Thursday, August 30, 2012

சிந்தனைக்கு ...................



வாழ்க்கையில் ஆயிரம் தடைகள்  வந்தாலும் அவற்றை தன்னம்பிக்கையுடன் எதிர்த்து முன்னேறு . 

காதலில் தோல்வி என்று கலங்காதே . ஒரு மீன் இல்லாவிட்டால் இன்னொரு மீன் . 

தோல்விகளில் தான் நாம் அதிக பாடம் கற்றுக்கொள்கிறோம் . 

நல்லவனுக்குத்தான் சோதனைகளும், வேதனைகளும் அதிகம் . 

தீய பழக்கங்களுக்கு அடிமையாகி நம்மையே நாம் அழித்துக் கொள்கிறோம் . நோய் வந்து இறுதிக் காலத்தில் தான் பின்பு வாழ்க்கையை பற்றி சிந்திக்கின்றோம் .பயன் ஏதும் இல்லை .

எம்மை பற்றி நாமே புகழ்வதை விட இன்னொருவர் எம்மை பற்றி புகழும் போது அதில் ஒரு திருப்தி இருக்கிறது . இகழும் போது முகம் கறுக்கிறது.

ஒருவன் வாழ்க்கையில் தந்தை , தாய் ஆகும் போது தான் அவனுக்கு வாழ்வின் அர்த்தம் புரிகிறது .

ஒருவர் பெற்றோர் என்ற அந்தஸ்தை அடையும் போது தான் அவர்களின் பெற்றோர் பட்ட கஷ்ட , துன்பங்கள் விளங்குகிறது . 

நமக்கு துன்பம் , கஷ்டம் என்று வரும் போது தான் நாம் எவர் நல்லவர் , எவர் கெட்டவர் என்று அறிகிறோம் .

கஷ்டத்தில் தோள் கொடுக்கும் போது செய்யும் உதவி தான் பேருதவி . 


4 comments:

அம்பாளடியாள் said...

நல்லன சொல்லிச் செல்லும் வரிகள் சிறப்பு தொடர வாழ்த்துக்கள் .

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பல கருத்துக்கள்...

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

நன்றி...

Pavi said...

நன்றி அம்பாளடியாள் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Pavi said...

நன்றி தனபாலன் அவர்களே