அநேக படங்கள் வெற்றி படங்கள் தான் . வசூலிலும் சக்கை போடு போடுகிறது ரஜனியின் படங்கள் . இப்போதெல்லாம் பழைய படங்களை ரீமேக் செய்யும் காலம் . அதில் ரஜனியின் படங்களை ரீமேக் செய்ய அதிகமானோர் விரும்புகிறார்கள் . ரஜனி நடித்த படத்தின் தலைப்பை பயன்படுத்தவும் துடிக்கிறார்கள் .
எந்திரன் பல கோடிகள் செலவழித்து எடுக்கப்பட்ட படம் என்று எமக்கு தெரியும் . நல்ல வசூல் போட்ட முதலை விட வசூல் ஆகி இருக்கிறது . ரஜனி சூப்பர் ஸ்டார் தான் என்று புரிகிறது . இந்த வயதிலும் ரஜனி பட்டையை கிளப்பிக் கொண்டு தான் இருக்கிறார் . ரஜனியை அசைக்க முடியாது .
சரி விசயத்துக்கு வருவோம் . ரஜனியை எல்லோருக்கும் பிடிக்கிறது . ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு காரணம் இருக்கிறது . நான் சின்ன வயதில் இருந்து ரஜனியின் படங்களை அதிகம் ரசித்து பார்ப்பதுண்டு . அவரின் நடிப்பு , ஆக்சன் , ஸ்டைல் என்று சொல்லிக் கொண்டே போகலாம் .
பாட்சா, எஜமான் படத்தில் அவரின் நடிப்பு பிடிக்கும் . முத்து , படையப்பா அவரின் ஸ்டைல் பிடிக்கும் . எந்திரன் பிரமாண்டம் . இப்படி ஒவ்வொரு படங்களையும் சொல்லிக் கொண்டே போகலாம் . தலையை சிலுப்பி விடும் விதம் , பாடல்களில் அவரின் நடிப்பு , நகைச்சுவை காட்சியில் அவரின் நடிப்பு, பாணி என்பன எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் .
சினிமாவுக்கு வெளியில் என்று பார்த்தால் எல்லோரிடமும் எளிமையாக பழகும் விதம் , ஏனைய நடிகர்களை ஊக்குவிக்கும் பாங்கு போன்றன எனக்கு பிடிக்கும் . நண்பர்களே உங்களுக்கும் ரஜனியை பிடித்து இருக்கும் . உங்களுக்கு பிடித்த விடயங்கள் என்ன ? வாங்க உங்க கருத்தையும் தெரிவியுங்க ....
7 comments:
முதலில் எளிமை..
இங்கு ஒரு படம் நடித்து விட்டலே பந்தாப்பண்ணும் சினிமா உலகத்தில் 150 படங்கள் நடித்துவிட்டு எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் இருக்கும் சுபாவம் என்னை மிகவும் கவர்ந்தது.
அடுத்து பக்தி..
தொழில் மீதும், பாபா மீதும் அவர் கொண்டுள்ள பக்தி அபரிமிதமானது...
இன்றும் கூட தான் கொண்ட கொள்கை மாற்றாமல் நடித்து வருகிறார்.
எவ்வளவு பணம் வந்தாலும் பக்தி குறையாமல் இருக்கிறது தலைவரிடம்...
ரஜினியின் உதவும் குணம்...
வெளியில் தெரியாத பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்துவருகிறார் இவர்.
தன்னை வைத்து படம் எடுத்து தற்போது நொடிந்த பல தயாரிப்பாளருக்கு தற்போது படம் நடித்து கொடுத்து உதவியிருக்கிறார்
கடைசிய எனக்கு பிடித்தது அவரது ஸ்டைல்...
அவரது எளிமை , அவரது ஸ்டைல் வேகம் உதவும் உள்ளம். யாருக்கும் தீங்கு நினைக்காத மனசு இதெல்லாம் அவரிடம் எனக்கு பிடித்த விஷயங்கள்
உண்மைதான் . எனக்கும் மிகவும் அவரை பிடிக்க காரணம் அவரது குணங்களும் , நடிப்பும் தான் . நன்றி சௌந்தர்
நன்றி சரவணன்
Post a Comment