இது எனது நண்பியின் வருகைக்காக காத்திருப்பு
உனக்காக எவ்வளவு
நாட்கள் ஆனாலும்
நான் காத்திருப்பேன்
நண்பியே - நான்
இக்கரை நீ அக்கரை
இருந்தும் எமது
நட்பு என்னும்
பந்தம் இன்னும்
தொடந்து கொண்டு
இருக்கிறது நண்பியே
அது நான் செய்த பாக்கியமோ
அல்லது நீ செய்த பாக்கியமோ
தெரியவில்லை ஆருயிர் நண்பியே .....
எத்தனையோ நண்பர்கள்
சண்டைகள் , சச்சரவு
கோபங்கள் , பொறாமைகள்
பட்டு தமது
நண்பர்களை பிரிந்து செல்கிறார்கள்
அப்படி இருக்கும் போது
நீயும் நானும் பதினைந்து
வருட காலம்
சண்டை சச்சரவு இன்றி
கோபங்கள் இன்றி
என்றும் போல் சந்தோசமாக
இருக்கிறோம் .........
அதற்க்கு காரணமும்
உண்டு தோழியே
நீயும் நானும் ஒருவருக்கு
ஒருவர் விட்டு கொடுத்து
போவதனால் தான்
எமது நட்பு கடல் கடந்தும்
தொடர்கிறது நண்பியே
கோபங்கள் , பொறாமைகள்
பட்டு தமது
நண்பர்களை பிரிந்து செல்கிறார்கள்
அப்படி இருக்கும் போது
நீயும் நானும் பதினைந்து
வருட காலம்
சண்டை சச்சரவு இன்றி
கோபங்கள் இன்றி
என்றும் போல் சந்தோசமாக
இருக்கிறோம் .........
அதற்க்கு காரணமும்
உண்டு தோழியே
நீயும் நானும் ஒருவருக்கு
ஒருவர் விட்டு கொடுத்து
போவதனால் தான்
எமது நட்பு கடல் கடந்தும்
தொடர்கிறது நண்பியே
எனது பிறந்த நாள் மற்றும்
ஏதாவது விசேட நாட்கள்
என்றால் நீ எனக்கு அனுப்பும்
வாழ்த்து அட்டையை
எதிர் பார்த்து காத்து கொண்டு இருப்பேன்
அதேபோல் நீயும் எனது வாழ்த்து
மடலை எதிர் பார்த்து கொண்டு இருப்பாய்
என்பதை நானும் அறிவேன் .
இருவரும் ஒரே தாயின் வயிற்றில்
பிறக்கா விட்டாலும்
நானும் நீயும் நண்பர்கள்
அதுகும் ஆருயிர்
நண்பர்கள் அல்லவா ?
வெளிநாடு சென்றதும்
எல்லோரும் தமது
நண்பர்களை மறந்து விட்டு
வேறு நண்பர்களை
வெளி நாட்டில் பிடித்துவிட்டு
பழைய நண்பர்களை
மறந்து விடுவார்கள்
ஆனால் நீ எப்போதும்
சொல்வது எத்தனை
நண்பர்கள் எனக்கு கிடைத்தாலும்
உன்னை போல் ஒரு
நல்ல மனசு , குணம் ,
அன்பு , சந்தோசம் என
எல்லாவற்றையும்
பகிந்து கொள்ள கூடிய
நண்பி கிடைப்பாளா எனக்கு ?
என்று நீ அடிக்கடி சொல்லி
கொள்வாய் அதை
நான் என்றும் மறவேன் .
நானும் அதைதான்
சொல்கிறேன் உன்னை
போல் ஒரு நண்பி
எனக்கு என்றும்
கிடைக்க மாட்டாள்
அது உண்மை
நண்பியே அகிலா
நீ என்னை பார்க்க
எப்போது வருவாய்
என நான் ஆவலுடன்
எதிர் பார்த்து
வழிமேல் விழி
வைத்து காத்து
கொண்டு இருக்கிறேன்
நீ வருவதற்க்கு
இன்னும் ஒரு
மாதங்கள்
இருக்கின்றனவே ?
எப்போது இந்த ஒரு மாதம்
முடியும் என நாட்களை எண்ணி
கொண்டு இருக்கிறேன் .
நாம் கதைத்து என்ன , படம்
பார்த்து என்ன
எப்பிடி இருந்தாலும்
உன்னை நேரில் பார்ப்பது
போல் ஆகி விடுமா ?
என்றும் நாம்
பிரியமான தோழிகளாக
இன்று போல்
என்றும் இந்த
நட்பு தொடர
வேண்டும் என
நான் வேண்டுகிறேன் ...........
12 comments:
//என்றும் நாம்
பிரியமான தோழிகளாக
இன்று போல்
என்றும் இந்த
நட்பு தொடர /// என்னுடைய வாழ்த்துக்களும்
தோழி தோழி அன்புத்தோழி
நட்புக்கு புதுப்பாட்டு இதுதானோ?
//உன்னை
போல் ஒரு நண்பி
எனக்கு என்றும்
கிடைக்க மாட்டாள்
அது உண்மை
நண்பியே அகிலா //
இருவரும் வாழும் காலம் முழுவதும் தோழியாக இருக்க எனது வாழ்த்துக்கள்
தோழிக்காக மிகப் பெரிய கவிதை. ஆனாலும் அலுக்காத அழகிய கவிதை.
தோழியே தோழிக்கு எழுதியகவிதை மிக அழகு.
இப்படிக்கு அன்புத்தோழி மலிக்கா
http://niroodai.blogspot.com
தோழிபற்றிய பதிவு சூப்பர்.......
வலைப்பக்கத்தில தன்னிச்சையாக செயல்படக்கூடிய பாட்டை எடுத்துவிடுங்கள் தோழியே... பயம் காட்டுது ... :-))
எம் நட்பு என்றும் தொடரும்
நன்றி கருணையூரான்
ம்ம்ம்ம் அப்படித்தான் அண்ணாமலையான் அண்ணா.........
நன்றி சங்கவி
உங்களுக்கு அலுக்கவில்லை தானே . நன்றி தமிழுதயம்.
நன்றி தோழி மலிக்கா
நன்றி தர்சன்
Post a Comment