பல நல்லுள்ளங்கள் எல்லோருக்கும் உதவி செய்து கொள்வது வழமை . உதவி செய்து உபத்திரம் ஆவதும் உண்டு . நாம் உதவி செய்யத்தான் வேண்டும் . அது யார் யாருக்கு எல்லாம் உதவி செய்ய வேண்டும் என்பதை நாம் அறிந்து இருத்தல் வேண்டும் .
அதாவது ஊனமுற்றோர், தாய் தந்தையரை இழந்தோர் போன்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் . உடல் நலமாக இருந்தும் பிச்சை எடுப்போருக்கு நாம் ஒரு உதவியும் செய்ய கூடாது . அவர்கள் உழைத்து பிழைக்கலாம் . அவர்களை சோம்பேறிகள் ஆக்க கூடாது . ஒரு கை இழந்த , கால் இழந்து நடக்க முடியாமல் அல்லல் படுவோர் , கண்தெரியாதோர் இவர்களுக்கு நாம் கட்டாயம் உதவி செய்யத்தான் வேண்டும் . அது நமது கடமை .
தாய் , தந்தையரை இழந்து அநாதைகள் ஆக்கப்பட்டு இருக்கும் பிள்ளைகளுக்கு கட்டாயம் உதவி செய்யத்தான் வேண்டும் . அவர்கள் சிறுவயதிலேயே அநாதைகள் ஆக்கப்பட்டு விட்டால் அவர்களின் எதிர்காலம் என்ன ? நல்லமனம் படைத்தோர் , வசதி படைத்தோர் அவர்களுக்கு உதவிகரம் நீட்ட வேண்டும் . அவர்களை படிக்க வைத்து சிறந்த மனிதனாக அவன் வர உதவி செய்ய வேண்டும் .
வசதி படைத்தோர்கள் சாப்பாட்டை கூடுதலாக செய்து மிகுதியை குப்பைக்குள் கொட்டுகின்றனர் . இது தப்பு . ஒருநேரம் சாப்பாடு இல்லாமல் உலகில் எவ்வளவு பேர் வறுமையில் வாடுகின்றார்கள் . அதை ஒரு நிமிடம் சிந்தியுங்கள் . ஒரு நேரம் உன்ன வழியில்லாமல் அவதிப்படுவோர்களுக்கு நாம் மிஞ்சும் உணவை கொடுத்து உதவலாம் தானே . அதை ஏன் எல்லோரும் செய்கிறார்கள் இல்லை . இதுதான் கவலை அளிக்கும் விடயம் .
2 comments:
me first
உடல் நலமாக இருந்தும் பிச்சை எடுப்போருக்கு நாம் ஒரு உதவியும் செய்ய கூடாது . அவர்கள் உழைத்து பிழைக்கலாம் . அவர்களை சோம்பேறிகள் ஆக்க கூடாது . ஒரு கை இழந்த , கால் இழந்து நடக்க முடியாமல் அல்லல் படுவோர் , கண்தெரியாதோர் இவர்களுக்கு நாம் கட்டாயம் உதவி செய்யத்தான் வேண்டும் . அது நமது கடமை .
correct pavi
Post a Comment