Thursday, March 4, 2010

கறிவேப்பிலையின் பயன்

http://top10samayal.files.wordpress.com/2009/02/fresh_indian_curry_leaves116245426_std.jpg 
மரங்களோடு மரமாக வளர்கிறது கறிவேப்பிலை . கிராமங்களில் எல்லாம் வீட்டுக்கு இரண்டு மரம் , மூன்று மரம் என்று நிக்கும் . நகரங்களில் எல்லாம் ஒரு சின்ன பிடி 5 , 10 ரூபாய்க்கு கிடைக்கிறது .

கறிவேப்பிலை இலையை கசக்கி பார்த்தாலே ஒரு வாசம் வரும் . கறிகளுக்கு போட்டு சமைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் கறிகள் . கறிவேப்பிலையை மட்டும் போட்டு கறிவேப்பிலை சொதியும் வைத்து சாப்பிடுவார்கள் .

http://3.bp.blogspot.com/_uaVw0D687Ww/SS4fGRr5X9I/AAAAAAAAADw/6L2nhqQ7LkE/s320/karuvepilai.jpg 
இது இந்திய , இலங்கை  உணவு வகைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது. இதன்  தோற்றம் இந்தியாவாகும். இதன் விதைகள் நச்சுத் தன்மையுடையவையாக காணப்படுகின்றது . 

http://farm2.static.flickr.com/1258/1255770668_7b694197fb.jpgகறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சது, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்களால் கண் பார்வைக் கோளாறுகள், சோகை நோய்கள்  குணமடைகின்றன.

தலைமுடி வளரவும், கண்களுக்கு ஒளிதரவும் கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச் சத்துக்கள் பெரிதும் உதவுகின்றன .

http://s4.hubimg.com/u/2092135_f520.jpg 
தலைமுடி நல்ல கறுப்பு நிறமாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் தலைக்கு வைக்கும் எண்ணையுடன் கறிவேப்பிலையையும் சேர்த்து பாருங்கள் . நல்ல பலன் கிடைக்கும் .  
 
கறிவேப்பிலை  இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுக்கும் தன்மை கொண்டது.
http://www.tamilheritage.org/kidangku/siddha/mulikai/images/curryleaves.jpg 
வெறும் வயிற்றில் ‌தினமு‌ம் கறிவேப்பிலை இலையை மெ‌ன்று சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். இ‌ப்படியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். சிறுநீரில் சர்க்கரை வெளியேறு‌ம் அளவு‌ம் குறை‌ந்து‌விடு‌ம்.
 
இளம‌் வய‌தி‌ல் நரை முடி வ‌ராம‌ல் தடு‌க்க க‌றிவே‌ப்‌பிலை பய‌ன்படு‌ம் எ‌ன்பது தெ‌ரி‌ந்த ‌விஷய‌ம்.
அதாவது, நரை முடி வ‌ந்தவ‌ர்களு‌ம், உண‌விலு‌ம், த‌னியாகவு‌ம் க‌றிவே‌ப்‌பிலையை அ‌திகமாக சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் நரை முடி வராது . டையும் அடிக்க தேவையில்லை .

உணவில் மட்டுமல்லாது, நமது புற ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது இந்த கறிவேப்பிலை . மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.
http://3.bp.blogspot.com/_ABIR8T9swTc/R-ElsXHOINI/AAAAAAAAAeE/4h6zDTEkMoY/s400/DSC06147.JPG
எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள். அப்போது கறியும் வாசமாக , கம கம என்று இருக்கும் .

கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள் நிறைந்த சாறு, உணவில் முழுவதுமாக இறங்கி உணவுக்கு சுவை கூட்டுவதுடன், உடலுக்கு ஜீரணசக்தியை அளித்து பித்தம், வாயு, கபம் போன்றவற்றையும் போக்குகிறது.

கறிவேப்பிலையை கறிக்குள் கண்டால் அதையும் சப்பி சாப்பிடுங்கள் . அதை வீசாதீர்கள் . அதன் அருமை , பெருமைகளையும் அதன் தன்மைகளையும் அறிந்து வைத்து இருங்கள் . உங்கள் ஆர்ரோக்கியம் உங்கள் கைகளில் தான் உள்ளது .

8 comments:

Anonymous said...

kandippa therinjukka vendiyathu.

Anonymous said...

nalla vidayam pavi.

anpudan
anbu

Anonymous said...

thodarunkal ippadiyaana pathivukalai...........


...banu....

akila said...

கறிவேப்பிலையின் பயன்களை நன்கு அறிந்து கொள்ள கூடியதாக இருந்தது .
பதிவுக்கு மிகவும் நன்றி பவி.

Pavi said...

நன்றி அன்பு .
உங்கள் வருகைக்கு

Pavi said...

நன்றி மது . உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Pavi said...

நன்றி பானு

Pavi said...

நன்றி அகிலா
உங்கள் கருத்துக்கு