Saturday, December 31, 2011

2011 இல் எனக்கு பிடித்த படங்கள்



இந்த வருடம் முடிந்து அடுத்த வருடம் பிறக்கப் போகிறது . இந்த வருடம் எப்படி தமிழ் சினிமாவுக்கு அமைந்தது . தோல்விப்படங்கள் நிறையவே வெளிவந்தது . மிகவும் எதிர்பார்த்து போகும் படங்கள் ஊத்திக் கொண்டன . எதிர்பாராமல் போன படங்கள் வெற்றி அடைந்தன .
http://the70mm.com/wp-content/uploads/2011/10/Vaagai-Sooda-Vaa-photos-_4_.jpg
அந்த வரிசையில் எனக்கு யதார்த்தமான படங்கள் வரிசையில் தென்மேற்கு பருவக்காற்று , வாகை சூடவா படங்கள் எனக்கு பிடித்து இருந்தன . யதார்த்தமான , எல்லோரும் பார்க்க கூடிய வகையில் அமைந்தன இப்படங்கள் .
http://kollywoodz.com/wp-content/uploads/2011/05/Mankatha-promotion-starts.jpg
அஜித்தின் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா படமும் எனக்கு பிடித்து இருந்தது . அஜித், அர்ஜுன் ஆகியோரின் நடிப்பு பிளஸ். வெங்கட்பிரபுவின் தொய்வில்லாத திரைக்கதை . வித்தியாசமான கதைக்களம், வில்லத்தனமான அஜித்தின் நடிப்பும் எல்லோரையும் கவர்ந்தது . பாடல்களும் நன்றாக இருந்தது . 
http://2.bp.blogspot.com/-4y4nY2R_PlM/TlfdjwuZUiI/AAAAAAAAALA/mnKPh5Fm43M/s1600/7am-arivu-stills+_5_.jpg
ஏழாம் அறிவு படம் சூர்யாவின் படங்களில் இன்னொரு மைல்கல் . சூர்யாவின் அபரிதமான நடிப்பும் , வித்தியாசமான கதைகரு , களம் , ஸ்ருதியின் அழகு , மற்றையது படத்தின் பாடல்கள் . இவை எல்லாம் என்னை கவர்ந்தது . பிடித்தும் இருந்தது . சூர்யாவையும் எனக்கு இன்னும் இன்னும் பிடித்தது .
http://i3.squidoocdn.com/resize/squidoo_images/590/draft_lens16054151module149505193photo_1302630435ko_still_Jeeva_Karthika_N
ஜீவாவின் நடிப்பில் வெளிவந்த படம் கோ . கார்த்திகா ஜோடியாக நடித்து இருந்தார் . பத்திரிகையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனையை மையமாக கொண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் . ஜீவா எல்லோரினதும் மனங்களை கொள்ளை கொண்டார் இந்த படத்தின் மூலம் . 
http://www.cinejosh.com/gallereys/movies/normal/engeyum_eppothum_movie_stills_1008110415/engeyum_eppothum_movie_stills_1008110415_029.jpg
எங்கேயும் எப்போதும் படம் எதிர்பாராது வந்து ஓகோ ஓகோ என நூறு நாளை தாண்டி ஓடிய படம் . ஜெய் , அஞ்சலி ஆகியோருக்கு ஒரு வெற்றி படமாக அமைந்த படம் . வாகன விபத்துகள் இப்போது அதிகம் இடம்பெறுகின்றன . இந்த வாகன விபத்தை வித்தியாசமான கதையம்சத்துடன் , வித்தியாசமாக கதை சொன்ன விதமும் எல்லோருக்கும் பிடித்திருந்தது . படமும் வெற்றி படமாக அமைந்தது .
http://filmreviews.bizhat.com/wp-content/uploads/2011/01/Shanthanam-and-Karthik-in-Shiruththai-Tamil-Movie-Photo.jpg
கார்த்தி நடித்து சந்தானத்தின் காமெடியில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் சிறுத்தை . கார்த்தியின் வெற்றி படங்களில் இதுவும் ஒன்று . தமன்னா ஜோடியாக நடித்து இருந்தார் . இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார் கார்த்தி . படம் சக்கை போடு போட்டது . விறு விறுப்பான திரைக்கதை . பாடல்களும் சூப்பர் ஹிட் . 
http://3.bp.blogspot.com/_gIgEwdd1VXA/TOriP_kDG4I/AAAAAAAAEfQ/CdwSaXT4jfc/s1600/venkai4.jpg
 தனுஷ்  நடிப்பில் வெளிவந்தது வேங்கை. பாடல்கள் எல்லாம் பிடித்து இருந்தது . படம் ஓகோ என்று சொல்லா விட்டாலும் படம் பார்க்கலாம் .  பாடல்கள் சூப்பர் ஹிட் . படம் எனக்கு பிடித்து இருந்தது . பல படங்களின் சாயல் தெரிந்தது .
 http://im.sify.com/sifycmsimg/apr2011/Entertainment/Movies/Tamil/14968572_simbu340.jpg
சிம்பு , பரத் , அனுஷ்கா நடித்து இருந்தனர் வானம் படத்தில் . வித்தியாசமான கதையம்சம் . சூப்பர் ஹிட் பாடல்கள் . இந்த படமும் பார்க்கலாம் .
http://vikram.bizhat.com/wp-content/uploads/2011/07/Deiva-Thirumagal.jpg
விக்ரம், அனுஷ்கா நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் தெய்வத்திருமகள் . இந்த படம் விக்ரமின் வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்தது . அனுஷ்காவுக்கு நல்ல நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது . விக்ரமின் சிறப்பான மனம்குன்றிய கேரக்டரில் நடித்து இருந்தார் . பாடல்களும் சிறப்பாக இருந்தது . 
http://stillgalaxy.com/images/public/06-24-2011/velayutham/kollywood-movie-velayutham-photos-6.jpg
விஜய், ஜெனிலியா , ஹன்சிகா நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் வேலாயுதம் . மசாலாப் படம் . பாடல்கள் சிறப்பாக அமைந்தன . விஜய் நீங்க நாட்களுக்குப் பிறகு வித்தியாசமான ஒரு பாத்திரம் ஏற்று , அண்ணன் , தங்கை பாசத்தையும் கலந்து கட்டி வெற்றி பட வரிசையில் இணைந்த படம் வேலாயுதம் . 

இன்னும் பல படங்கள் விடுபட்டு இருக்கலாம் எனது நினைவுகளில் இருந்து . இப்போதைக்கு என் மனதில் நின்ற படங்கள் இவை .இப்படி இந்த வருடம் பறுவாயில்லை என்று அமைந்தது . இனி அடுத்த வருடம் பல முன்னணி நடிகர்களின் பல வெற்றி படங்கள் வெளிவர இருக்கின்றன . பார்ப்போம் எப்படி அமைகிறது தமிழ் சினிமாவின் போக்கு என்று .

No comments: