Sunday, January 1, 2012

புது வருடத்தில் என் முதல் பதிவு


http://4.bp.blogspot.com/_2gG6QRi8fNA/TQ2lCbBbHfI/AAAAAAAAAXQ/0EBKnXgbX-0/s1600/1.gif
2011 ஆம் ஆண்டை விடைகொடுத்து விட்டு 2012 ஆம் ஆண்டில் நாம் எல்லோரும் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம் . புதிய சிந்தனைகள் , புதிய உத்வேகத்துடன் , புது பொலிவுடன் இந்த ஆண்டை வரவேற்போம் .

எனக்கு பிடித்த விடயங்கள், தெரிந்த விடயங்கள் , அறிந்த விடயங்கள் என்பவற்றை எனது தளத்தில் பதிவிடுவது வழமை . பல நண்பர்கள் எனது பதிவுகளுக்கு தமது கருத்துக்களை தெரிவித்து கொண்டுள்ளனர் . நண்பர்களின் ஊக்கத்தாலும் , பல நண்பர்கள் எனது தளத்துக்கு வந்து எனது பதிவுகளை வாசிப்பதாலும் தான் நான் பல பதிவுகளை பதிவுடுகிறேன் .

ஒவ்வொரு வித்தியாசமான பதிவுகளாகவும் , எல்லோருக்கும் பிடித்த விடயங்கள் பற்றிய விடயங்களை எனது பதிவுகளில் இட்டு வருகிறேன் . சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகள் ஆயின் பல பதிவர்கள் வருகிறார்கள் . ஆனால், சில நல்ல எல்லோருக்கும் தேவையான , அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் என்றால் பார்வையாளர்களின் வரவு குறைவாகவே இருக்கும் . அதனால் , இடைக்கிடை சினிமா சம்பந்தப்பட்ட விடயங்களை சேர்த்துக் கொள்வது வழமை . 

போன ஆண்டும் பல முக்கிய , காத்திரமான பதிவுகளை இட்டுள்ளேன் . இவ்வருடமும் பல நல்ல விடயங்களை பகிர்ந்து கொள்வேன் என நம்புகிறேன் . எல்லோருக்கும் மீண்டும் எனது புது வருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

4 comments:

குறையொன்றுமில்லை. said...

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

SURYAJEEVA said...

சினிமா சம்பந்தப் பட்ட பதிவுகள் என்றால் என் வருகை இருக்காது என்று இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்...

Pavi said...

நன்றி லக்ஷ்மி அம்மா . உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

Pavi said...

நன்றி ஜீவா . ஆமாம். உங்களது வருகை இருக்காது . உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் .