அவள் ஒரு தேவதை
போல் இருப்பாள்
அவளை பல ஆண்கள்
காதலிக்க துடித்தனர்
ஆனாலும் , அவள்
விருப்பம் என்னவோ
என்னவோ என
ஏங்கிய ஆண் உள்ளங்கள்
அதிகம் - எனினும்
அவள் யாரையும்
காதலிக்கவில்லை - இருந்தும்
அவள் பின்னால் எப்போதும்
ஆண்கள் கூட்டம் தான்
அவள் அவர்கள் யாரையும்
கணக்கெடுப்பதுமில்லை, திரும்பி
அவர்கள் முகத்தை பார்த்தது
கூட இல்லை - எல்லா
ஆண்களும் இவள் ஒரு
அகந்தை பிடித்தவள் , கோபக்காரி ,
சிடுமூஞ்சி , பெரிய அழகி
என்ற நினைப்பு அவாக்கு என்று
குமுறி குமுறி தமது
நண்பர்களுடன் முறை இட்டனர் .
அவளை பற்றிய உண்மை
தெரிந்ததும் அவர்கள் எல்லோரும்
வேதனை பட்டனர் , அழுதனர்
கண்ணீர் , கண்ணீராய் சொரிந்தனர்
அதுதான் அவளுக்கு வந்திருக்கும்
நோய் பற்றியது தான் அந்த சம்பவம்
அவள் தனது சாவை , இறப்பை எண்ணிக்
கொண்டிருக்கிறாள் - அவளுக்கு இருப்பதோ
ஒரு தீராத வியாதி , வைத்தியர்கள்
எல்லோரும் கைவிருத்து விட்டு விட்டார்கள்
அதனால் தான் அவளுக்கு
அவள் மீது வெறுப்பு , இந்த
உலகின் மீது வெறுப்பு
இந்த வாழ்க்கை மீதே வெறுப்பு
ஆண்கள் மீது வெறுப்பு , இப்படி
எல்லாவற்றின் மீதும் வெறுப்பு
ஏற்பட காரணம்
அவள் தான் என்ன செய்வாள் ?
இது யார் குற்றம் ?
தாய் குற்றமா?
தந்தை குற்றமா?
அல்லது படைத்த இறைவன்
மீது குற்றமா ?
விதி என்பதா? மதி என்பதா?
இது என்னடா உலகம் .........
1 comment:
roppa nalla irukku ana manasukku kadamavum irukku...
Post a Comment