மத்திய கிழக்கு நாடுகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் எவ்வளவு கஷ்டத்துக்கு உள்ளாகின்றார்கள் . அவர்கள் படும் வேதனைகளை சொல்லில் விபரிக்க முடியாது . சொல்லொணா துன்ப துயர வாழ்க்கை . நான் கேள்விப்பட்ட ஒரு விடயம் இது . உண்மையான நிகழ்வு தான் . என் மனதை கஷ்டப்படுத்தியது . இவ்வளவு கஷ்டப்படுகிறார்களா இந்த வீட்டு பணிப்பெண்களாக அமர்த்தப்படும் பெண்கள் ? என்று எனக்கு எண்ணத்தோன்றியது .
வீட்டில் சரியான கஷ்டம் . அம்மாவுக்கு கண்பார்வை குறைவு . வீட்டில் தான் இருக்கிறார். அப்பா கொழுந்து கொய்யும் ஒரு சாதாரண தொழிலாளி . பகலில் நல்ல அப்பாவாக இருப்பார் . இரவில் பிள்ளைகளோடும் , மனைவியோடும் ஒரே சண்டை சச்சரவு தான் . மப்பு தலைக்கு ஏறி விட்டுவிடும் அதனால் தான் . இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் . ஒரு ஆண் பிள்ளை . இரண்டு பெண்பிள்ளைகள் . ஆண் பிள்ளைக்கு காது கேட்காது . பிறக்கும் போதில் இருந்து . கால்களும் நடக்க முடியாது . சின்ன வயதில் ஏதோ வருத்தம் வந்து கால்கள் இரண்டையும் இழுத்து நடக்க முடியாமல் போய் விட்டதாம் . மற்றைய இரண்டு பெண் பிள்ளைகளும் படித்து கொண்டு இருக்கிறார்கள் .

வீட்டில் அப்பாவின் வருமானம் மட்டும் தான் . சரியான கஷ்டம் . என்ன செய்வது என யோசித்து கொண்டு இருந்த போது தான் தகப்பானார் வந்து கூறினார் . வெளிநாடு ஒன்றில் வீட்டு வேலைக்காக ஆக்கள் தேவையாம் என்று பேப்பரில் வாசித்து சொன்னார்கள் . நீ போ என தனது இரண்டாவது மகளிடம் தகப்பன் கூறினார் . அந்த பிள்ளை இல்லை அப்பா நான் படிக்க வேண்டும் . நான் ஒரு ஆசிரியர் ஆக வர வேண்டும் என்பதுதான் என்னுடைய இலட்சியம் அப்பா நான் படிக்க வேண்டும் என மகள் கூற என்ன படிப்பு . என்னால் இனி பணம் தர முடியாது . நீ இனி படிக்க வேண்டாம் . நான் சொன்ன வேலைக்கு போ . அவ்வளவு தான் . நீ டீச்சராக வந்து என்னத்த கிழிக்க போற . அது மட்டும் உன்ன என்னால் சம்பாதிச்சு படிக்க வைக்க முடியாது . நீ நாளைக்கு போ .
பல முறை யோசித்து பார்த்து வீட்டின் கஷ்ட நிலைமையை கருத்தில் கொண்டு தான் போவதற்க்கு சம்மதித்தார். மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்று நல்ல வேலை . சம்பளம் மாதம் மாதம் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தது . இப்படி ஒரு வருடங்கள் ஆகி விட்டது . இப்போது அவர்கள் வீட்டில் கஷ்டம் நீங்கி கொஞ்சம் பிரச்சனை இல்லாமல் சீவியம் போனது .
இப்படி ஒரு வருடங்கள் கழிந்த நிலையில் திடீரென வீட்டில் அழும் குரல்கள் கேட்டது என்ன நடந்தது என்று விசாரித்தால் மத்திய கிழக்கில் வேலைக்கு சென்ற மகள் இறந்து விட்டாள் என தகவல் வந்தது . விசாரித்து பார்த்ததில் வீட்டு எஜமானின் துன்புறுத்தல் காரணமாக விஷம் குடித்து இறந்து விட்டதாக செய்தி பரவியது .
ஏன் இந்த நிலைமை . வீட்டு கஷ்டத்தின் நிலைமை காரணமாக சென்ற பெண்ணுக்கு இப்படி ஒரு கதியா ?
சவூதி அரேபியாவில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்கான 64இலங்கைப் பணிப்பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.
சவூதி அரேபியாவில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்கான 64இலங்கைப் பணிப்பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.
6 comments:
நல்ல பதிவு...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
நல்லாருக்கு . happy pongal.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
உங்கள் எல்லோருக்கும் எனது நன்றிகள்.
உங்கள் எல்லோருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
இன்னும் பல இடங்களில் பல பெண் பிள்ளைகள்... தன் சொந்த நாட்டிலேயே... பண செருக்கு எஜமானிகளால் அதிகம் துன்புறுத்த படுகின்றார்கள்..
அந்த பெண்ணின் கதை கொடுமை..
நம் நாட்டில் சில நூறு ரூபாய்களுக்காக கடினமான வேலை செய்யும் பெண்கள் இது போன்ற சிக்கல்களை சந்த்திட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் என்ன ஒன்று...சட்டென்று வேலையை உதறிவிட்டு தங்களை காப்பாற்றிக்கொள்ள முடியும். ஆனால் வெளிநாடு என்றால் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்து துன்பத்தில் சிக்கி தப்பிக்க வழி தெரியாமல் தவிக்கிறார்கள்.
Post a Comment