ஒன்றல்ல, இரண்டல்ல ஆறு ஒஸ்காரை அள்ளியது ஹர்ட் லாக்கர். சர்வதேச அளவில் திரையுலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படுகின்றது ஒஸ்கார் . 82-வது விருது விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்பட 24 பிரிவின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.
ஒஸ்காரை வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெறுகிறார் ஹர்ட் லாக்கர் படத்தை இயக்கிய கேத்ரீன் பிக்லோ. 58 வயதுடைய இவர் சிறந்த படத்துக்கான விருதை வென்று சாதனை படைத்து இருக்கிறார் . இதன் மூலம் ஒஸ்கார் விருது வரலாற்றிலேயே சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெறும் முதல் பெண் இயக்குநர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
சிறந்த எடிட்டிங், சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த சவுண்ட் மிக்ஸிங், சிறந்த திரைக்கதை வசனம் உள்பட மொத்தம் 6 விருதுகள் ஹர்ட் லாக்கர் படத்துக்கு கிடைத்துள்ளன. இந்த ஆண்டு ஹர்ட் லாக்கர் படமே அதிகபட்சமான விருதுகளை பெற்றுள்ளது.
இப்படத்தில் சிறந்த எடிட்டிங்குக்கான விருது பாப் முராவ்ஸ்கி, கிரஸ் இன்சிஸ் ஆகியோருக்கும், சவுண்ட் எடிட்டிங் மற்றும் சவுண்ட் மிக்ஸிங்குக்கான விருது பால் என்.ஜே. ஓட்டோசன், ரே பெக்கெட் ஆகியோருக்கும், சிறந்த திரைக்கதைக்கான விருது மார்க் போலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
10 comments:
கொம்ளீட் டீடெயிலுக்கு நன்றி
படங்கள் அருமை. சிறந்த உரைநடை. ஏன் ஆஸ்கரை ஓஸ்கார் என்று எழுதுகிறீர்கள்?
கோபி
நல்ல செய்தி பவி...இதுபோல தமிழ் நாட்டு படங்களும் ஆஸ்கர் விருது பெற்றால் நன்றாக இருக்கும்.....
"Anonymous Said:
படங்கள் அருமை. சிறந்த உரைநடை. ஏன் ஆஸ்கரை ஓஸ்கார் என்று எழுதுகிறீர்கள்?"
ஆம் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் அப்படிதான் பேசுவார்கள்.....அவர்களது பேச்சில் ஆங்கிலம் கலக்கமாட்டார்கள் என்பது பாராட்டுக்குரிய விஷயம்......
மேலும் தமிழில் அவர்கள் வட மொழிச்சொல்லை கையாள மாட்டார்கள்...உதாரணத்திற்க்கு ஹரிஹரன் என்ற பெயரை கரிகரன் என்று தான் அழைப்பார்கள்!!
ஷாப்(shop) என்பதை சொப் என்று தான் சொல்லுவார்கள். டெய்லரிங் என்பதை ரெய்லரிங் என்று அழைப்பார்கள். ஹலோ என்ற வார்த்தையை கலோ என்று தான் கதைப்பார்கள் (அழைப்பார்கள்)..
என்னுடன் பாரிஸ் பல்கலைகழகத்தில் படித்த தமிழீழ சகோதரிகளிடம் கற்றுக்கொண்டது தான் இந்த இலங்கை தமிழ்...
என்ன சரியா பவி?
பவி நல்ல தகவல் .
இலங்கை தமிழர்கள் ஒஸ்கார் என்று தான் சொல்வார்கள் . நீங்கள் எளிதியது சரி பவி .
வினோ
super detail.
thanks pavi.
siva
நன்றி அண்ணாமலையான் .
நன்றி கோபி .உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் .
இலங்கை தமிழர்கள் ஒஸ்கார் என்று தான் உச்சரிப்பார்கள் .
நன்றி நித்தியானந்தம்
எல்லோருக்கும் இதுதானே விருப்பம் . தமிழ் படங்கள் ஒஸ்கார் பெறவில்லை என்று . பாப்போம் . எப்போது ஒஸ்காரை வெல்கின்றன என்று .
ஆம் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் அப்படிதான் பேசுவார்கள்.....அவர்களது பேச்சில் ஆங்கிலம் கலக்கமாட்டார்கள் என்பது பாராட்டுக்குரிய விஷயம்......
மேலும் தமிழில் அவர்கள் வட மொழிச்சொல்லை கையாள மாட்டார்கள்...உதாரணத்திற்க்கு ஹரிஹரன் என்ற பெயரை கரிகரன் என்று தான் அழைப்பார்கள்!!
ஷாப்(shop) என்பதை சொப் என்று தான் சொல்லுவார்கள். டெய்லரிங் என்பதை ரெய்லரிங் என்று அழைப்பார்கள். ஹலோ என்ற வார்த்தையை கலோ என்று தான் கதைப்பார்கள் (அழைப்பார்கள்)..
நீங்கள் சொல்வது உண்மை தான் . மிகவும் சரி .
நீங்கள் சொல்வது மிகச்சரி நித்தியானந்தம்
நன்றி வினோ
நன்றி சிவா
Post a Comment