Friday, March 29, 2013

ஒவ்வொருவரதும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு ....




நாம் யாராக இருந்தாலும் எமக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று தான் நினைக்கின்றோம் . ஒருவருக்கு அமையும் வாழ்க்கைத்துணையாக அமைபவர் புரிந்துனர்வுள்ளவராகவும் , பண்பில் சிறந்தவராகவும் இருக்கும் பட்சத்தில் அவர்களின் வாழ்வில் வசந்தம் வீசும் .

தமக்கு வரப்போகும் துணை எப்படி இருக்க வேண்டும் என ஒவ்வொருவரும் எண்ணி இருப்பார்கள் . நடிகர்கள் மாதிரியோ , நடிகைகள் மாதிரியோ இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட ஒரு சுமாரான , பார்ப்பதற்க்கு அழகாக , நல்ல குணம் கொண்டமைந்தவராக  இருந்தால் போதும் என்று எண்ண வேண்டும் . 

நாம் எதிர்பார்த்தது போல் நமக்கு வாழ்க்கை துணை அமைந்து விட்டால் இறைவா . நீ இருக்கிறாய் அப்பா. எனக்கு ஒரு நல்ல வழி காட்டி விட்டாய். இந்த உலகில் நானும் ஒரு அதிஸ்டசாலி என்று எண்ணுகிறோம் . அதே நாம் எதிர்பார்த்தது அமையாவிடில் இறைவனை கோபித்துக் கொள்கின்றோம் .இது இயற்கையாய் எல்லோருக்கும் அமைவது தான். 

வாழ்க்கையில் அன்பு, அரவணைப்பு , மோதல், புரிதல் , நிம்மதி , சந்தோசம் , துக்கம் என எல்லாம் இருக்கும் . ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து வைத்து இருந்தால் சண்டை, சச்சரவு இன்றி நிம்மதியாக இருக்கலாம் . 

வாழ்வில் சந்தேகம் என்ற கொடிய நோய் இல்லாமல் இருக்க வேண்டும். சந்தேகம் என்ற ஒன்று வந்து விட்டால் தினம் தினம் நிம்மதியற்ற வாழ்வு தான். சண்டை , சச்சரவு தான். அன்றைய பிரச்னையை அன்றே இருவரும் பேசி தீர்வு காண வேண்டும் . பிரச்சனைகளை இழுத்துக் கொண்டு போக கூடாது . 

ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்திருக்க வேண்டும். அதுபோல் நம்பிக்கையும் வைத்ஹ்டிருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இருத்தல் வேண்டும் . மனதில் ஏதாவது கஷ்டங்கள் , துன்பங்கள் இருந்தால் ஒருவருக்கொருவர் அதனை கூறி மனதுக்கு ஆறுதலான விடயங்களை கூற வேண்டும் . இருவருக்கும் இடையில் நட்பு இருக்க வேண்டும் . மனம் விட்டு வெளிப்படையாக இருவரும் பேச வேண்டும். அப்போதுதான் சண்டைகள் வராது . 

ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல வாழ்க்கை  கிடைத்தும் அதை அவர்கள் கொண்டு செல்லும் பாங்கில் , அவர்களது கையில் தான் உள்ளது . நம் வாழ்க்கை நமது கையில் . நாம் நடந்து கொள்ளும் பாங்கில் உள்ளது . அதை நாம் சரியாக திட்டமிட்டு செயற்படும் இடத்தில் பிரிவு , சண்டை என்பன ஏற்பட வாய்ப்பில்லை . 

ஒவ்வொருவரதும் எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும். அவர்களது வாழ்க்கையும் வெற்றிகரமாக அமைய வேண்டும்.  
 







1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் அருமை...

நம் வாழ்க்கை நமது கையில்... வாழ்த்துக்கள்...