சனத்தின் அதிரடி , கண்டம்ப்ய்யின் பொறுப்பான ஆட்டமும் இலங்கை அணி 307 ஓட்டங்கள் எடுக்க வித்திட்டது .
மாத்திவ்ஸ் இந்தியாவின் விக்கட்டுகளை சாய்க்க வெற்றி
இலங்கை வசமானது .
இந்திய அணி, இலங்கையிடம் 139 ரன்கள்
வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஜெயசூர்யா
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெயசூர்யா,
அரை சதம் கடந்தார். அதிரடியாக ரன் குவித்த இவர்,
சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார்.
13 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் சேர்த்தார் ஜெயசூர்யா.
கண்டம்பி, கபுகேதரா ஜோடி பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தது. 36 ரன்கள் சேர்த்து, ரன் அவுட்டானார் கபுகேதரா. மறுமுனையில் கண்டம்பி,
ஒரு நாள் அரங்கில் 3 வது அரை சதம் கடந்தார்.
இந்திய பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த இவர் மின்னல் வேகத்தில் ரன் குவிக்க, 50 ஓவர் முடிவில் இலங்கை அணி,
6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்தது. 73 பந்துகளில் 91 ரன்கள் (11 பவுண்டரி) குவித்த
கண்டம்பி அவுட்டாகாமல் இருந்தார். .
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி
ஏஞ்சலோ மாத்திவ்ஸ் வேகத்தில் நிலைகுலைந்தது.
தினேஷ் கார்த்திக் (16), சச்சின் (27), யுவராஜ் (16), ரெய்னா (0),
கேப்டன் தோனி (8), யூசுப் பதான் (1) உள்ளிட்ட அனைவரும்
ஏமாற்றம் அளித்தனர். டிராவிட் (47)ஆறுதல் அளித்தார்.
இந்திய அணி, 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இலங்கை அணியின் நச்சத்திரப்புயல் மாத்திவ்ஸ் 6 விக்கெட் வீழ்த்தினார். இவரே ஆட்ட நாயகன் விருதை வென்றார்.இந்திய அணி, 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
மாத்திவ்ஸ் 6 விக்கெட் வீழ்த்தினார். இவரே ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்தியா அணியின் தொடக்க வீரர்கள் சேவக் ,
கம்பீர் காயம் காரணமாக விளையாடவில்லை.
இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. நேற்று இலங்கை அணியின் பந்து வீச்சு,
துடுப்பாட்டம் , களத்தடுப்பு என்பன சிறப்பாக அமைந்து இருந்தது.
பொறுத்திருந்து பார்போம் .கடைசி போட்டியில் என்ன நடக்கின்றது . இந்தியாவா? இலங்கையா வெற்றி பெறுகின்றது என்று ?
1 comment:
வணக்கம் தோழி பாவி…
தங்களை ‘காதல், அழகு, கடவுள், பணம்’ என்ற தொடர் விளையாட்டுக்கு அழைத்துள்ளேன் வந்து எழுதுங்கோ…….
http://maruthamuraan.blogspot.com/2009/09/blog-post_16.html
Post a Comment