Tuesday, August 10, 2010

வரலட்சுமி விரதம்

http://sathyasaibaba.files.wordpress.com/2008/07/goddess-wealth-lakshmi.jpg
வரலட்சுமி விரதம் என்பது சுமங்கலிப் பெண்கள் செய்யும் மிகச் சிறப்பான பூஜையாகும்காவிஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியைக் குறித்துச் செய்யப்படுவதே வரலட்சுமி விரதமாகும். இந்த விரதத்தை சுமங்கலி பெண்கள் பிடித்தால் மிகவும் நல்லது .

கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த விரதத்தை சுமங்கலிப் பெண்கள் எல்லோரும் பிடிக்கின்றனர் .

விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். லக்ஷ்மம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள். விஷ்ணு பகவான் தான் எங்கும் நிறைந் துள்ளதை விளக்க, உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மகாலட்சுமி ஆகும்.

இந்த விரதத்தை
ஆடி மாதம் சுக்கில பட்சத்தில் பெளர்ணமிக்கு அடுத்து வரும் வெள்ளிக் கிழமையில் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். இது ஒரு மங்களகரமான விரதம், மனதிற்கு நிம்மதி தரும், இம்மையும், மறுமையும் நல்ல விதத்தில் அமைய வழி வகுக்கும் விரதமாகும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFvH84cHm5j7HaXJSgQiHxYtOO24HGxIGiho4MD70-nxCLCX9kMwISgDLNTejVlfJFQU-ZWcuVhkFRvx3jqhuU0wVtgk3_pi_7335GOENDSejjGnFCoCsTXg0IrZmdLRdt8jN7Lu-0C5A/s400/hindu+goddess+laxmi+wallpaper+lakshmi+mata.jpg
தனலட்சுமி, தான்யலட்சுமி , வீரலட்சுமி, ராஜ-லட்சுமி, சந்தானலட்சுமி, ஆதி-லட்சுமி, வித்யாலட்சுமி, விஜயலட்சுமி என்று எல்லாம் லட்சுமிகள் இருக்கிறார்கள் . பல வடிவங்களில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். சக்திகளின் மூலமாகத்தான் கல்வி, செல்வம், ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்து வரங்களும் பெறப்படுகின்றன.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAtyaet1ATbkQHg8oKpG0aUUeTmZlWvt6zgw0u-iTVBvBwh07Uhs1sExif4psMDMVThGXdptT6nPTo8nO4Jg-EgOT2ADFqkvROq3-Vq4W8Y5PoLmr8349t4CYRmamDa_9kZME5BI5PUU8/s400/Ashtalakshmi.jpg
சிரவண மாதம் எனப்படும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில், பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சுமங்கலிகள் அனுஷ்டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதைச் செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர்.

பூஜைக்கு முதல்நாள் வீட்டைப் பெருக்கி மெழுகி, மாக்கோலமிட்டு செம்மண் பூச வேண்டும். வாசற்படிக்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். மாக்கோலமிட்டு செம்மண் இட்ட ஒரு பலகையின் மேல் தலைவாழை இலை வைத்து, அதில் சிறிது அரிசியைப் பரப்பி, அதன் மேல் அம்மன் கலசத்தை வைப்பார்கள். கலசத்தில் அரிசி அல்லது தண்ணீரை நிரப்பி, மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து, சந்தனம், மலர் ஆகியவற்றால் அலங்கரித்து, கலசத்தின்மேல் தேவியின் பிரதிமையை வைத்துப் பூஜை செய்வர். ஒன்பது முடிச்சுடைய மங்களகரமான மஞ்சள் கயிற்றைப் பூஜையில் வைத்து வழிபட்ட பின்னர், அதை வலது மணிக்கட்டில் கட்டிக் கொள்ள வேண்டும்.
http://www.nithyanandavedictemple.org/images/deities/lakshmi.jpg
அஷ்ட ஐஸ்வரியங்களுக்கும்  அதிபதி வரலட்சுமி. வரலட்சுமி விரதம் இருப்பதால் குடும்ப நிம்மதி, கணவருக்கு நீண்ட ஆயுள், நெல், பொன், வாகனம், அன்பு, அமைதி, இன்பம், ஆரோக்கியம், புகழ் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம் . ஆவணி மாதத்தில் வரும் விரதங்களில் முக்கியமான விரதம் வரலட்சுமி விரதம்.

விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அன்று மாலை சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந் ததும் மங்கலப் பொருட்களுடன் தட்சணையும் வைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும்.

அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுங்கள் . சகல ஐஸ்வரியங்களும் உங்களுக்கு உண்டாகும் .











2 comments:

Anonymous said...

sumankali penkal pidikka vendiya viratham.


kala

Pavi said...

சரியான விடயம் . நன்றி கலா