Friday, March 11, 2011

இலங்கை அணியின் அதிரடி

Tillakaratne Dilsha

உலகக் கிண்ணம் இப்போதுதான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது . கண்டி பல்லேகல மைதானத்தில் பகல்இரவு ஆட்டமாக நேற்று  நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 327 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டில்சான் மற்றும் தரங்க அபாரமாக துடுப்பெடுத்தாடினர்.
Upul Tharanga
இருவரும் அபாரமாக ஆடி இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்து அதிரடியாக ஆடினர். இருவரும் சதம் பெற்றனர் . பன்யங்கராவின் முதல் ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் டில்சான். பின் மொபோபு ஓவரில் தரங்க வரிசையாக 3 பவுண்டரி அடித்தார். தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசிய இவர்களை வெளியேற்ற முடியாமல் ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள்  தவித்தனர். 
Tillakaratne Dilshan
சிகும்பரா பந்தை ஒரு ஓட்டத்துக்கு  தட்டி விட்ட டில்சான், உலக கோப்பை அரங்கில் முதல் சதம் எட்டினார். இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 9வது சதம். மறுபக்கம் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த தரங்க, பிரைஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி சதம் கடந்தார். இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் தொடக்க வீரர்கள் இருவரும் முதல் முறையாக சதம் அடித்து சாதனை படைத்தனர். பின் லாம்ப் ஓவரில் தரங்க 3 பவுண்டரி அடிக்க, ஸ்கோர் "ஜெட்' வேகத்தில் உயர்ந்தது. தரங்க 133 ஓட்டங்களுக்கு (17 பவுண்டரி) மொபோபு பந்தில் அவுட்டானார். டில்சான் 144 ரன்களுக்கு(16 பவுண்டரி, 1 சிக்சர்) உத்சேயா வலையில் சிக்கினார்.
Tillakaratne Dilshan
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 139 ஓட்டங்களால் இலகுவாக வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 327 ஓட்டங்களை பெற்றது.328 எனும் கடின வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி ஆரம்பம் முதலே அதிரடியாக துடுப்பெடுத்தாடிய போதும் பின்னர் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறியது .இறுதியில் சிம்பாப்வே அணி 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 139 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Brendan Taylorடில்சான் சுழலில் உத்சேயா(4) சிக்கினார். இவரது அடுத்த ஓவரின் 3வது பந்தில் எர்வின்(17) அவுட்டானார். 4வது பந்தில் ஜெயவர்தனாவின் கலக்கல் "கேட்ச்சில்' லாம்ப்(0) நடையை கட்டினார். இதையடுத்து டில்சானுக்கு "ஹாட்ரிக்' வாய்ப்பு காத்திருந்தது. 5வது பந்தில் கிரிமர் கொடுத்த "கேட்ச்சை' இம்முறை ஜெயவர்தனா நழுவவிட, அரிய வாய்ப்பு வீணானது. டில்சான் 4 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை கைப்பற்றினார் . 


இலங்கை அணியின் பந்து வீச்சில் டில்சான் 4 விக்கெட்டுகளையும், முரளிதரன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். நேற்றைய போட்டியின் மூலம் முரளிதரன் இலங்கை மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 150   விக்கட்டுகளை கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி வெற்றியின் மூலம் காலிறுதியை உறுதி செய்யப்பட்டுள்ளது. போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டத்திலும் பந்து வீச்சிலும் பிரகாசித்த டில்சான் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை அணியின் வெற்றி தொடரட்டும் ..............................







2 comments:

'பரிவை' சே.குமார் said...

nalla pakirvu... intha murai potti kadumaiyaga irukkum...

Pavi said...

உண்மைதான் . நன்றி குமார்