Monday, June 14, 2010

ஏமாற்றாதீர்கள்

http://blog.dialaphone-blog.co.uk/blog/wp-content/uploads/2008/04/cheating_lover.jpg
காதலிப்பது ஒருவரை , கல்யாணம் பண்ணிக்கொள்வது இன்னொருவரை . இதுதான் இப்போதைய லேட்டஸ்ட் பசனாக மாறி விட்டது . ஆண்களும் அப்படித்தான் , பெண்களும் அப்படித்தான் . எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடக்கின்றது . சில நல்லுள்ளங்களை தவிர .
http://4.bp.blogspot.com/_y2XXNCp4suk/ScUBEXjjcII/AAAAAAAAAR8/iFEiiCB6nKo/s400/cheat.jpg
காதலையே கொச்சை படுத்துபவர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் . காதலை வாழ வைப்போரும் இந்த உலகில் இருக்கிறார்கள் . எல்லா இடங்களிலும் இருவரும் காதல் ஜோடிகளாக சுற்றி திரிந்து விட்டு பின்பு அப்பா, அம்மா பார்க்கும் மாப்பிளையையோ , பெண்ணையோ கல்யாணம் செய்து கொள்கிறார்கள் . பின்பு கேட்டால் பெற்றோரின் சம்மதம் முக்கியம் என்கிறார்கள் . அப்போ ஏன் நீங்க காதல கொச்சை படுத்திறீங்க ? மற்றையவரை ஏமாத்துறீங்க ? அப்பா, அம்மா சம்மதம் தான் முக்கியம் என்றால் ஏன் இன்னொருவருடன் ஊர் சுற்றுகிறீர்கள் ? அப்போ ஏன் காதலித்தீர்கள் ? அதை தவிர்க்கலாம் தானே . ஏன் இந்த ஏமாற்றும் வித்தை ???
http://www.gm.tv/media/images/b/1/cheating_large.jpg
ஏன் இன்னொரு மனசை புண்பட வைத்து ஏமாற்று பேர்வழிகளாக இருக்கிறீர்கள் ? நீங்கள் ஏமாற்றும் பெண்ணாக இருந்தால் அவள் சுற்றி திரிந்த இடங்கள் , உங்களுடன் பழகிய நாட்களை எண்ணி மனம் வெதும்புவாள் . இதே ஒரு ஆணாக இருப்பின் மதுவுக்கு ஆளாகி , தாடி வைத்து பைத்தியம் போல அலைகிறான் . இது எதற்க்கு ?
http://humanwired.files.wordpress.com/2008/08/brian-light-cheat-2.jpg
ஆனால் இப்போது காலம் மாறி விட்டது . ஒருவன் ஏமாற்றினால் இன்னொருவன் , ஒருத்தி ஏமாற்றினால் இன்னொருத்தி . தாடிவைத்து திரிவதெல்லாம் அந்தகாலம் . வெளிநாடு சென்றால் அவன் வெளிநாட்டு மாப்பிளை . அவன் மனதை மாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்கிறான் . அவள் பெற்றோர் பார்க்கும் வெளிநாட்டு  மாப்பிளையை கல்யாணம் பண்ணி வெளிநாடு செல்கிறாள் .
http://www.popgadget.net/images/lovers-mp3-player-apart.jpg
எல்லாம் நடக்கட்டும் சரி . ஏன் இந்த ஏமாற்று நடத்தை . ஒருவனுக்கு ஒருத்தி என்ற நமது பண்பாடு எல்லாம் எங்கே . காற்றோடு பறந்து போய் விட்டதா ? ஒருவர் செய்யும் தவறு இன்னொருவரை பாதிக்க கூடாது .
https://iemarriagecoalition.org/images/couples-goals-feature.jpg
எல்லோரும் இந்த உலகில் நல்லவர்களும் இல்லை . கெட்டவர்களும் இல்லை . சில நல்ல உள்ளங்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன . ஒருவனுக்கு ஒருத்தியாக இருக்கிறார்கள் . பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் கல்யாணங்களும் நடக்கின்றன . காதலர்களாக இருந்து திருமணம் செய்து இணைபிரியாத தம்பதியினராக இருப்பவர்களும் உள்ளனர் . காதலிப்பது தப்பில்லை . காதலித்து ஏமாற்றுவது தப்பு என்று சொல்ல வருகிறேன் .
http://s165.photobucket.com/albums/u73/cyarena/comments/couples/images/59.jpg
எல்லோரும் நல்லாக இருப்போம் . அன்னம் போல் இருப்போம் . இவ்வுலகில் பிறந்தோம் , சிறப்பாக வாழ்ந்தோம் , சந்தோசமாய் வாழ்ந்து இறைவனடி சேர்ந்தோம்  என்று இருப்போம் . எதைக்கொண்டு வந்தோம் , எதை கொண்டு  போகிறோம் . சில தத்துவங்கள் தான் எங்களை நல்ல மனிதர்கள் ஆக்குகின்றன .


11 comments:

priyamudanprabu said...

காதலிப்பது ஒருவரை , கல்யாணம் பண்ணிக்கொள்வது இன்னொருவரை . இதுதான் இப்போதைய லேட்டஸ்ட் பசனாக மாறி விட்டது . //////////
//////

sariya sonniingka
ina kavarchikkum
kathalukku viththiyaasam theriyala palarukku
irandaiyum poddu kulappikolkiraarkal

KATHIR = RAY said...

Idhu Vayathin Vilayattu.

Thavirkavo Thadukkavo Iyalaathu.

Epdi Yerpadukirathu Yen Yerpadukirathu Enbatharku Vayathum Paruvamum thaan kaaranam.

Take it easy policy ahga eduthukollappaduvathu oru vagail nanmaye. Yarum thangaludaya Vaalkaiyai Tholaikka vendame


Innum Trend Maarum

அ.முத்து பிரகாஷ் said...

மிகுந்த வெளிப்படையாக இருக்கிறது உங்கள் பதிவு ...
ஒவ்வொரு சொல்லும் இளைய தலைமுறையினருக்கு சரியான பாடங்கள் ...
வருகிறேன் பவி ...
.......
போபால் விபத்தில் எந்தவொரு பெண்ணும் உயிரிழக்க வில்லை
http://neo-periyarist.blogspot.com/2010/06/blog-post_14.html

Anonymous said...

கல்யாணம் இவர்களின் குறிக்கோள் அல்ல.தெரிந்தேதான் எல்லாமும்.நாய்கள் என்று சொல்லி நாய்களை கேவலப்படுத்தக் கூடாது.

Anonymous said...

எனக்கு தெரிந்து நிறைய பசங்களும் பெண்களும் தெரிந்தே தான் செக்ஸ் வரைக்கும் போகிறார்கள். லிவின் டு கெதர் ம் கல்யாணத்திற்கு என இல்லாமல் ஒரு டைம் பாஸ்ஆக உள்ளது.கல்யாணத்திற்கு பெண் பையன் பார்பவர்கள் தயவுசெய்து நன்றாக விசாரியுங்கள்.கலியாணம் பண்ணிய பிறகு நொந்து போக வேண்டாம்

Pavi said...

நன்றி பிரபு உங்கள் கருத்துக்கு

Pavi said...

நன்றி கதிர் உங்கள் கருத்துக்கு

Pavi said...

நன்றி நியோ

Pavi said...

நன்றி நண்பரே .
நீங்கள் சொல்வது சரி .
தீர விசாரித்து கல்யாணம் பண்ணி கொள்ளுங்கள்

Sivamjothi said...

Hijacked by hormones - sadguru.

M. Azard (ADrockz) said...

உண்மைதான், காலத்திற்கேற்ற பதிவு, வாழ்த்துக்கள் :)