இந்திய , இலங்கை , நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது . நேற்று ஆரம்பமாகிய முதல் போட்டியில் இந்திய, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி அபார வெற்றியை பெற்றது . இந்திய அணி படு தோல்வியை தழுவியது .
இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஒருவரும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு நின்று பிடிக்க இயலாமல் திணறினர் . எல்லோரும் சொற்ப ஓட்டங்களுக்கு அரங்கு திரும்பினர் . இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களின் சொதப்பலான ஆட்டமே இந்த தோல்விக்கு காரணம் . நியூசிலாந்து அணியின் சிறந்த பந்து வீச்சும் , சிறந்த துடுப்பாட்டமும் அவர்கள் வெற்றி பெற காரணம் ஆகும் .
நேற்று நடந்த முதல் போட்டியில், இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. நாணய சுழற்ச்சியில் வென்ற நியூசிலாந்து கப்டன் ரோஸ் டெய்லர், துடுப்பாட்டத்தை முதலில் தேர்வு செய்தார். பிரவீண் குமார் பந்து வீச்சில், 11 ஓட்டங்களுக்கு அவுட்டானார் கப்டில். இங்ராம் (12) நெஹ்ராவிடம் வீழ்ந்தார். அறிமுக வீரராக களமிறங்கிய வில்லியம்சன் "டக்' அவுட்டானார். இதையடுத்து 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது நியூசிலாந்து.
ஸ்டைரிஸ் (89), ரோஸ் டெய்லர் 95 ஓட்டங்களை பெற்று சதம் பெறும் வாய்ப்பை நழுவ விட்டார் .நியூசிலாந்து அணி 48.5 ஓவரில் 288 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது . இந்திய தரப்பில் நெஹ்ரா 4, பிரவீண் 3 விக்கெட் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்து ஆடிய இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக், சேவாக் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். சேவாக் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் 14 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.பின்பு வந்த வீரர்களும் நின்று நிலைக்கவில்லை .ரோஹித் ஷர்மா (6), யுவராஜ் சிங் (5), ரெய்னா (6), தோனி (2) என்று ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டமிழந்தனர் .ரவீந்திர ஜடேஜா 20 ஓட்டங்களை எடுத்தார். ஏனைய வீரர்கள் பிரகாசிக்க தவறினர் .
29.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து இந்திய அணி வெறும் 88 ஓட்டங்களை மட்டும் பெற்று படுதோல்வி அடைந்தது.
நியூசிலாந்து தரப்பில் டபி 3, மில்ஸ், ஓரம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். டெய்லர் 4 பிடி எடுப்புகளை பிடித்தார். 95 ஓட்டங்களை குவித்த அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இவ்வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 4 புள்ளிகள் பெற்றது. தவிர, போனசாக ஒரு புள்ளி பெற்றது.
3 comments:
sothappal thuduppaaddam thaan india tholvikku kaaranam.
kala
sothappal thuduppaaddam thaan india tholvikku kaaranam.
kala
நன்றி கலா
Post a Comment