Friday, January 8, 2010

நீங்கள் எப்படிப்பட்டவர்கள் ?


மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி . அதாவது குணத்தில் , நிறத்தில் என மாறுபட்டு காணப்படுவார்கள் . எனினும் ஐந்தறிவு படைத்த விலங்குகள் , பிராணிகளிடம் நாம் கற்று கொள்ள வேண்டிய விடயங்கள் பல உண்டு .

அப்படி அவை நம்மில் அந்த நற்பண்புகள் இருப்பின் நாம் உயர்ந்தவர்கள் . நாம் உயர்ந்தவர்களா , தாழ்ந்தவர்களா என்பது நம் ஒவ்வொருவரின் பண்புகள் தான் தீர்மானிக்கின்றன .

 
எறும்பிடம் நாம் கற்று கொள்ள வேண்டியது நல்ல ஒழுக்கம் . ஒன்று ஒரு புறம் போனால் மற்றையதும் அதே நேர்வழியில் செல்லும் . ஒழுக்கத்தை எமக்கு கற்றுத்தருகின்றன .

எருதிடம் நாம் கடின உழைப்பை கற்று கொள்ளலாம் . நாமும் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் . நாம் நல்லாக இருக்கவேண்டும் . நாம் கடினமாக கஷ்டப்பட்டு உழைத்தால் முன்னேற முடியும் .




சிலந்தியிடம் நாம் விடாமுயர்ச்சியை  கற்று கொள்ள வேண்டும் . ஒருமுறை தேர்வில் தேர்ச்சி அடையவில்லை என்று நாம் சோர்ந்து துவண்டு விடக்கூடாது . நான் அடுத்த தேர்வில் நன்றாக படித்து தேர்வில் வெற்றி அடைவேன் என தொடந்து விடாமுயர்ச்சியுடன் ஈடு பட்டோம் என்றால் வெற்றி தான் .


தேனியிடம் கூட்டுறவை கற்று கொள்ள வேண்டும் . அதாவது கூட்டு மனப்பான்மை . ஒரு கம்பனியில் வேலைக்கு சென்றால் நாம் எல்லோரிடமும் கதைத்து பேசி ஒற்றுமையாக இருந்து கூட்டு மனப்பான்மையுடன் செயற்பட வேண்டும் . சண்டை சச்சரவுகள் இன்றி இருக்க வேண்டும் .


நாய் நன்றி உள்ள மிருகம் . அதுபோல் நாமும் ஏதாவது ஒருவரிடம் ஏதாவது பெற்று கொண்டாலோ , எங்களுக்கு அவர்கள் ஏதாவது செய்தாலோ அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் . நன்றி மறப்பது நன்றன்று .

 
புலி துணிச்சலானது . அதுபோல் நாம் எதை கண்டாலும் பயப்படாது துணிச்சலுடன் செயற்பட வேண்டும் . 
யானை விவேகமானது . நாமும் சில விடயங்களில் விவேகமாக சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும் . முடிவு எடுத்த பின்பு சிந்தித்து பயன் ஏதும் இல்லை . எனவே முதலே விவேகத்துடன் சிந்தித்து முடிவு எடுக்க பழகி கொள்வது நல்லது .


குதிரையிடம் வேகத்தை கற்று கொள்ள வேண்டும் . ஏதாவது வேலையை கொடுத்தால் வேகமாக அந்த வேலையை செய்து கொடுக்க வேண்டும் . சோம்பேறியாக இருந்து வேலையை இழுத்து அடிக்க கூடாது . எதிலும் வேகத்துடனும் துடிப்புடனும் செயற்பட்டு வந்தால் நாம் வேலை செய்யும் இடங்களில் நல்ல பெயரை வாங்கலாம் .


மானிடம் சுத்தத்தை கற்று கொள்ள வேண்டும் . சுத்தம் தான் சுகம் தரும் . நாங்கள் சுத்தமாக இருந்தால் தான் நல்லது . சுத்தமாக இல்லாது விட்டால் நோய்கள் பல நமக்கு உண்டாகும் . சுத்தமான உடைகளை அணிய வேண்டும் . சுத்தமான தண்ணீரை பருக வேண்டும் .

மயிலிடம் அழகையும் , ஆடலையும் கற்று கொள்ளவேண்டும் . எல்லோரிடமும் அழகு இருக்கிறது . ஒவ்வொரு வரும் ஒவ்வொரு அழகு .

குயிலிடம் இனிமையை கற்று கொள்ள வேண்டும் . எல்லோரிடமும் இனிமையாக பேச வேண்டும் .

நரியிடம் தந்திரத்தை கற்று கொள்ள வேண்டும் . கஷ்டமான நேரத்தில் நாம் தப்பிக்க உதவுவது தந்திரமாக செயற்படுவது தான் . சிலரிடம் தந்திரமாக வேலை வாங்கும் தன்மை இருக்கும் . இந்த வேலையை உன்னை விட வேறு ஒருவரும் நல்லாக செய்ய மாட்டார்கள் . நீதான் நன்றாக செய்வாய் . என்று தந்திரமாக பேசி பாருங்கள் . வேலை உடனே நடக்கும் .

இந்த குணங்கள் உங்களிடம் இருக்கின்றதா ? நல்ல பண்புடன் இருந்து உங்கள் வீட்டுக்கு பெருமை சேருங்கள் .




4 comments:

sathishsangkavi.blogspot.com said...

நல்ல பண்புடன் நடந்து கொண்டால் வீட்டுக்கும் பெருமை, நாட்டிற்கும் பெருமை....

பயனுள்ள பதிவு... ஒவ்வொரு விலங்குகளுக்கு ஒரு பண்பை சொல்லி விளக்கிய விதம் அருமை.... நன்றி பவி....

Pavi said...

நன்றி உங்கள் கருத்துக்கு

வெள்ளிநிலா said...

Dear Pavi, write much and much and you can write well than this in future. wishes

nelpandiyar said...

உபயோகமான பதிவுகள்