Saturday, January 14, 2012

கரும்பின் மகிமை

 http://flashnewstoday.com/wp-content/uploads/2010/07/sugarcane1.jpg

பொங்கலுக்கு முக்கிய பங்கு வகிப்பதில் கரும்புக்கும் முக்கியத்துவம் உண்டு . பொங்கலுக்கு இனிப்பாக எல்லாம் செய்து சாப்பிடுகிறோம் . அதுபோல் கரும்பும் இனிப்பானது தான் . மங்கலத்தின் அடையாளம் . எல்லோரும் பொங்கல் பொங்கும் போது நான்கு பக்கமும் கரும்பு நட்டு இருப்பார்கள் .
http://www.cleanandgreenfuel.com/cleanandgreenfuel/data/images/Sugar%20Cana_CGF.jpg?0.5183297752704685
தை மாதம் தொடக்கி விட்டால் எப்போது பொங்கல் வரும் என்று காத்து இருப்போம் . கரும்பு நீண்டு பெரிய தடி போல் உயர்ந்து காணப்படும் . கரும்பை அடி முதல் நுனி வரை சுவைக்கலாம் . இனிப்பாக சுவையாக இருக்கும் . 
http://1.bp.blogspot.com/_bQekxSdgAO0/TEag9dbL4OI/AAAAAAAAAAM/xvre6Yg7l78/s1600/bigstockphoto_Tropical_Raw_Sugar_Cane_1785700-720055.jpg
நுனிக்கரும்பு உப்புச்சுவை  உடையது .அடிக்கரும்பு தித்திப்பாய் இருக்கும் . கரும்பு உழைப்பின் அருமையை நமக்கு எல்லோருக்கும் உணர்த்துகிறது . வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும் அதன் முடிவில் கரும்பு போல் இனிமையான வாழ்க்கை கிடைக்கும் . 

இளமையில் கஷ்டப்பட்டு உழைத்தால் முதுமையில் சிரமமில்லாமல் இனிமையான வாழ்க்கை அமையும் . இவ்வுண்மையை உணர்ந்து கரும்பை நாம் எல்லோரும் சுவைக்க வேண்டும் . வாழ்வின் தார்ப்பரியத்தை நாம் கரும்பில் இருந்து தெரிந்து கொள்ளலாம் . 
http://alcademics.typepad.com/.a/6a00e553b3da20883401287685cb8e970c-500wi
கரும்பின் மேற்பரப்பில் எத்தனையோ வளைவுகளும் , முடிச்சுகளும் இருக்கும் . ஆனால், அவற்றை எல்லாம் அகற்றி உள்ளே இனிப்பான சாறு இருக்கிறது . பொங்கல் பண்டிகைகளில் தமிழர்கள் எல்லோரும் கரும்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் . 
http://www.examiner.com/images/blog/EXID6753/images/sugar_cane_juice_flickr_Clemson.jpg
மங்கலகரமாக இருக்க கரும்புகளை பொங்கலுக்கு வைத்து அழகுபடுத்தி பார்க்கிறோம் . அதோடு இன்னொரு விடயம் என்னவென்றால் குண்டான உடலைக் கூட இளைக்க செய்யும் மகிமை இந்த கரும்புக்கு இருக்கிறது . இரசாயனங்கள் இல்லை . தேவையற்ற கொழுப்பைக் கரையச் செய்கிறது .இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி , உடலில் சக்தியையும் நமக்கு தருகிறது கரும்பு .
http://www.indianetzone.com/photos_gallery/31/Sugarcane_21985.jpg
எனவே பொங்கலுக்கு கரும்பை பாவித்து அதன் பயனை பெறுங்கள் . 

 


 

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

கரும்பாய் ருசிக்கும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

புஷ்பராகமாய் இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.
http://blogintamil.blogspot.in/2013/01/blog-post_16.html

Anonymous said...

வணக்கம்

இன்று உங்களின் பதிவு வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் கரும்பை பார்த்தவுடன் ருசிக்கத்தான் சொல்லுது அருமையான படைப்பு நேரம் மின்சாரம் கிடைக்கும் போது நம்ம பக்கமும் வாருங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-