கஷ்டப்பட்டு படிக்கிறோம் , கஷ்டப்பட்டு நல்ல வேலைக்கு போகணும் . சம்பாதிக்கணும் , இந்த விளையாட்டில் நான் வெற்றி பெற வேண்டும் . கிரிக்கெட்டில் நன்றாக விளையாடி சாதிக்கணும் . ஓட்டப்பந்தயத்தில் முதலாம் இடம் பெற வேண்டும் . இப்படி எல்லாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும் .
கனவு எல்லோருக்கும் நனவாகிறதா ? எந்த விடயத்திலும் நாம் புத்திசாதுரியமாக நடக்க வேண்டும் . ஒரு காரியத்தை செய்யும் முன்பு பல தடவை யோசித்து , சிந்தித்து செயல்படல் வேண்டும் . ஒரு வேலைக்கு நாம் போகப் போகிறோம் . அங்கு எவ்வளவு சம்பளம் குடுப்பார்கள் . நல்ல இடமா ? நல்ல கம்பனியா ? எனக்கு தகுந்த வேலையா ? என் படிப்புக்கு ஏற்ற வேலையா ? என பலதும் , பத்தும் யோசித்து சிந்திக்கின்றோம் .
எல்லோரும் கடுமையாக உழைக்கிறார்கள் . சம்பாதிக்கிறார்கள் . அவர்களின் வெற்றிக்குப் பின் கடும் பயிற்சி இருக்கும் . புகழ்பெற்ற பேச்சாளர்கள் எல்லோரும் கடும் பயிற்சியின் பின்பு தான் பேச ஆரம்பிக்கிறார்கள் . இன்று கூட பல ஆராய்ச்சியாளர்கள் பல ஆராய்ச்சிகளில் இறங்கி உள்ளனர் . சிலர் ஆராய்ச்சிகளில் வெற்றி பெறுகின்றனர் . அவர்களுக்கு வேகம், விவேகம் இருக்கிறது .
கடுமையான உழைப்பின் வெற்றியை இலகுவில் எல்லோராலும் அடைந்து விட முடியாது . சாதிக்கத் துடிக்கும் எந்த மாணவனுக்கும் வேகம், விவேகம் , கடும் பயிற்சி இருக்க வேண்டும் . படித்து , பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்பது மாணவர்களின் கனவு . அதில் எத்தனை மாணவர்கள் பல்கலைகழகம் செல்கிறார்கள் ?
ஒரு விடயத்தை செய்ய முன்பு தன்னாளான முழு சக்தியையும் பிரயோகித்து முழு மூச்சுடன் திட்டமிட்டு கடுமையாக உழைக்க வேண்டும் . நாம் சிறந்த திட்டமிடல் மூலம் எமது செயட்பாடுகளை இலகு அடைவதை நோக்காகக் கொண்டு செயட்படுவோம் என்றிருந்தால் எமது முயற்சி வீண்போகாது .
5 comments:
எந்த வேலையே செய்ய தொடங்கும் முன் தன்னம்பிக்கையுடன் செய்தால் வெற்றி தான், மாறாக ராக்கெட் மேல் நம்பிக்கை இல்லாமல் சூடம் ஏற்றி காண்பித்து ராக்கெட்டை செலுத்தினால் வெடிக்க தான் செய்கிறது...
ஆமாம் ஜீவா .நன்றி உங்கள் வருகைக்கு
ஒரு விடயத்தை செய்ய முன்பு தன்னாளான முழு சக்தியையும் பிரயோகித்து முழு மூச்சுடன் திட்டமிட்டு கடுமையாக உழைக்க வேண்டும் . நாம் சிறந்த திட்டமிடல் மூலம் எமது செயட்பாடுகளை இலகு அடைவதை நோக்காகக் கொண்டு செயட்படுவோம் என்றிருந்தால் எமது முயற்சி வீண்போகாது .
ஆமா ரொம்ப சரியா சொன்னீங்க.
ஆமாம். நன்றி லக்ஷ்மி அம்மா .
Post a Comment