Monday, September 6, 2010

காதலர்களின் சின்னம் தாஜ்மஹால்

http://api.ning.com/files/y*H9l6Up33ze7quInUz9vyR3figeA24bJLmGE3Swvd8d*xrUzveRIrzRTjkTmbTp6G2uBJbNuc8D7w8u-M1cNyEg4Km3Idxk/Taj_Mahal_in_March_2004.jpg
உலக அதிசயங்களில் ஒன்றாகவும் , காதலர்களின் சின்னமாகவும் காணப்படுகிறது தாஜ்மஹால் . இந்தியாவுக்கே ஒரு பெருமை சேர்க்கிறது . ஆக்ரா என்ற இடத்தில் யமுனை ஆற்றங் கரையோரம் தாஜ்மஹால் அமைந்திருக்கிறது.

ஆசியாவின் மிகவும் பிரபலமான இடமாகவும் , ஏராளமான உல்லாச பிரயாணிகள் வந்து பார்க்கும் இடமாகவும் உள்ளது இந்த தாஜ்மஹால் . உலகின் அதிசியமாகவும் ,  காதலர்களின் கனவு மாளிகை ஆகவும் பாரதத்தின் பெருமைச்சின்னம் ஆகவும் காணப்படுகின்றது .
http://www.indiadaily.org/images/taj-mahal-7-wonders_26.jpg

உலக வரலாற்றில் தாஜ்மஹாலைப் போல் ஒரு இனிய கல்லறை இன்னும் எத்தனை ஜென்மங்களிலும் உதயமாகப் போவதில்லை. மும்தாஜ் எனும் அழகிய மனைவியின் மீது ஷாஜகான் வைத்திருந்த நேசத்தின் கலை வடிவம் தான் இந்த அழகிய மஹால் . என்ன அழகு . கண்களை பறிக்கிறது . படங்களை பார்க்கும் போதே இவ்வளவு அழகு என்றால் நேரில் பார்த்தால் என்ன அழகாக இருக்கும் . அந்த கொடுப்பனவு எல்லோருக்கும் கிடைப்பதில்லையே.

உலகக் கண்கள் அனைத்தும் காணத்துடிக்கின்ற காதல் சின்னமொன்று உண்டெனில் அது தாஜ்மஹால் தான் என்பதற்கு என்றுமே மாற்றுக்கருத்து கிடையாது. அதன் மெய்மறக்கச் செய்யும் அழகும், வடிவமைப்பும் இன்றுவரை அனைவரையும் ஆச்சரியத்துக்கும் , வியப்புக்கும் அல்லவா உண்டாக்குகின்றது .
http://www.dirjournal.com/info/wp-content/uploads/2009/01/taj_mahal_2.jpg
பளிங்கு கற்கள் சீனாவிலிருந்தும், வைரங்கள் பன்னாவிலிருந்தும், சிவப்புக் கற்கள் பதேபூர் சீக்ரியிலிருந்தும், நீலக்கற்கள் இலங்கையிலிருந்தும் கொண்டுவரப்பட்டன. அவற்றை கொண்டு பல பேரின் உழைப்பால் கட்டி முடிக்கப்பட்டது . தாஜ்மஹாலு்க்கு ஷாஜகான் பயன்படுத்திய சலவைக்கற்களே வேறு. அது மேக்ரான் என்ற உயர்ந்தபிரிவைச்சேர்ந்தவை எந்த ஒரு அமிலமும் இதனைக் கறுப்பாக்கமுடியாது,சேதப்படுத்தமுடியாது. இந்தவகைக்கற்களின்மேல்படியும் அழுக்குகள்பிசுபசுப்பாகி ஒட்டிக்கொள்ளாது. அதனால் தான் எப்போது பார்த்தாலும் பளிங்கு போல இருக்கின்றது பார்ப்பதற்க்கு .

வெனிஸ் நகரத்து வெரோனியா, துருக்கி நாட்டு உஸ்தாக் இசா அபாண்டி, லாகூரைச் சேர்ந்த அகமத் எனப் பலரும் வந்திருந்து ஷாஜகானும், கூட்டுச் சேர்ந்து அமைத்த மொத்த வடிவமே இன்றைய தாஜ்மஹால்.

http://www.ocprsa.org/images/PROTOS/protos_passport_tajmahal_india.jpg

313 ச.அ (93.9 ச.மீ) பரப்பளவில் கட்டப்பட்டுள்ள தாஜ்மஹாலின் மேல் விதான மாடம் மையத்திலிருந்து 187 அடி உயரம் கொண்டது. ஸ்தூபிகள் ஒவ்வொன்றும் 137 அடி உயரம் கொண்டதாகும். சமச்சீராக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு மிகச் சிறந்த/பொருத்தமான உதாரணமெனில் அது தாஜ்மஹால்தான் என்று கூறப்படுவதற்கு காரணம், அதன் இருபுறமும் சிவப்புக்கற்களால் கட்டப்பட்டள்ள கட்டிடங்களேயாகும். நிரந்திர உலக அதிசயமாக  திகழும் தாஜ்மஹாலின் கட்டிட அழகிற்கு நிகரான ஒரு கட்டிடம் இதுவரை தோன்றியதில்லை, இனி தோன்றப்போவதும் இல்லை.

இற்றைய நிலையில், யமுனை ஆற்றங்கரைக்கு அழகு சேர்த்திடும் தாஜ்மஹாலைக் காண கோடிக்கணக்கானோர் வந்து கொண்டிருக்கிறார்கள் . இன்னும் வருவார்கள் . காதலர்களின் சின்னம் அல்லவா. அதை எப்படி மறப்பது ?

இன்றும் எத்தனை பாடல்கள் தமிழ் திரைப்படங்களில் இருக்கிறது தாஜ்மஹாலை பற்றி .
தாஜ்மஹால் ஓவிய காதல்
தேவதாஸ் காவிய காதல்
தனிரகம் இந்த காதல்தான்
தேசம்தான் பேசும் இதையே
இந்த உறவு இறுதி வரைக்கும்
இறைவன் போல் எங்க வாழ்வும்
இருந்திடும் ஜென்மம் ஏழேழும் பிரிவு இல்லையே
உதடு எல்லாம் உனது பெயரே
http://www.topnews.in/files/tajmahal.jpg
தாஜ்மஹால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ

தாஜ்ஜுமஹால் ஒன்று வந்து 
காதல் சொல்லியதே 
தங்க நிலா ஒன்று என் 
மனதை கிள்ளியதே 

தாஜ்சுமஹாலே நீ தாவி 
தாவி வந்தது ஏனோ 
தங்கனிலாவே 






























8 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

அரிய மற்றும் அருமையான தகவல்கள்...

தாஜ்மஹாலுக்கு வெளியில் உள்ள தூண்கள் நான்கும் வெளிப்பக்கம் சாய்வாக கட்டப்பட்டிருக்கும். காரணம் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் இந்த தூண்கள் கீழே விழ நேர்ந்தாலும் தாஜ்மகாலின் மீது விளக் கூடாது என்ற காரணத்திற்காக கட்டப்பட்டது...

காதலின் சின்னமாக கருத்தப்படும் இந்த தாஜ்மஹால் கட்டுவதற்கு சில நூற்ற்றண்டுகள் முன்னரே.. ஒரு பெண் தான் கணவனின் நினைவாக ஒரு மிகப்பெரிய நினைவு மண்டபம் ஓன்று கட்டினார்... அது அந்த காலத்தில் உலக அதிசயமாக கருதப்பட்டது.. இது பற்றிய பதிவு ஓன்று என் பக்கத்தில் கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்...

'பரிவை' சே.குமார் said...

அரிய மற்றும் அருமையான தகவல்கள்...

Pakirvukku nanri pavi.

Anonymous said...

arumai..........


mano

Pavi said...

நன்றி வெறும்பய
எனக்கு தெரியாத தகவல்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு

Pavi said...

நன்றி மனோ

ம.தி.சுதா said...

அருமை… வாழ்த்துக்கள்..

Jaleela Kamal said...

பவி நலமா?
இப்ப தான் நார்த் இந்தியா ரூர் ப்போய் வந்தேன், தாஜ் மஹாலை நேரில் கண்டு வியந்து வந்தேன், அருமையான விளக்கங்கல் படங்கல் எடுத்து வந்துள்ளேன், விளக்கம் உங்களுடையதை போட்டு விட வேண்டியது தான்.

meeran said...

good