மகனே படி , படுத்து படுத்து எழும்பாதே . சோம்பேறித்தனமாக இருக்காதே . இது தான் எல்லோருடைய வீட்டிலும் நடக்கும் . இந்த வார்த்தையை தாயோ , தந்தையோ தினம் தினம் உச்சரிப்பார்கள் . காலையில் நேரத்துக்கு எழும்பி நமது கடமைகளை செய்து முடிக்க வேண்டும் . சோம்பேறித்தனமாக பஞ்சியாக இருக்கிறது இன்னும் கொஞ்ச நேரம் படுப்பம் என்று ஜோசித்து படுத்து பின்பு கண் முழிப்பார்கள் காலை பத்து மணிக்குத் தான் .
எல்லோரும் தத்தமது கடமைகளை சரி வர செய்ய வேண்டும் . வேலைக்கு செல்பவர்கள் செல்ல வேண்டும். படிப்பவர்கள் படிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தமது தொழிலில் நேர்மை , படிப்பில் கவனம் தேவை . நாம் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு செல்வதற்க்கு முன்னேற்றம் தேவை . அந்த முன்னேற்றத்தின் முதல் எதிரியே சோம்பல் தனம் தான் .
நீ ஒரு சோம்பேறி , ஒன்றுக்கும் உருப்படாதவன் என்று ஒருவனை பார்த்து இன்னொருவர் பேசுவார் . அப்போது எவ்வளவு கோபம் வருகிறது . நாம் ஏன் அவர் அப்படி பேசும்படி நடந்து கொள்ள வேண்டும் . கடைக்கார முதலாளி வேலை செய்யாமல் தொழிலாளி இருந்தால் கூட இப்படித்தான் பேசுவார் . குறித்த நேரத்துக்கு நித்திரைக்கு சென்று குறித்த நேரத்துக்கு எழும்பி விட வேண்டும்.
குறித்த வேலையே எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்து முடிக்க வேண்டும் . அதுதான் முக்கியம் . சுலபமாக செய்து முடிக்க வேண்டிய வேலையே நேரம் தாழ்த்தி செய்தால் என்ன சொல்வார்கள் தெரியுமா . இவனிட்ட வேலையே குடுத்தா விடியும் . அது ஒரு சோம்பேறி என்று சொல்வார்கள் .
காலையில் எழுந்து உடல்பயிற்சி செய்து துரிதமாகவும் , வேகமாகவும் எமது கடமைகளை செய்து முடிக்க வேண்டும். இன்று நடக்க வேண்டிய காரியங்களை செவ்வனே முடிக்க வேண்டும் . நாளைக்கு நாளைக்கு என்று சேமித்து வைக்க கூடாது . சோம்பேறித்தனத்தை விட்டு ஒழியுங்கள் .
4 comments:
சிறப்பான ஆலோசனைகள்..
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...
நல்ல ஆலோசனைகள் பவி.
நன்றி தனபாலன்
நன்றி குமார்
Post a Comment