Saturday, March 9, 2013

பெண்ணே உனது பாதை .....


பெண்ணே அடுப்படியில் கிடக்கும் 
பெண்ணுக்கு படிப்பெதட்க்கு என்றார்கள் 
நீ இன்று  கல்வி கற்றதால் தலை 
நிமிர்ந்து நிற்கிறாய் - தைரியமாக இருக்கிறாய் .

பொறாமைப் படாதே - பொறுமையாக இரு 
கோபப்படாதே - அமைதியாக இரு 
தலைக்கனம் கொள்ளாதே - அன்பாய் இரு 
அதட்டாதே - அன்பாய் பேசு 
மேக்கப் போடு - அளவாகப் போடு 
அளவான , அழகான உடைகளை தேர்ந்தெடு 
அரைகுறை , கவர்ச்சியான ஆடைகளை 
தேர்ந்தெடாதே - தேவையற்ற பிரச்சனைகளை 
குறைத்துக் கொள்ள முயற்சி செய் 

எல்லோருடனும் அன்பாக இரு 
உனது இலட்சியப்பாதையை தேர்ந்தெடு 
அதற்கான முயற்சிகளில் இறங்கு 
உனது பாதையை நேர்வழியில் ஆக்கு 
குறுக்கு பாதையை தேர்ந்தெடாதே 
தடைகளை படிக்கற்கள் ஆக்கு 
ஏணி போல் ஏறிக்கொண்டு வெற்றிகளை 
நோக்கி முன்னேறு உனது இலட்சியங்களை 
வெற்றிகரமாக நிறைவேற்று பெண்ணே ......

7 comments:

அம்பாளடியாள் said...

சிறந்த நல் வழிகளைக் காட்டும் கவிதை .தொடர வாழ்த்துக்கள் சகோ .

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் புதுபாதைக்கான வழிமுறைகள்... பாராட்டுக்கள்....

வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை பவி...

Pavi said...

நன்றி அம்பாளடியாள்

Pavi said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்

Pavi said...

நன்றி குமார்

Pavi said...

நன்றி அரசன்