Sunday, April 25, 2010

சச்சினின் பிறந்தநாள் பரிசு

http://images.askmen.com/men/celeb_profiles_sports/pictures/sachin_tendulkar/sachin_tendulkar.jpg

உலகத்தின் மிகச்சிறந்த  கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது 37 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார் . அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர் . அவருக்கு பிறந்த நாள் பரிசாக ஐ .பி .எல் விருதுகள் நேற்று வழங்கப்பட்டன .  இதில் சிறந்த துடுப்பாட்ட வீரர் , கேப்டன் விருதை மும்பை அணியின் சச்சின் தட்டிச் சென்றார். இவர் 14 லீக் போட்டியில், 5 அரைசதம் உட்பட 570 ஓட்டங்களை சேர்த்துள்ளார் . இவருக்கு பிறந்த நாள் பரிசாக இவ்விருதுகள் அமைந்தன .
http://img.timeinc.net/time/asia/2006/heroes/images/357_tendulkar.jpg
இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். கடந்த 1973 ம் ஆண்டு ஏப்., 24 ம் திகதி மும்பையில் பிறந்தார். 1989 ம் ஆண்டு அணியில் அறிமுகமான இவர், 21 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெற்றி நடை போடுகிறார். 
http://www.24cricket.com/wp-content/uploads/2010/01/Sachin-Tendulkar-300x277.jpg
டெஸ்ட் (13447 ரன்) மற்றும் ஒரு நாள் அரங்கில் (17598 ரன்) அதிக ஓட்டங்கள்  குவித்து சாதனை படைத்துள்ளார்.  அதிக சதம் (டெஸ்ட்-47, ஒரு நாள்-46) கடந்த வீரர்கள் வரிசையிலும் முதலிடத்தில் நீடிக்கிறார். சமீபத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் (குவாலியர்), இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் இப்பெருமை எட்டும் முதல் வீரரானார்.
http://nimg.sulekha.com/sports/original700/sachin-tendulkar-2010-1-21-7-46-30.jpg
இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின் தற்பெருமை இல்லாதவர் . தன்னடக்கம் ஆனவர் . இதனால் தான் இவர் புகழ் இன்னமும் அதிகரித்து கொண்டு செல்கிறது போலும். மற்றையவர்களை போல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் சாதிப்பவர் .

சச்சினின் பிறந்தநாள் அன்று வாழ்த்து தெரிவித்த வீரர்கள் :
சச்சினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த இந்திய சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன், அவரை வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து ஹர்பஜன் கூறியது: வயது என்பது சச்சினை பொறுத்த வரை, வெறும் எண்ணிக்கை தான். கடந்த 6 மாதங்களுக்கு சச்சினின் செயல்பாடு பிரம்மிக்கும் வகையில் உள்ளது. நாளுக்கு நாள் சற்றும் குறையாத அவரது ரன் தாகம், ஆச்சரியம் அளிக்கிறது. கிரிக்கெட் மீதுள்ள அவரது ஈடுபாடு, இளம் வீரர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி விடுகிறது. 17 வயது வீரரை போல தற்போதும் சச்சின் துடிப்புடன் விளையாடி வருகிறார் என்று கூறினார் .
http://www.justsharethis.com/wp-content/uploads/2009/09/SachinTendulkar_thumb.jpg
சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி கூறுகையில்,"" நான் கிரிக்கெட் அரங்கில் காலடி வைப்பதற்கு சச்சின் முக்கிய காரணம். அவரது ஒவ்வொரு செயல்பாடுகளும், எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு தூண்டுகோலாக அமைந்தன. வயது பல சென்றாலும், அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் தொய்வு ஏற்பட வில்லை. கிரிக்கெட் விளையாடுவதற்காகவே பிறந்தவர் சச்சின். நகைச் சுவையாக கூறினால், ஒவ்வொரு ஆண்டும் அவரது வயது குறைந்து கொண்டே செல்கிறது. சச்சினுக்கு முன்பாக நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஆச்சரியம் இல்லை என்று கூறினார் .
http://ipl2009dheeraj.files.wordpress.com/2009/05/46734092_tendulkar466getty.jpg
சச்சினுக்கு ஷேன் வார்ன்,  ரெய்னா, யுவராஜ்,  ஷாருக் கான் ஆகியோரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் எல்லோரும் சச்சினை எப்போதும் வாழ்த்தி கொண்டே இருப்பார்கள் . இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டும் . பல போட்டிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை இன்னும் உற்சாகப் படுத்த வேண்டும் . சச்சின் என்றும் நீடூழி வாழ்க வாழ்த்துகின்றோம் .
















2 comments:

ஸ்ரீ.... said...

சச்சினுக்கு உங்கள் வாழ்த்துக்களோடு எனது வாழ்த்துக்களும்!

ஸ்ரீ....

Pavi said...

நன்றி ஸ்ரீ .

எல்லோரினதும் வாழ்த்துக்கள் சச்சினுக்கு