Friday, June 17, 2011

என்ன வாழ்க்கைடா இது ....


பிச்சை ஏந்தி சம்பாதித்து 
கோடி கோடியாக சம்பாதிக்கிறது 
ஒரு கூட்டம் -மற்றவரை பார்த்து 
பரிகாசம் செய்யும் கூட்டம் 
ஒரு பக்கம் - கொலை செய்து 
பிழைக்கிறது ஒரு கூட்டம் 
கடத்தல் செய்து பிழைக்கிறது 
மற்றொரு கூட்டம் 
கள்ள நோட்டு அடித்து 
பணத்தை அள்ளுகிறது 
இன்னொரு கூட்டம் 
மக்களின் வயிற்றில் அடித்து 
பணத்தை கறக்கிறது ஒரு கூட்டம் 
நம் பண்பாடை இழந்து 
கலாசாரத்தை இழந்து 
நாகரிகம் என்ற போர்வையில் 
மூள்கிறது இன்னொரு கூட்டம் 
அரசியலுக்கு வந்து பிழைக்கிறது
ஒரு கூட்டம் - மதங்களின் 
பெயரை சொல்லி பணம் கறக்கிறது 
இன்னொரு கூட்டம் -பேரும்
புகழும் கிடைத்தால் போதும் 
எதையும் செய்ய துடிக்கிறது 
இன்னொரு கூட்டம் 
என்ன வாழ்க்கைடா என்று 
எண்ணத் தோன்றுகிறது அல்லவா ?
என்ன வாழ்க்கைடா இது ..........................








5 comments:

குறையொன்றுமில்லை. said...

ஆமா, என்ன வாழ்க்கைடா இது தான்.

JAWID RAIZ (ஜாவிட் ரயிஸ்) said...

நல்ல கவிதை.. தொடருங்கள் தோழி

Admin said...

இதுதான் வாழ்க்கை... நல்ல வரிகள்

Pavi said...

நன்றி ஜாவிட் ரயிஸ் உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்

Pavi said...

நன்றி சந்ரு