எல்லோரையும் மிகவும் கவர்ந்த பாடலாகவும் , நல்ல வரிகளோடும் பாலசுப்ரமணியம் மற்றும் சித்திராவின் குரல் வளத்தோடும் அண்மையில் வெளிவந்த பாடல் நாணயம் படத்தில் இருந்து வெளியாகிஉள்ளது . எல்லோருக்கும் விளங்கும் வரிகளோடும் புரிகின்ற வார்த்தைகள் ஆகவும் இருக்கின்றது பாடல் . எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது . நீண்ட நாட்களுக்கு பிறகு எஸ் .பி, சித்திரா குரலில் பாடலை தந்தது அருமையிலும் அருமை . மிகவும் ரசித்து பாடி இருக்கிறார்கள் இருவரும் . பட காட்ச்சிகளும் அருமையாக எடுத்து இருக்கிறார்கள் . ரசிக்கும் படியாக உள்ளது .
இதோ உங்களுக்காக வரிகளும் , பட காட்ச்சியும் .........
பெண் : நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண் மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
தடுமாறி போனேன் அன்றே
உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை
கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே
உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை
நேசிக்கும் .
ஆண் : நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண் மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
தடுமாறி போனேன் அன்றே
உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை
கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே
உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை
நேசிக்கும் .
பெண் :கண்ணாடி முன்னே நின்றே தனியாக நான் பேச
யாரேனும் ஜன்னல் தாண்டி பார்த்தால் ஐயோ
உன் பக்கம் தாழ்ப்பாள் போட்டும் அறையினுள் நீ வந்தாய்
கை நீட்டி தொட்டு பார்த்தேன் காற்றை ஐயோ
ஆண்: என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தே வாடுதே
என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ
வாராதோ அந்நாளும் இன்றே காண்
பெண் : என் தூக்கம் வேண்டும் என்றாய் தர மாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ள சாவி கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடி தேடி நான் பேசி பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்
பெண் :அன்றாடம் போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள்
காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டு செல்வாய் என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேன்
ஆண்: நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண் மீன்களின் கூட்டம் என் மேலே
பெண்: பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
ஆண் : தடுமாறி போனேன் அன்றே
உன்னை பார்த்த நேரம்
பெண்: அடையாளம் இல்லா ஒன்றை
கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஆண்:ஏன் உன்னை பார்த்தேன் என்றே
உள்ளம் கேள்வி கேட்கும்
பெண்: ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை
நேசிக்கும் ....
13 comments:
super pavi. i like it.
super lyrics.
prasanna is very handsome hero.
is it pavi?
super song.
super sp, chithra voice.
pavi enakkum intha paadal pidiththu irukkirathu .
ரொம்பவே அழகான பாடல், கேட்டு மயங்கினேன்.. இப்போ பாத்தும் மயங்கியாச்சு.. இதுவே படம் பாக்கத் தூண்டுகிறது.. வரிகள் தந்தமைக்கு நன்றி.
really superb song.
thanks for the post.
இந்தப்பாடலைக்கேட்கும் நேரம் உங்கள் பதிவை பார்க்கக்கிடைத்தது, வரிகளுக்கு நன்றிகள்.
பெண் : என் தூக்கம் வேண்டும் என்றாய் தர மாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ள சாவி கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடி தேடி நான் பேசி பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய் ...
இது ஆண் பாடியது என்றே வந்திருக்க வேண்டும் :)
nalla paatu varikal piramaatham. ithai etuththu thantha ungkalukku vaalththukkal.
நன்றிகள் . பெயர் குறிப்பிடாத நண்பர்களுக்கு .
நன்றி ராகவ்
நன்றி common man
நன்றி செந்து.
நன்றி சரவணன்
Post a Comment