Wednesday, March 24, 2010

மயிலே மயிலே

peacock.jpg image by mglrssr
மயில்களை பார்க்க ஆசைதான் எல்லோருக்கும் . மயில்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன பார்ப்பதற்க்கு .மயில் இந்தியாவின் தேசியப்பறவை ஆகும். அடர்ந்த காட்டு பகுதிகளில் மயில்கள் வாழ்கின்றன . மயில் போல பொண்ணு ஒன்னு, கிளி போல பேச்சு ஒண்ணு  என்று பாடல்களும் எழுதுகிறார்கள் பாடல் ஆசிரியர்கள் .


http://ladyhalfbreed.files.wordpress.com/2007/07/peacock.jpg 
மயில்களின் இறகுகளை விற்று சம்பாதிக்கிறார்கள் பலர் . அதில் வருமானம் உழைக்கிறார்கள் .  உண்மையில் அதற்க்கு தடைகள் இருந்தும் சிலர் அவற்றை மீறுகிறார்கள் . மயில் ஆட்டம் என்று  ஒரு ஆட்டம் உண்டு. நமது பாரம்பரிய நிகழ்வுகளில் மயில் ஆட்டமும் ஆடுவார்கள் . மயிலின் இறகுகளை பின்புறம் கட்டி பச்சை உடுப்பு போட்டு மயில் தோகை விரித்தாடுவது போல் ஆடுவார்கள் . அழகாக இருக்கும் .
மயிலாடும் தோப்பில் மானாட கண்டேன் , தோகை இளமையில் ஆடி என்று சினிமா மாடல்களிலும் மயிலை விட்டு வைக்கவில்லை . மயில்கள், ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்கு  பெயர் பெற்றது. ஆண்மயில் பெண்ணைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். பார்ப்பதற்க்கு அழகாக இருக்கும் .

http://www.cs.stir.ac.uk/~iag/peacock3b.jpg 
ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. தோகையில் வரிசையாகக் 'கண்' வடிவங்கள் உள்ளன. பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது.
http://butterflies.heuristron.net/pictures/butterflies/whitePeacock/real-peacock.JPG 
இந்தியா , இலங்கை போன்ற நாடுகளில் மயில்கள் உண்டு . காடுகளை அளிப்பதாலும் , வீட்டை ஆடுவதாலும் , அவற்றுக்கு தகுந்த வாழிடங்கள் இல்லாததாலும் மயில்கள் அழியும்  அபாயம் உள்ளதாக தெரிவிக்கிறார்கள் .

கந்தன் மயிலைதானே தனது வாகனமாக பயன்படுத்துகிறார் . கந்தனும் அழகு , மயிலும் அழகு தானே . அழகுக்கு அழகு . 
http://www.definatalie.com/uploads/Free/Vectors/DefinataliesPeacockShapes2.png     

6 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான மயில் படங்கள்

பவி, உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

Anonymous said...

mayilkal alakaaka ullana.


suba

Anonymous said...

super............


mano

Pavi said...

நன்றி ஸ்டார்ஜன்.
உங்களுக்கு மிகவும் நன்றி . என்னையும் வலைச்சரத்தில் ஒருவராக குரிப்பிட்டதற்க்கு

Pavi said...

நன்றி மனோ

Pavi said...

நன்றி சிவா