Thursday, August 5, 2010

வடை சாப்பிடுவோம்

http://www.spiceindiaonline.com/files/images/recipes/vadai/l_vadai2.jpg
வாருங்கள் இன்று வெள்ளிக்கிழமை ஒரு சைவ ஹோட்டலில் சைவ சாப்பாடு சாப்பிடுவம் . ஓகே நானும் வருகிறேன் அண்ணா என்றேன் . நான் சொன்னேன் சாப்பாட்டுக்கு பின் வடை வாங்கி தர வேண்டும் என்று . அண்ணா சொன்னார் அதற்க்கு என்ன வடை வாங்கி சாப்பிடுவம் வாங்கோ என்று எம்மை எல்லோரையும் அழைத்து போனார் அண்ணா .
http://www.tastyindianfood.com/images/medu-vadai.jpg
இப்போது தான் நினைவு வந்தது வடை எல்லோருக்கும் பிடிக்கும் . எனக்கும் பிடிக்கும் .இதை பற்றி ஒரு பதிவு எழுதலாமே என . சரி எழுதிடுவம் . எழுதிட்டா போச்சு . வடை பலகார வகைகளில் ஒன்றாகும். நமது தமிழர் முறைப்படி பல விழாக்கள், கொண்டாட்டங்கள் , கோவில் திரு விழாக்கள் போன்றவற்றில் முக்கியமாக வடைக்கு முக்கியத்துவம் உண்டு .
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjL_MWtZatK4Ijxqar6fDlKHhVFx9qkeQhUyLJeWPkTK6GM7nrteurmvK62U6nDpGw0dnG11nFncrejeFRTPioEUAt-jA6uVxOXB672mR_-Yjd8n9g5s5qZ7YqXsLGNRurEdzLMNyPTC70/s400/StartersAamaVadaiPaajakaMythreyee.jpg
உணவுடனும் சிற்றுண்டியாகவும் பரிமாறுவர். தமிழர்களின் பெரும்பாலான விழாக்களிலும் சடங்குகளிலும் வடை பொதுவாகப் பரிமாறப்படும். எல்லோருக்கும் வடை என்றால் பிடிக்கும் . பிடிக்காதவர்கள் இருக்க முடியாது . மிகவும் சுவையாக இருக்கும் . எல்லோரும் சாப்பிட்டு இருப்பீர்கள் .


வடைகளில் உளுந்து வடை , கடலை வடை , மசாலா வடை என பல வகைகளில் உண்டு . உளுத்தம் பருப்பில் செய்யும் வடை உளுந்து வடை என்றும் , கடலை பருப்பில் செய்த வாடா கடலை வடை என்றும் அழைப்பதுண்டு . உளுத்தம் பருப்புடன் கீரையும் சேர்த்து செய்தால் அது கீரை வடை என்றும் அழைக்கப்படும் .
http://chennaimeals.com/images/Ulundhu%20vadai.JPG
உளுத்தம் வடை செய்து கடவுள்களுக்கு மாலையாக போடுவதுண்டு . உளுத்தம் பருப்பு அல்லது கடலைப் பருப்பை ஊற வைத்து கெட்டியாக அரைத்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் , நற்சீரகம்  போன்றன சேர்த்து அளவாக உப்புச் சேர்த்துப் பிசைந்தெடுத்துச் சிறு சிறு உருண்டைகளாக்கித் தட்டிக் கொதிக்கும் எண்ணெயில் போட்டு வடை சுடலாம். 
http://foods.ellamey.com/images/breakfast/medu_vada.jpg
உளுந்து வடை நன்றாக வெந்து , அவிவதட்க்காக தான் உளுந்து வடையில் நடுவில் ஒரு துளை போடுவர். உளுந்து வடையின் சிறப்பு அது . உளுந்து வடை பெரிதாக இருக்கும் . கடலை வடை சிறியதாக இருக்கும் . அதில் துளை இடுவதில்லை . விசேட வைபவங்களுக்கு பெரிதும் பயன்படுவது உளுந்து வடை தான் .
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEqBVWD0r1TP_KKFSIhmUMeJxZf9tkOHAma9B1TJhtrKHWUX0AdLY0za2g-0gzxLGV4X8VsM4bZ4wzh6dBonii44g-U1y0DmBCdsE971o6YrnEn35gfYAxaOhfJ_oAfn3ie9rF2isNEVaF/s400/ulundhu+vadai+(3).JPG
தமிழர்களின் உணவு முறைகளில் வடைக்கு பெரிதும் முக்கியத்துவம் உண்டு . இறைவனுக்கு படைப்பதற்கு பொங்கலுடன் அவல் அதனோடு வடையும் சுட்டு இறைவனுக்கு படைப்பர் . விரத நாட்களிலும் வீடுகளில் பாயாசம், வடை சுடுவார்கள் .சாப்பாட்டுக்கு பின்பு இவற்றை உண்பார்கள் .











11 comments:

ஸ்ரீ.... said...

”சுவையான” பதிவு! நானும் வடைக் காதலன்!

ஸ்ரீ....

ராம்ஜி_யாஹூ said...

ரச வடை, தயிர் வடை, சமோசா, பஜ்ஜி குறித்தும் எழுதி இருக்கலாம், அடுத்த பதிவில் எழுதுங்கள்.

Sivatharisan said...

சுவையான பதிவு வாழ்த்துக்கள். மேலும் சில ப்லோக்கேருக்கான ஓட்டளிப்புப் பட்டைகளை சேருங்கள்
tamil10,இன்ட்லி ஓட்டளிப்பு பட்டை
இனி இலகுவாக வோட்டிங் செய்யலாம்

RMS said...

வடையில் இத்தனை தகவலா?அருமை தோழி ...உங்கள் சேவை தொடருட்டும் --------->>>>>>



சீர்காழி------->இது நம்ம ஏரியா
நண்பர்களே ,இது நம்ம சீர்காழி பற்றிய ஒரு தளம்
http://sirkaliarea.blogspot.com/

Pavi said...

நன்றி ஸ்ரீ

Pavi said...

ரச வடை, தயிர் வடை, சமோசா, பஜ்ஜி போன்றன நான் சாப்பிட்டது இல்லை . அதனால் தான் எனது பதிவில் சேர்க்கவில்லை. நன்றி ராம்ஜி

Pavi said...

எனக்கு ஓட்டளிப்பு பற்றி போதிய விளக்கங்கள் தெரியாது . படைகளை நிறுவுவது சம்பந்தமாக .நன்றி சிவதர்சிகன்

Pavi said...

நன்றி மணிகண்டன்

'பரிவை' சே.குமார் said...

ஒரு வடை சாப்பிடப் போனதுக்கு வடையைப் பற்றி பதிவு எழுதியாச்சு...

ம்ம்ம்ம்.... வடை... இல்லயில்ல பகிர்வு நல்லாயிருக்கு.

Pavi said...

ஹி........ஹி
நன்றி குமார்

Unknown said...

வடை கதை ருசித்தது...நண்பர் சிவதரிசன் கூறிய படி வோட்டளிப்பு பட்டைகளை இணைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் பதிவு பலரையும் சென்றடைய உதவியாக இருக்கும் நண்பரே!