Tuesday, January 12, 2010

அதிக கஷ்டத்துக்கு உள்ளாகும் வீட்டு பணிப்பெண்கள்

http://justicefortruth.files.wordpress.com/2009/01/sadgirl.jpg 
மத்திய கிழக்கு நாடுகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் எவ்வளவு கஷ்டத்துக்கு உள்ளாகின்றார்கள் . அவர்கள் படும் வேதனைகளை சொல்லில் விபரிக்க முடியாது . சொல்லொணா துன்ப துயர வாழ்க்கை . நான் கேள்விப்பட்ட ஒரு விடயம் இது . உண்மையான நிகழ்வு தான் . என் மனதை கஷ்டப்படுத்தியது . இவ்வளவு கஷ்டப்படுகிறார்களா இந்த வீட்டு பணிப்பெண்களாக அமர்த்தப்படும் பெண்கள் ? என்று எனக்கு எண்ணத்தோன்றியது .

வீட்டில் சரியான கஷ்டம் . அம்மாவுக்கு கண்பார்வை குறைவு . வீட்டில் தான் இருக்கிறார். அப்பா கொழுந்து கொய்யும் ஒரு சாதாரண தொழிலாளி . பகலில் நல்ல அப்பாவாக இருப்பார் . இரவில் பிள்ளைகளோடும் , மனைவியோடும் ஒரே சண்டை சச்சரவு தான் . மப்பு தலைக்கு ஏறி விட்டுவிடும் அதனால் தான் . இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் . ஒரு ஆண் பிள்ளை . இரண்டு பெண்பிள்ளைகள் . ஆண் பிள்ளைக்கு காது கேட்காது . பிறக்கும் போதில் இருந்து . கால்களும் நடக்க முடியாது . சின்ன வயதில் ஏதோ வருத்தம் வந்து கால்கள் இரண்டையும் இழுத்து நடக்க முடியாமல் போய் விட்டதாம் . மற்றைய இரண்டு பெண் பிள்ளைகளும் படித்து கொண்டு  இருக்கிறார்கள் .



வீட்டில் அப்பாவின் வருமானம் மட்டும் தான் . சரியான கஷ்டம் . என்ன செய்வது என யோசித்து கொண்டு இருந்த போது தான் தகப்பானார் வந்து கூறினார் . வெளிநாடு ஒன்றில் வீட்டு வேலைக்காக ஆக்கள் தேவையாம் என்று பேப்பரில் வாசித்து சொன்னார்கள் . நீ போ என தனது இரண்டாவது மகளிடம் தகப்பன் கூறினார் . அந்த பிள்ளை இல்லை அப்பா நான் படிக்க வேண்டும் . நான் ஒரு ஆசிரியர் ஆக வர வேண்டும் என்பதுதான் என்னுடைய இலட்சியம் அப்பா நான் படிக்க வேண்டும் என மகள் கூற என்ன படிப்பு . என்னால் இனி பணம் தர முடியாது . நீ இனி படிக்க வேண்டாம் . நான் சொன்ன வேலைக்கு போ . அவ்வளவு தான் . நீ டீச்சராக வந்து என்னத்த கிழிக்க போற . அது மட்டும் உன்ன என்னால் சம்பாதிச்சு படிக்க வைக்க முடியாது . நீ நாளைக்கு போ .


http://www.lwvswin.org/sitebuildercontent/sitebuilderpictures/sad-girl.gif 
பல முறை யோசித்து பார்த்து வீட்டின் கஷ்ட நிலைமையை கருத்தில் கொண்டு தான் போவதற்க்கு சம்மதித்தார்.  மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்று நல்ல வேலை . சம்பளம் மாதம் மாதம் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தது . இப்படி ஒரு வருடங்கள் ஆகி விட்டது . இப்போது அவர்கள் வீட்டில் கஷ்டம் நீங்கி கொஞ்சம் பிரச்சனை இல்லாமல் சீவியம் போனது .


இப்படி ஒரு வருடங்கள் கழிந்த நிலையில் திடீரென வீட்டில் அழும் குரல்கள் கேட்டது என்ன நடந்தது என்று விசாரித்தால் மத்திய கிழக்கில் வேலைக்கு சென்ற மகள் இறந்து விட்டாள் என தகவல் வந்தது . விசாரித்து பார்த்ததில் வீட்டு எஜமானின் துன்புறுத்தல் காரணமாக விஷம் குடித்து இறந்து விட்டதாக செய்தி பரவியது . 
 
ஏன் இந்த நிலைமை . வீட்டு கஷ்டத்தின் நிலைமை காரணமாக சென்ற பெண்ணுக்கு இப்படி ஒரு கதியா ?

சவூதி அரேபியாவில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்கான 64இலங்கைப் பணிப்பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.

மத்திய கிழக்கில் பணிப்பெண்களாக கடமையாற்றும் இலங்கை பெண்களில் கடந்த வருடம் மட்டும் 330 இளம்பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்றும் தற்கொலை அல்லது பிற காரணிகளாலான மரணம் போன்றே சொல்லப்படுகின்றது . பெருமளவு பணிப்பெண்கள் கல்வியறிவு குறைவால், அல்லது அக்கறையின்மையால் வேலை ஒப்பந்தத்தில் என்ன இருக்கின்றது என்று கவனிப்பதில்லை. 

 இதனால் ஒப்பந்தத்தை அடிக்கடி மீறும் எஜமானர்கள், பணிப்பெண்களை உரிமைகளற்ற அடிமைகளாக வைத்திருக்கவே விரும்புகின்றனர். இளம்பெண்களின் பாலியல் சுதந்திரம் கூட கட்டுப்படுத்தப்படுகின்றது. பல பணிப்பெண்கள் ஆண்-நண்பர்கள் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எந்த ஒப்பந்தமும் ஒரு பெண், ஆண் நண்பர் வைத்திருக்க கூடாது என்று கூறவில்லை. இருப்பினும் ஒரு பெண்ணுக்கு காதலன் இருப்பது அடிப்படை மனித உரிமை என்ற விடயம் கூட அவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை. இந்த "பாலியல் நன்னடத்தை" குறித்த எதிர்பார்ப்பு, பணிப்பெண்களை அடக்கி அதிக வேலை வாங்கவும், அதே நேரம் எஜமான் தரப்பு பிழைகளை மறைக்கவும் பயன்படுகின்றது.

http://www.samanthahahn.com/albums/Digital%20and%20Ink/Sad-girl2.jpgமத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஆண்டொன்றிற்கு 400 இற்கு மேற்பட்ட சடலங்கள் வருகின்றன. இதற்கான காரணத்தை எவரும் ஆராய்ந்து பார்ப்பதில்லை. பார்க்க போவதும் இல்லை . அவை தொடர்ந்த வண்ணமே உள்ளன .

பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வோர் அங்கு அவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. சொல்லொணாத் துன்பங்களையும் துயரங்களையும் தாங்கிக் கொண்டு பல வருடங்கள் உழைத்து தாய் நாட்டுக்கு வரும் போது அவர்களிடம் எஞ்சியிருப்பது சிறுதொகை பணமும் மறக்க முடியாத அனுபவங்களும் வேதனைகளும் தான். இதை நினைக்கும் போது எவ்வளவு கவலையாக இருக்கின்றது . கஷ்டப்பட்டு வேலை செய்தும் போதிய ஊதியம் வழங்கப்படுவதில்லை . துன்பங்கள் தான் மிச்சம் .

கொல்லப்படுகின்ற வீட்டு பணிப்பெண்கள்  பெரும்பாலானவர்கள் எரிகாயத்திற்கு உட்படுவதும் அல்லது மாத்திரைகளை உட்கொள்வதுமே காரணமாக கூறப்படுகின்றது. ஆனால் உண்மையில் இவர்கள் பாலியல் துன்புறுத்தல், அடிமையாக நடாத்துதல், போன்றவற்றால் துன்புறுத்தப்படுகின்றனர். பெரும்பாலானவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை, பிலிபைன்ஸ் பணிப் பெண்களை குறைந்த கூலிக்கு தருவிக்கின்றனர். உலகமயமாக்கலின் கீழ் தொழிலாளர்களை ஏற்றுமதி செய்யும் இலங்கை, பிலிபைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாட்டு அரசாங்கங்களுடன் ஒரு மாத சம்பளம் எவ்வளவு என்று முன்கூட்டியே பேசி தீர்மானிக்கபடுகின்றது .

இந்தப் பேரம் பேசலில் ஒரு பணிப்பெண்ணின் ஊதியம் அண்ணளவாக மாதம் 300 யூரோ என்று உள்ளது. தற்போது இலங்கை அரசு தொகையை அதிகரிக்குமாறு கேட்டு வருவதால், முகவர்கள் வேறு வறிய நாடுகளில் வலைவீசுகின்றனர். சைபிரசில் சட்டப்படி குறைந்த சம்பளம் 700  யூரோ என்றிருந்த போதும், அங்கே பாகுபாடான சம்பளம் வழங்குவது சர்வசாதாரணம். ஒரே வேலைக்கு சைப்ரஸ் பிரசைக்கு கொடுப்பதை விட மிக குறைவாக வெளிநாட்டு தொழிலாளருக்கு வழங்கபடுகின்றது. 

ஒப்பந்தப்படி வேலைசெய்த அதிக நேரத்திற்கு ஊதியம் வழங்குவது அரிதாகவே நடக்கும் விஷயம். அதேநேரம் தமது 8 மணி வேலை நேரம் தவிர்ந்த பிற நேரங்களில், இந்த இளம்பெண்கள் வெளியில் சென்று வரவோ, அல்லது பொழுதுபோக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.

மத்திய கிழக்கு நாடுகளான குவைத் , சவூதி, ஓமான், கட்டார் போன்ற நாடுகளில் இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து பணிப்பெண்கள் வேலைக்காக அரசாங்கம் மற்றும் தனியார்கள் அனுப்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலை இன்னும் தொடராமல் , இந்த துன்பங்கள் நிகழாமல் இருக்க வேண்டும் . அல்லது குறைய வேண்டும் என்பதே எனது எண்ணமும் . எல்லோரினதும் எதிர்பார்ப்பும் கூட .......





6 comments:

sathishsangkavi.blogspot.com said...

நல்ல பதிவு...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு . happy pongal.

சினிமா புலவன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Pavi said...

உங்கள் எல்லோருக்கும் எனது நன்றிகள்.
உங்கள் எல்லோருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .

Jackiesekar said...

இன்னும் பல இடங்களில் பல பெண் பிள்ளைகள்... தன் சொந்த நாட்டிலேயே... பண செருக்கு எஜமானிகளால் அதிகம் துன்புறுத்த படுகின்றார்கள்..

அந்த பெண்ணின் கதை கொடுமை..

திருவாரூர் சரவணா said...

நம் நாட்டில் சில நூறு ரூபாய்களுக்காக கடினமான வேலை செய்யும் பெண்கள் இது போன்ற சிக்கல்களை சந்த்திட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் என்ன ஒன்று...சட்டென்று வேலையை உதறிவிட்டு தங்களை காப்பாற்றிக்கொள்ள முடியும். ஆனால் வெளிநாடு என்றால் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்து துன்பத்தில் சிக்கி தப்பிக்க வழி தெரியாமல் தவிக்கிறார்கள்.