நான் படித்து சுவைத்ததை , எனக்கு பிடித்த கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் . வாசித்து பாருங்கள் . அருமையான கவிதைகள் .

நட்பாகவே இருப்பதுதான்
நண்பர்கள் என்றவர்கள்
காதலர்களாகியிருக்கிறார்கள்
எனக்குத் தெரிய அண்ணன் தங்கை என்று ஆரம்பித்தவர்களே
கணவன் மனைவியாகவும் ஆகியிருக்கிறார்கள்
ஆனாலும் சொல்கிறேன்
நட்பு என்பது நம்மைப்போல் என்றும்
நட்பாகவே இருப்பதுதான்.

தன்னம்பிக்கை
பத்து முறை விழுந்தவனை பூமித்தாய் முத்தமிட்டு கேட்டாளாம்..
நீ தானேயடா,
ஒன்பது முறை விழுந்தும் எழுந்து நின்றவன் என்று...!!

எப்போது சொல்வாய்.................
ஒரு பார்வையால்
ஒராயிரம்
கதை சொல்லி
என்னை பதறவைக்கும்
உன் கண்கள் பிடிக்கும்
நிலவுக்குள்
மின்னலடித்தது போல்
என்னை நோக்கி
நீ வீசும் உன்
புன்னகை பிடிக்கும்
நள்ளிரவில் தெரியும்
நட்சத்திரமாய்
உன் கூந்தலில்
ஒய்யாரமாய்
உட்கார்ந்திருக்கும்
ஒற்றை ரோஐh
பிடிக்கும்
ஆயிரம் பேருக்கு
மத்தியில்
நீ வந்தாலும்
உன்னை எனக்கு
உணர்த்தும்
உன் கொலுசின் ஒலி
பிடிக்கும்

நீ என் கனவில் வந்தாய்
நீ என்
கனவில் வந்தாய்
விடியம்
எழும்பிப் பார்த்தேன்
என் கட்டில்
நிரம்ப
கவிதை
நிரம்பிக்
கிடந்தது

வாழத் தொடங்கினேன்
இத்தனை
வருடமாய்
நான் பிறந்து
கொண்டிருந்தேன்
நீ பார்த்த
போதுதான்
என் பிறப்பு
முற்றுப் பெற்று
வாழத்
தொடங்கினேன்...

நம் நட்பின் முதல் நாள்
இதயம் சேகரித்துக்
கொண்டிருந்த
வானத்தில்
நீ
பறக்கத் துடிக்கையில் அசைந்த
புற்களின்
நடுவேதான்
அமர்ந்திருந்தது
நம் நட்பின்
முதல்
நாள்

காதல் தோல்வி
காதலில் தோற்பவர்கள்
பிணமாகிறார்கள் அல்லது
பிணமாக வாழ்கிறார்கள்
நினைவுகள் மட்டும் உயிரோடு !!

என் கண்கள்
காதலிடம் இருந்து தான் பிறந்து கொண்டதா வெட்கம்?
உன் மேல் நான் காதல் கொண்டதும்
என் கண்கள் வெட்கப் பூக்களை அணிந்து கொண்டனவே!

10 comments:
Nice
nalla irukkuthu.
suba
superrrrrrrrrrrrrrrr
mano
nalla irukku
bala
நன்றி அஹமது இர்ஷாத்
நன்றி சுபா
நன்றி மனோ
நன்றி பாலா
நல்ல படைப்பு பவி. இன்னும் நல்ல கவிதைகள் நிறைய வலைதளத்தில் உள்ளன. படியுங்கள். அப்படியே அந்த கவிதையின் சொந்தகாரர்ரையும் அவரின் வலைத்தளத்தையும் சொல்லுங்கள். அது தான் அந்த எழுத்தை நாம் அங்கீகரித்ததாக இருக்கும்.
நீங்கள் சொல்வது சரிதான் .
நன்றி இளவழுதி வீரராசன்
Post a Comment