அதிகரித்து வரும் சனத்தொகை பெருக்கத்தினால் சூழல் மாசடைகிறது . சூழல் மாசடைவதால் இயற்கை சமநிலையற்ற தன்மை தோன்றுகிறது . மரங்கள், காடுகளை அளிக்கிறார்கள் . இதனால் இயற்கை அழிவுகள் எல்லா இடங்களிலு ஏற்பட்டு அதிகமான எண்ணிக்கையிலான மக்கள் தினம் தினம் பலியாகி கொண்டு இருக்கிறார்கள் .
சில பாரிய இயற்கை அனர்த்தங்கள் மனித வாழ்வின் இயல்பு நிலையை குலைத்து, இடப்பெயர்வு, சொத்துகள் அழிவு , உயிர் அழிவு என்பவற்றை ஏற்படுத்துகின்றன .மழை, புயல், நிலநடுக்கம், மண்சரிவு… என்ற இயற்கை அழிவுகள் மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் ஏற்படுவது தான் . அதில் பணக்காரன், ஏழை என்ற எந்த பேதமும் இல்லாமல் எல்லோரையும் காவு கொண்டு சென்று விடும் . வாழும்வரை வாழ்க்கை . அழிவு வந்தால் எல்லோருக்கும் ஒன்று தான் .
மனிதனின் சுயநலமற்ற போக்கே காரணம் இந்த இயற்கை அழிவுகளுக்கு என்று தான் சொல்ல வேண்டும் .வரலாற்றுக்காலம் முதல் இயற்கைக் காரணிகள் ஏற்படுத்திய அழிவுகள் குறிப்பிடப்பட்டாலும் கூட, நவீன காலத்தில் உலகளாவிய ரீதியிலான சனப்பெருக்கமானது இத்தகைய இயற்கை அழிவுகளினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை உடனடியாக காவு கொள்கிறது . அழிவுகள் தற்காலத்தில் இன்னும் அதிகரித்து விட்டன .
மனிதனால் உருவாக்கப்பட்ட அணுகுண்டு உட்பட நவீன ரககுண்டுகள் நொடிப்பொழுதில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொள்ளத்தக்கவை. செயற்கைக் காரணிகளைத் தவிர இயற்கைக் காரணிகளாலும் உலகளாவிய ரீதியில் பேரழிவுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
சூறாவளிகள், நில அதிர்வுகள், எரிமலை வெடிப்புக்கள், கடும் மழை, வெள்ளம், கடும் வரட்சி…. இவ்வாறு இயற்கை அழிவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த ஆண்டு இயற்கை அழிவுகள் நிறைந்த ஆண்டாக காணப்படுகிறது . எரிமலை குழம்பு வெடித்தது , ரஷ்யாவில் காட்டுத்தீ , பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு , அமெரிக்காவில் சூறாவளி என்று பல நாடுகளிலும் அனர்த்தங்கள் இடம் பெற்று கொண்டு இருக்கின்றன .
ஒரு அனர்த்தத்தால் உயிர்ச்சேதங்கள், பொருட் சேதங்கள், உட்கட்டமைப்புச் சேதங்கள், வாழ்வாதாரத் தொழிற்சேதங்கள் என்பன ஏற்படுகின்றன . உயிர்ச் சேதங்கள் ஒருபுறமிருக்க சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் சொல்லில் அடங்காது காணப்படுகின்றன இந்த அழிவுகளால் . சொத்துகளை நாம் பிறகும் தேடி கொள்ளலாம் . உயிர் போனால் திரும்ப வருமா ? இல்லையே .
எத்தனை மக்கள் சொந்தங்களை இழந்தும் , கால், கைகள் ஊனம் ஆக்கப்பட்டும் , தாய், பிள்ளைகளை இழந்தும் எத்தனை மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் இந்த உலகில் . இவ்வாறான அழிவுகளால் . அழிவுகள் இப்போ வரும் , அப்போ வரும் என்று தெரிவதில்லை . உடனே வந்து விடுகிறது . இதனால் உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன .
பல உயிர்கள் பிறந்து தவழ்ந்து கொண்டு இருக்கையில் பல உயிர்கள் இந்த மண்ணை விட்டு பிரிந்து கொண்டு இருக்கின்றன . இதுதான் நியம்.
14 comments:
சூழலியல் குறித்து ஏங்கும் உங்கள் மனம் அழகு !
வாழ்த்துக்கள் சகோதரி, யார் எக்கேடு கெட்டால் என்ன தான் மட்டும் வாழ்ந்தால் சரி என நினைக்கிறார்கள்.
உண்மைதான் பவி... அழிவுகள் எப்ப வரும் என்பது தெரியாது ஆனால் அவை விட்டுச்செல்லும் மிச்சங்கள் வேதனையின் உச்சமே.
நல்ல பகிர்வு.
nalla pakirvu pavi
mano
நன்றி நியோ
சுயநலம் மிக்கது இந்த உலகம்
நன்றி சகோதரி சுதா
நன்றி குமார்
நன்றி மனோ
இப்படி நடந்தால் மட்டுமே இயற்கை சமன்படும் .இது இயற்கையின் நியதி.
இயற்கை மனிதற்கு மட்டுமானதல்ல ,எல்லா உயிருக்கும் பொதுவானது
நல்ல படைப்பு வாழ்த்துக்கள்
நன்றி செந்தில்
நன்றி யாதவன்
மனிதனின் சுயநலமற்ற போக்கே காரணம் இந்த இயற்கை அழிவுகளுக்கு என்று தான் சொல்ல வேண்டும் //
சுயநலப்போக்கே காரணம்.
பொதுநலத்தைச் சிந்திதிருந்தால்
இயற்கை பாதுகாக்கப்ப்ட்டிருக்கும்.
Post a Comment