
காதல் கோட்டையில்
காதல் இளவரசன்
ஆனாய் - நீ
காதல் மன்னனில்
எல்லோரினதும் இதயத்தை
கொள்ளை கொண்டாய்

அமர்க்களத்தில் எல்லோரையும்
அமர்க்களப்படுத்தினாய்
ஜி மூலம் எல்லோரையும்
ஜி என்று கூப்பிட வைத்தாய்

எல்லோருக்கும் ராஜாவானாய்
ஆஞ்சநேயர் அவதாரம் எடுத்தாய்
எல்லோருக்கும் இரத்தம்
ரெட் என்று உணரவைத்தாய்

அமராவதியில் ஆரம்பித்து
அசலாக நிமிர்ந்து நிக்கிறாய்
ஏகனில் ஒருவனாக நின்று
எதிரிகளை அழித்தாய்

பரமசிவன் அவதாரமும்
உனக்கு அத்துப்படி
தீப்பொறி பறந்தது
திருப்பதியில்
அட்டகாசமாய் இருந்து

அவள் வருவாளா
என எதிர்பார்த்து காத்து இருந்தாய்
பில்லா வேடம்
போட்டாய் கிரீடமும்
தரித்தாய்..

எல்லோரையும் நீ
வருவாய் என ஏங்க
வைத்தாய்
அழகான , அன்பான ஷாலினி
மனைவியாக வந்து கிடைத்தாள்.
அது உன் பாக்கியம்

அழகான மகளாக
வந்துதித்தாள் அனோஷிகா
நீ இன்னும் பல
படங்களில் நடிக்க
வேண்டும் - பல

கெட்டப்புகளில் நடித்து
ரசிகர்களை கொள்ளை
கொள்ள வேண்டும்
என்பது தல ரசிகர்களின்
அவா......................
8 comments:
remba mukiyam ithu ipa. ungalai ellam thiruthave mudija!!!
தமிழன் சினிமாவுக்கு கொடுக்கும் முக்தியத்துவத்தை வேற எதுக்குமே குடுக்கிறதில்லை.
ஒரு நடிகை கர்பமா இருந்தால் அது முதல் பக்கச்செய்தி
படப்பிடிப்பில் நடிகை நடிகைகளுக்கு சுளுக்கு பிடித்தால் அன்று அது தான் தலைப்பு செய்தி,
ஒரு நடிகர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அது பரபரப்பு செய்தி,
புதிய படங்கள் வருகிறதென்றால் பத்திரிக்கைகளிலும் தொலைகாட்சிகளிலும் அது தான் தலையாய செய்தி,
ஒரு கிழட்டு நடிகர் இமயமலையில் போய் படுத்தா அது செய்தி,
ஒரு குண்டு நடிகர் கார் பந்தயத்தில் கடைசியாக வந்தாலும் அது கவர் ஸ்டோரி.
ஒரு *****(நீங்களே விரும்பின சொல்லை போடுங்க) நடிகன்/நடிகை வந்தால் அதுவளோட சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கிறதுக்கு மணத்தியால கணக்கில கார் ஓடி, அதுவளை மணத்தியால கணக்கில தேடி, அதுவளோட சேர்ந்து ஒரு போட்டோ எடுத்திட்டா நீங்க பிறந்த பலனை அடைஞ்சிட்டீங்களாடா? அவங்கள் உங்களை செருப்பால அடிச்சாலும் அவங்களிட்டதான் போகனும் என்டு ஏண்டா அடம்பிடிக்கிறீயள்????? என்னை கடுப்பேத்துகிறார்கள் மை லாட்! இதில தங்களுக்குள்ள யார் அந்த நடிகை/நடிகன் மாதிரி இருக்கினம் என்டு சண்டை வேற. வாயில வருது நல்லா... பப்ளிக் இடமா இருக்கிறதால தப்பிச்சிங்கடா!
இதெல்லாம்
ரொம்ப ஜாஸ்திங்க.
நல்லா இருக்கு பவி
அஜித்திற்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வரலாறை விட்டுட்டீங்களே...நல்ல படங்க அது..!
நாம் எப்போதும் அன்னத்தை போல இருக்க வேண்டும் .
சினிமாவில் வரும் நல்ல விடயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் . நமக்கு தேவையான விடயங்களை எடுத்து கொள்ளுங்கள் . எனது தளத்தில் பார்வை இடுவோர் அஜித் ரசிகர்களும் இருக்கிறார்கள் . சும்மா விஜய் என்றால் தூக்கி பிடிப்பார்கள் . அஜித் என்றவுடன் கொந்தளிக்கிறார்கள் . அனாமி போல வந்து சுனாமி ஆகி விடாதீர்கள் .
நான் என்ன அஜித் வீட்டுக்கு போய் கேக் கொடுத்து சாப்பிட்டு வரவா சொன்னேன் . சும்மா பொழுது போக்குக்கு எழுதுபவற்றை எல்லாம் நீங்கள் பெரிது படுத்தாதீர்கள் . வாங்கள், வாசியுங்கள் , பிடிச்சு இருந்தால் கமென்ட் எழுதுங்கள் . அதை விடுத்து ...........................
நன்றி மதுமிதா
எத எழுதலாம் என்று யோசித்தேன் . அஜித் பற்றி எழுதிடுவம் என்று ஜோசனை வந்தது . அவ்வளவுதான்
நன்றி மகாராஜன்
ம்ம்ம்ம்ம்ம் வரலாறும் நல்ல படம் தான் .
நன்றி ஸ்ரீ ராம்
Post a Comment