்ளை அடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகிறான் . அவன் தனது எதிர்காலம் பற்றி சிந்திப்பதில்லை . தாய், தந்தையர் மகன் பணம் அனுப்புவான் என்று பார்த்து காத்து இருப்பார்கள் . மகனை பற்றி யாரும் சொல்லி அவனின் நிலை பற்றி அவர்கள் தெரிந்து கொண்டால் அவர்கள் தூக்கம் இன்றி , உணவின்றி அழுது மாய்கிறார்கள் .

சிலர் குடிபானங்களுக்கு அடிமையாகி கஷ்டப்பட்டு உழைக்கும் பணம் எல்லாம் நண்பர்களுடன் சேர்ந்து குடித்து அழித்து கொள்கிறான் . தமது பெற்றோர்கள் பற்றி சிந்திப்பதில்லை . கடன் வாங்கினால் கொடுப்பதில்லை . இப்படி வெளிநாடு போன எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை . ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி .

அதிலும் பெற்றோர்களுடன் இருந்து வளரும் பிள்ளைகள் சிலர் நல்ல ஒழுக்கத்துடன் இருக்கிறார்கள் . சில ஆண்கள் இரண்டு நேரம் வேலை செய்து கஷ்டப்பட்டு இரவு, பகல் பாராது மாடாய் உலப்பவர்களும் உள்ளனர் . இவரைத்தான் இப்போதெல்லாம் நம்ம முடிகிறது இந்த உலகில் .
http://images.paraorkut.com/img/pics/images/c/crying_girl-2072.gif
ஒருவருக்கு திருமணம் பேசும் போது அவரை பற்றி தீர விசாரித்து தான் அவருக்கு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்கிறார்கள் . சிலர் அங்குள்ள ஆண்களை பற்றி விசாரிப்பதில்லை . மாப்பிள்ளை வெளிநாடு என்றவுடன் கல்யாணம் செய்து கொடுக்கிறார்கள் . பின்பு விசாரித்து பார்த்தால் அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருக்கும் .

மாப்பிள்ளை எந்த நாட்டில் இருக்கிறார் என்று விசாரித்து உங்களின் உறவினர்களை அவரை பற்றி விசாரித்து அந்த நாட்டில் உங்கள் உறவினர்கள் யார் இருக்கிறார்களோ அவர்களை தான் விசாரிக்க வேண்டும் . அவரை பார்த்து , பேசி அவரின் நிலைமைகளை அறிந்து கொள்ள வேண்டும் . எத்தனையோ பெண்கள் திருமணம் செய்து விட்டு காத்து இருக்கிறார்கள் தாம் எப்போது வெளிநாடு செல்வோம் என்று .  ஆனால் அவர் கல்யாணம் வந்து செய்து விட்டு போன போக்குத்தான் தொலைபேசி கூட கதைப்பதில்லை . சிலர் தொலைபேசி எடுத்து கதைத்து கொள்வார்கள் . எல்லாம் கொடுத்துவிட்டேன் விசாவுக்கு என்று சும்மா சொல்லி காலத்தை இழுத்து அடித்துக் கொண்டு இருப்பார்கள் .
http://www.indianshaadi.org/wp-content/uploads/2009/11/saree-indian-wedding-dress.jpg
சில ஆண்களுக்கு அங்கு விசா , காட் என்பன கிடைத்து இருக்காது . கஷ்டப்பட்டு உழைத்து பணம் சேர்த்து வைத்து இருப்பார்கள் . அவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் . வயதும் போய் விடும் . நாப்பது வயதில் தான் காட் கிடைக்கும் . அதுக்குப் பின்பு தான் கல்யாணம் . தமது நாட்டுக்கு வந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து ஒரு வருடத்துக்குள் அவர்களை எடுத்து சந்தோசமாக வாழ்வார்கள் .

எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை . யாரையும் இந்த உலகில் நம்ப முடியவில்லை . இதில் ஆண்கள் மட்டும் அல்ல . பெண்களையும் சேர்த்து தான் . பெண்களையும் இப்போது நம்ப முடியாது . ஆண்கள் அதிகம் . அதனால் தான் ஆண்களை பற்றி குறிப்பிட்டு இருந்தேன் . இப்போதைய நாட்டு நடப்பு இப்படித்தான் . அதனை தான் என் இந்த பதிவில் இட்டு உள்ளேன் .
http://ldread.files.wordpress.com/2010/04/crying_girl1.jpg
இப்படியான சம்பவங்கள் நிறைய இடம்பெறுகின்றன . வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் . கருத்துக்கள் வரவேட்க்கப்படுகின்றன .




Thursday, September 22, 2011

ஏறும் நடிகர்களின் சம்பளம்

http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/nnozizi//mywebdunia/UserData/DataR/rajani/images/restricted/24-12-2008/rajini6.jpg
முன்னைய காலத்தில் எல்லாம் நடிகர்கள் இலட்சத்தில் சம்பளம் வாங்கினார்கள் . இப்போதெல்லாம் கோடிகள் தான் . பல படங்கள் திரைக்கு வருகின்றன . அதில் விரல் விட்டு எண்ணக் கூடிய படங்கள் தான் வெற்றி அடைகின்றன .

பல தோல்விப் படங்கள் கொடுத்து ஒரு பட வெற்றியால் தலை நிமிர்வோரும் உண்டு . பல் தோல்வி படங்களை கொடுத்துக் கொண்டு இருக்கும் நடிகர்களும் உண்டு . இரண்டு படங்களுக்கு ஒரு படம் வெற்றி படம் கொடுப்போரும் உண்டு .
http://images.mylot.com/userImages/images/postphotos/2270859.jpg
படங்கள் பல கோடிகளை கொட்டி தயாரிக்கிறார்கள் . அந்த தயாரிப்பளருக்கு படம் வெற்றி பெற்று விட்டது என்றால் அவரது பணப்பை நிரம்பும் . அவரும் சந்தோசப்படுவார் . ஆனால், படம் தோல்வி அடைந்து போட்ட முதலுக்கு மோசமான நிலைமை ஏற்பட்டால் அந்த தயாரிப்பாளர் தனது சொந்த நிலம் , வீடு என்பவற்றை விற்க வேண்டிய நிலைமைகளும் உண்டு .
http://mimg.sulekha.com/tamil/asal/stills/asal-ajith-stills30.jpg
தயாரிப்பாளர்கள் சிலர் இரண்டு , மூன்று படங்கள் அவர்களின் தயாரிப்பில் தோல்வி அடைந்திருந்தாலும் ஒரு படம் இமாலய வெற்றி அடைந்து விட்டது என்றால் தப்பித்து விடுவார் . தயாரிப்பளருக்கும் நல்ல காலம் இருக்க வேண்டும் .
http://www.kollywoodtiger.com/wp-content/uploads/2009/07/Vijay_Vettaikaran_Stills1.jpg
சினிமாவில் எத்தனையோ பேர் ஒரு படத்தின் வெற்றிக்கு காரணகர்த்தாவாக இருக்கின்றனர். எத்தனையோ பேர் சினிமாவை நம்பித்தான் தமது வாழ்க்கையை நம்பி இருக்கிறார்கள் . நாமெல்லாம் மூன்று மணித்தியாலங்களுக்கு ஒரு படத்தை பார்த்து விட்டு இந்த படம் உதவாது , இது நல்ல படம் என்று சொல்லி விட்டு வந்து விடுவோம் . ஆனால் , அவர்கள் எல்லாம் எவ்வளவு மாதங்கள் கஷ்டப்பட்டு ஒரு படத்தை எடுத்து முடிக்கிறார்கள் . அதன் பின்னணியில் எத்தனை தொழில் நுட்பவியலாளர்கள் , கலைஞர்கள் போன்றோரின் கடின உழைப்பு இருக்கிறது தெரியுமா ?
http://www.mahaandhra.com/uploadedimages/actor-surya%2010-09-2011.jpg
நடிகர்கள் கோடிகள் கேட்கிறார்கள் . தமது சம்பளத்தை உயர்த்துகிறார்கள் . சிலர் நல, உதவிகள் , சிறுவர்களின் படிப்புக்கு உதவி செய்கிறார்கள் , வறியவர்களுக்கு உதவுகிறார்கள் . சில நடிகர்கள் சத்தமில்லாமல் உதவிகளை செய்து மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் . சில நடிகர்கள் எல்லோருக்கும் பரப்பி நான் இந்த உதவி செய்தேன் , அந்த உதவி செய்தேன் என்கின்றனர் . எதுவோ ஏழை , எளியவர்களுக்கு உதவிகள் சரிவர கிடைத்தால் போதும் .
http://www.filmyfriday.com/wp-content/uploads/2009/09/Vikram3.jpg
நடிகர்களை வைத்து இலாபம் சம்பாதிக்கும் தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்கள் எல்லாம் நடிகர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுக்கிறார்கள் . ஏனெனில் , அவரின் வலியு அப்படி இருக்கிறது . படம் நன்றாக ஓடுகிறது . வெற்றி அடைகிறது . இந்த நடிகரை வைத்து நாம் படம் பண்ணினோம் என்றால் நாம் போட்ட முதலுக்கு பத்து மடங்கு இலாபம் உழைக்கலாம் என்றால் நடிகர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுக்கத்தானே வேண்டும் .
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnECcuz5FwIJCin9ONW-xohqW-169OOzAfpOERDKjVlcG9uZ8XqYj4QI4sYNekv6YGPX0S14pWUztUZlRXdGqNzJk318XaDKd5H9UsmSAlNKiD20eb1ojV0tQX86YvyJZ9_DSIXyIJxj0/s1600/Siruthai+tamanna+karthi+stills7.jpg
நடிகர்களின்  மார்க்கட் நிலவரம் உயர்கிறது . நல்ல படங்கள் கொடுக்கிறார்கள் . நல்ல ஒப்பினிங் இருக்கிறது . ரசிகர்களின் கூட்டம் அதிகம் படம் பார்க்க வருகிறார்கள் . படத்தில் போட்ட முதலுக்கு மேல் இலாபம் கிடைக்கிறது . விநியோகஸ்தர்கள் சந்தோசம் அடைகிறார்கள் .
http://www.ooho.co/oohostar/staradmin/cateImage/dhanush%20tweets.jpg
இப்போதைய நிலவரப்படி நடிகர்கள் எவ்வளவு கோடிகள் தமது சம்பளமாக பெறுகிறார்கள் என்று பார்த்தால் முதல் இடத்தில் இருப்பவர் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜனி தான் . எவ்வளவு கோடி தெரியுமா ? 24 கோடிக்கு மேல் . நம்ம உலக நாயகன் கமல் 20 கோடி. நம்ம தல அஜித் , இளைய தளபதி விஜய் இருவரும் 15 கோடி சம்பளமாக பெறுகிறார்கள் .
http://filmnews.bizhat.com/wp-content/uploads/2011/08/Simbu-remix.jpg
இன்றைய இளைய உள்ளங்களின் நாயகன் சூர்யா 15 கோடியும் அதனுடன் தெலுங்கு உரிமையையும் , சீயான் விக்ரம் 10 கோடி , பையா கார்த்தி 10 கோடியும் அதனுடன் தெலுங்கு உரிமையும் , பொல்லாதவன் தனுஷ் 7 கோடி , மன்மதன் சிம்பு 5 கோடியும் அதனுடன் சென்னை உரிமையும் , விஷால் 3 கோடி , ஆர்யா 2 கோடி , ஜீவா 1.5 கோடியும் சம்பளமாக பெறுகிறார்கள் . ஏனைய நடிகர்கள் இவர்களை விட சம்பளம்  குறைவாக பெறுகிறார்கள் .
http://farm5.static.flickr.com/4030/4339536091_7b022b774a.jpg
நடிகைகளுக்கு இலட்சங்கள் தான் சம்பளம் . அவர்களில் இப்போதைய மார்க்கடில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் முதல் இடம் அனுஷ்காவுக்குத்தான் . அவரை விட குறைவாகத்தான் ஏனைய நடிகைகள் . படம் வெற்றியோ, தோல்வியோ அவர்களின் சம்பளம் அப்படியே கொடுக்க வேண்டும் . வெற்றி படங்கள் கொடுத்துக் கொண்டே இருந்தால் அவர்களின் சம்பளம் இன்னும் உயரும் . ம்ம்மம்மம்ம்ம்ம் அம்மாடியோவ் .

Wednesday, September 21, 2011

வெளிநாடு வெளிநாடு என்று படும்பாடு ..............

http://pixdaus.com/pics/1221489472xNPKIgk.jpg
எல்லோரும் வெளிநாடு போக ஆசைப்படுகிறார்கள் . எல்லோருக்கும் அந்த ஆசை எளிதில் கிடைத்து விடுவதில்லை . சிலருக்குத்தான் அந்த பாக்கியம் கிடைக்கிறது . குடும்பத்தில் வறுமை, கஷ்டம் , பிரச்சனை , குடும்பத்தை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்து வெளிநாடு செல்கின்றார்கள் .

நகைகளை விற்று , வீடுகளை விற்று , பணம் வட்டிக்கு வாங்கி வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள் . வெளிநாடு சென்றவுடன் உடனே வேலை கிடைத்து விடுமா ? அங்கு, தேடி இங்கு தேடி வேலைக்கு அலைகிறார்கள் . உடனே விசா கிடைக்குமா . பத்து வருடங்கள் ஆகியும் விசா கிடைக்காமல் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் . அவர்கள் ஓடி , ஒழித்து ஒருநேர வேலை என்றாலும் செய்து தமது உறவுகளுக்கு பணத்தை அனுப்புகிறார்கள் . 

 வெளிநாடுகளில் வேலை என்ன ஆசிரியர், வைத்தியர் , தாதி என்று உடனே வேலை கிடைத்து விடுமா . ஒரு ஹோட்டல் ஒன்றில் சமையல்காரர் , மரக்கறி வெட்டுபவர் , பாத்திரங்கள் கழுவுபவர், பலன்கள் புடுங்குதல் போன்ற வேலைகள் தான் கிடைக்கும் . மொழி படித்தால் கொஞ்சம் நல்ல வேலைகள் பார்க்கலாம் . உங்கள் அறிவுக்கும் , நீங்கள் வாங்கிய பட்டங்களுக்கும் , நீங்கள் செய்யும் வேலை எதிர்மாறானதாக இருக்கும் . 
http://media-cdn.tripadvisor.com/media/photo-s/01/03/4f/ab/resturant-on-top-floor.jpg
வெளிநாட்டு பணத்தை இங்கே அனுப்பினால் அதுதான் பெறுமதி கூட . ஆனால், அங்கெ அதே பெறுமதி தான் . தாம் கஷ்டப்பட்டு உழைத்து ஒருநேரம் சாப்பிட்டு தமது கடனை கட்ட வேண்டுமே என்ற எண்ணத்தில் தமது சம்பளத்தை தமது உறவுகளுக்கு அனுப்புகிறார்கள் . சரியாக கஷ்டப்பட்டு இரண்டு வருடங்களில் தமது கடன்கள் எல்லாவற்றையும் அடைத்து விடுகிறார்கள் . 

பின்பு தமது குடும்பத்தில் இருக்கும் அக்கா , தங்கைமாருக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் , சீதனம் கொடுக்க வேண்டும் என்று அவர்களின் பொறுப்புகள் இருக்கின்றன . தன்னை மெழுகுவர்த்தியாக உருக்கி கடும் குளிரும் பாராது கஷ்டப்பட்டு உழைத்து முறிந்து அந்த பிரச்சனைகள் எல்லாவற்றையும் தீர்க்கிறான் .
http://img.ehowcdn.com/article-page-main/ehow/images/a06/2a/1m/better-waiter-800x800.jpg
உடனே தாயார் போன் பண்ணி தம்பி எனக்கு நெஞ்சு வலி , தலை வலி என்று தொலைபேசியில் அழுவார் . பின்பு அவருக்கு பணத்தை அனுப்புவான் . அவர்கள் இங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் . மகன் பணம் அனுப்புகிறான் . எனக்கு என்ன ? என்று ஆடம்பரமாக இருப்பார்கள் . மரக்கறி சந்தைக்கு போய் பொருட்கள் வாங்கி விட்டு பணத்தை வெளிநாட்டு தாள்களை கொடுத்து விட்டு வருபவர்களும் உள்ளனர் . 

இப்படி எல்லாம் தனது பெற்றோர்களையும் , உறவுகளையும் பார்த்து சரியாக கஷ்டப்பட்டு இருக்கும் நிலையில் அவனது வயதை பார்த்தல் முப்பத்தைந்து ஆகி இருக்கும் . பின்பு அவன் தனது எதிர்காலத்தை பார்க்க வேண்டும் . பின்பு பெற்றோர் பார்க்கும் பெண்ணை அவன் தனது ஊருக்கு வந்து கல்யாணம் செய்து பின்பு அந்தப் பெண்ணை ஒரு வருடத்துக்குள் தனது நாட்டுக்கு கூப்பிடுகிறான் . பிபு தனது வாழ்க்கையை சந்தோசமாக வாழ்கின்றான் . 
http://www.best-free-wallpaper.com/cute/wp-content/uploads/2010/10/Opel-Period-Photos-of-Winter.jpg
கடும் குளிர் , கஷ்டமான வேலை என்று அவன் படும் கஷ்டங்கள் ஏராளம் . எல்லோரும் வெளிநாடு என்றவுடன் மிகவும் சுலபமாக நினைத்து விடுகிறார்கள் . இங்குள்ளவர்கள் எனது மகன் வெளிநாட்டில் இருக்கிறான் என்று சொல்லிக் கொண்டு சுதியாக வாழ்கின்றார்கள் . தம்பி மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றித் திரிகிறான் , தங்கை பைக்கில் தோழிகளுடன் ஊர் சுற்றி திரிகிறாள் . என்ன என்று கேட்டால் அண்ணன் வெளிநாட்டில் இருக்கிறான் . எங்களுக்கு என்ன கவலை ? என்கின்றனர் . அவன் படும்பாடு இவர்களுக்கு தெரிவதில்லை. 

இப்படித்தான் எல்லா வீடுகளிலும் நடக்கின்றது . ஒரு வீட்டில் அப்பாவோ , அண்ணனோ வெளிநாடுகளில்  இருந்து பணம் அனுப்புகிறார்கள் . எல்லோரும் கஷ்டத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் . அவர்களும் மனிதர்கள் தானே . வெளிநாடு வெளிநாடு என்று அதிக பணத்தையும் , சொத்துகளையும் இழந்தவர்களின் கவனத்துக்கு .............




Tuesday, September 20, 2011

சிந்திக்க சில நிமிடம் .........

http://www.webanddesigners.com/wp-content/uploads/2010/04/manage-work/efficiently.jpg
* அழுவதற்க்கு உனக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன என்றாலும் , உங்கக்கு சிரிப்பதற்க்கு இலட்சம் காரணங்கள் இருக்கின்றன . 

* முடியாது என்பது மூடத்தனம் . முடியும் என்பதே மூலதனம் . 

* எந்த விசயத்திலும் அக்கறை நம்மை உயர்த்தும். கவலை நம்மை தாழ்த்தும் .
http://thesavageworld.files.wordpress.com/2011/03/hard-work.jpg
*வாழ்க்கை ஒரு வட்டம் என்பார்கள் . வாழ்க்கை ஒரு புதிர் என்பர் . வாழ்க்கை ஒரு கணக்குத்தான் என்பர். இதில் திறமையை கூட்டி , தவறைக் கழித்து , உழைப்பை பெருக்கி , காலத்தை வகுத்து செயற்பட்டால் வாழ்வில் வசந்தம் தான் .

* சம்பாதித்தால் மட்டும் ஒருவன் பணக்காரனாக ஆகிவிடுவதில்லை . அந்தப் பணத்தில் ஒரு பகுதியை அவன் சேமித்து வைப்பதே மிகவும் முக்கியம் .
http://www.real-estate-marketing-link.info/image-files/work-hard.jpg
* உழைத்து , உழைத்து எல்லாம் சேமித்து வைத்தால் அது ஒன்றுக்கும் உதவாது . கொஞ்ச பணத்தை ஏழை , கஷ்டப்பட்ட சிறார்கள் , ஏழை பிள்ளைகளின் படிப்பு போன்றவற்றுக்கு கொடுத்து உதவினால் இன்னும் சீரும் , சிறப்புடனும் வாழலாம் .

* உடல் இருந்தும் உழைக்காதவர்கள் , கையிருந்தும் ஈயாமல் இருப்பவர்கள் சோம்பேறிகள் .

* யோசித்து , சிந்தித்து செயலில் இறங்கினால் வெற்றி நமதே .

* இடது கை , வலது கை என இரு கைகளுடன் எமக்கு புன்னகையும் , நம்பிக்கையும் இருந்தால் தன்னம்பிக்கை பிறக்கும் . 


Monday, September 19, 2011

அதிகரித்துவரும் விவாகரத்துகள்


http://seekmediation.com/images/0001%20-Divorce%20Court%20Drama.JPG
எவ்வளவோ கஷ்டப்பட்டு பெற்றோர் தமது மகளுக்கோ / மகனுக்கோ கல்யாணம் செய்து வைக்கிறார்கள் . சில கல்யாணம் காதல் கல்யாணத்தில் போய் முடிகிறது . எந்த கல்யாணம் ஆனாலும் எல்லா கல்யாணங்களும் நீண்ட நாட்களுக்கு அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்கிறார்களா ?
http://loveattraction.blog.com/files/2010/08/divorce5.jpg
முதலில் ஒரு பெண்ணை ஒரு ஆணுக்கு கல்யாணம் செய்து கொள்வதற்க்கு முதல் பெண் வீட்டுக்காரர் ஆணை பற்றி விசாரித்து , குடும்ப சூழ்நிலைகளை பற்றி விசாரிக்கிறார்கள் . அதே போல் தான் ஆண்வீட்டுக்காரர்களும் பெண்ணை பற்றி விசாரிக்கிறார்கள் . குடும்பத்தை பற்றி விசாரிக்கிறார்கள் . பின்பு கல்யாணம் செய்து வைக்கிறார்கள் . அதுவும் முக்கியமாக ஜாதகம் பொருத்தமாக இருக்க வேண்டும் . இப்போது எல்லாம் நூறு , இருநூறு ஜாதகம் பார்த்தால் தான் ஏதாவது ஒன்று சரிவருகிறது . அப்போ பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டு பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார்கள் என்று யோசியுங்கள் .
http://www.blogcdn.com/www.walletpop.com/blog/media/2008/11/divorce.money.jpg
கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர் , இருமனம் சேர்ந்து ஒருமனம் ஆகும் திருமணம் என்று இருமனங்களை ஒன்று சேர்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள் . ஆயிரங்காலத்துப் பயிர் என்பர் திருமணத்தை. அத்தகையப் பயிரானது நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களாகி இன்று அடிக்கும் சூறாவளியில் சிதைந்துப் போகிறது. கடைசியில் விவாகரத்தில் முடிகிறது .
http://www.moveoneinc.com/blog/wp-content/uploads/2011/03/divorce-money-fight.jpg
கைநிறைய சம்பளம் , கண்டதும் காதல் பின்பு மோதல் , கட்டற்ற சுதந்திரம் போன்ற இக்காலகட்ட தொழில்நுட்ப வளர்ச்சி போன்றன இந்த விவாகரத்துகள் ஏற்பட காரணிகளாகின்றன . காதலிக்கும் போது எல்லாவற்றையும் கதைத்து பேசி முடித்து விடுகிறார்கள் . பின்பு திருமணம் செய்து கொண்டவுடன் பேசுவதற்க்கு ஒன்றும் இல்லை . 
http://www.insightempire.com/Divorcelawyerconsultation/divorce%20lawyer.gif
இன்றைய இளம் தலைமுறையினர் எந்த அளவுக்கு வேகமாக திருமண வாழ்வில் இணைகிறார்களோ அதே வேகத்தில் மண வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள் . முறித்துக் கொள்கிறார்கள் . பின்விளைவுகளை பற்றி யோசிப்பதில்லை . விவாகரத்ஹ்டு கோருகிறார்கள் . 

வீட்டில் ஒரு மனஸ்தாபம் , பிரச்சனை , புரிந்துணர்வு இன்மை , சந்தோசமின்மை, இருவரும் ஒருவரை ஒருவர் மனம்விட்டு பேச நேரம் கிடைப்பதில்லை , என்று பிரச்சனைகள் நீண்டுகொண்டே போகின்றன . இப்போது எல்லாம் கணவன் அதிக சத்தமாக குறட்டை விடுகிறார் என்று விவாகரத்து கோருகிறார்கள் . மனைவி அதிக உடல்பருமனாக இருக்கிறார் எனக்கு விவாகரத்து வேண்டும் என்று கணவன் கேட்கிறார் , கணவன் குடித்துவிட்டு அடிக்கிறார் , வீட்டுக்கு நேரத்துக்கு வருவதில்லை , சண்டை பிடிக்கிறார் என்று மனைவிமார் விவாகரத்து கோருகிறார்கள் . கணவன்மார் சொல்கிறார்கள் மனைவி வீட்டில் சமைப்பதில்லை , சண்டை பிடிக்கிறார் , கோபமாக பேசுகிறார் , வாய்காட்டுகிறாள் என்று கணவன்மார் விவாகரத்து கோருகிறார்கள் .
http://www.burtfeldman.com/familyblog/wp-content/uploads/2009/11/heart-puzzle-300x300.jpg
இதனால் எல்லா நாடுகளிலும் நீதிமன்றங்களில் விவாகரத்து கோரி நிற்கும் வழக்குகள் நிறைந்து காணப்படுகின்றன . இதற்க்கு முடிவு என்ன என்று தெரியாமல் விழிக்கிறார்கள் , முழித்துக் கொண்டு இருக்கிறார்கள் . முதலில் எல்லா குடும்பங்களிலும் எல்லோரும் சந்தோசமாக , ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் . விவாகரத்துகள் குறைய வேண்டும் .
http://pacejmiller.files.wordpress.com/2010/06/indian-wedding.jpg
கணவன், மனைவி இருவரும் தமது பிரச்சனைகளை மனம் விட்டு பேச வேண்டும் , சந்தோசங்களை , சுக, துக்கங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் . நிகழ்ச்சிகள் , திருமண வைபவங்களில் இருவரும் சந்தோசமாக சென்று வர வேண்டும் . மற்றவர்கள் எவ்வாறு சந்தோசமாக இருக்கிறார்களோ அதே போல் நாமும் இருக்க வேண்டும் என்று இருவரும் பேசி சந்தோசமாக வாழ நினைக்க வேண்டும் . வேலை லீவு நாட்களில் இருவரும் பூங்கா , பீச் என்று மனதுக்கு ஆறுதல் தரும் இடங்களுக்கு சென்று வர வேண்டும் . 
http://manolobrides.com/images/2008/02/coupleanddog.jpg
சில தம்பதியினர் எவ்வளவு சந்தோசமாக வாழ்கிறார்கள் . ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து , சந்தோசமாக . எண்பது வயதிலும் காதலர்கள் போல் சந்தோசமாக இருக்கும் தம்பதியினரும் இவ்வுலகில் இருக்கிறார்கள் தானே . மனஸ்தாபம் எல்லோருக்கும் வரும் . கோபம் எல்லோருக்கும் வரும் . அதுக்கு தகுந்தபடி நாம் அனுசரித்து நடந்து கொண்டால் , ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் வாழ்வில் வசந்தம் வீசும் . விவாகரத்துகளும் குறையும் . தம்பதியினருக்கு இடையில் ஒற்றுமை மலரும்.விவாகரத்துகள் குறைய வேண்டும் . எல்லோரும் சந்தோசமாக இருக்க வேண்டும் . வாழ்க வளமுடன் .




Sunday, September 18, 2011

கணனியில் அதிக நேரம் செலவிடுபவரா நீங்கள் ?

http://office-turn.com/wp-content/uploads/2011/06/modern-metal-black-computer-table-kids.jpg
இப்போது எல்லோர் வீட்டிலும் கணணி இருக்கும் . இது அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது . நாம் நீண்ட நேரம் கணணியில் இருந்து வேலை செய்யும் பொது ஒரே இடத்தில் இருந்து கொண்டு வேலை செய்கின்றோம் . இதனால் கழுத்து வலி உண்டாகின்றது . 
http://caroljcarter.com/wp-content/uploads/2010/11/student-computer-test.jpg
ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதினால் உடலின் இயக்கங்களும் குறைகின்றன . கண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது . கண்கள் ஒரே நேரத்தில் வேலை செய்வதால் கண்கள் சோர்வு அடைகின்றன . கண்களில் கருவளையம் ஏற்பட வாய்ப்புகளும் உண்டு . 

இளம் வயதினர் பலருக்கு தலைவலி அதிகம் ஏற்படுகிறது . அதற்க்கு காரணம் அதிக நேரம் கணனியின் முன்னால் உட்காந்து இருப்பது தான் காரணம் . இடைக்கிடை கண்களை அசைத்து கொள்ள வேண்டும் . ஒரே இடத்தில் அதிக நேரம் இருக்காமல் கொஞ்ச  நேரம் நடந்து விட்டு கணணி முன்பு உட்காருங்கள் . இந்த தலைவலியை குறைக்கலாம் . 
http://www.slhs.us/home/180002483/180002483/images/P1020594.JPG
முதுகு வலி கூட ஏற்படுகிறது . நாம் கதிரையில் உட்காரும் போது நிமிர்ந்து உட்கார வேண்டும் . கூனி இருக்க கூடாது . இதனால் முதுகு கூனுகிறது . முதுகு வலி கூட ஏற்படுகிறது . கைகளுக்கும் சிறிது ஓய்வு கொடுக்க வேண்டும் . 

எனவே கணணியில் வேலை செய்பவரா நீங்கள் . கவனம் . ஓய்வு எடுங்கள் . தலைவலி , முதுகுவலி போன்றன வராமல் பாதுகாத்து கொள்ளுங்கள் .